Header Ads



பசில் மீதான மற்றுமொரு, பயணத்தடையும் நீக்கம்


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெஸில் ராஜபக்ஸவுக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத் தடையை மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று -07- நீக்கியது.

மாத்தறை ப்ரௌன்ஸ்ஹீலில் உள்ள சுமார் 66 மில்லியன் ரூபா பெறுமதியான தென்னங்காணி கொள்வனவில் நிதிமோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு எதிராக வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டது.

இன்றைய தினம் -07- நகர்த்தல் பத்திரமொன்றை சமர்ப்பித்த முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள், அவருக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனடிப்படையில் விடயங்களை ஆராயந்த நீதிமன்றம், பெசில் ராஜபக்ஸவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு மாத கால வௌிநாட்டு பயணத்தடையை நீக்கி உத்தரவிட்டது.

2 comments:

  1. எல்லாம் நமக்குள்ளேதானே,தீர்ப்பென்ன வானுலகில் இருந்தா இறங்குகிறது?

    ReplyDelete
  2. Shame on judges now a days.... they go left & right of politics, Specially in India & Lanka

    ReplyDelete

Powered by Blogger.