Header Ads



இலங்கையில் ஜனாஸா எரிப்பு, இம்ரான் கானும் கவனத்தை குவிக்கிறார் - இன்று நேரடி பேச்சு


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலாத்காரமாக எரிக்கப்படும் விவகாரத்தில், தனது கவனத்தை குவித்திருப்பதாக அரசியல் மற்றும் ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து Jaffna Muslim இணையத்திற்கு தகவல் கிடைத்தது.

நேற்று வியாழக்கிழமை (24) கொழும்பில் உள்ள ராஜதந்திரிகள் சிலர், இலங்கையில் ஜனாஸா எரிப்பு விவகாரத்தை, ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டு பிரதமருக்கு அறிவித்து விட்டதாக முஸ்லிம் சமூகம் சார்பு பிரதிநிதிகள் சிலரிடம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த ராஜதந்திரிகள், இலங்கையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலாத்காரமாக எரிக்கப்படுவதற்கு எதிராக, தமது ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டுள்ளனர்.

இவற்றுக்கு மேலதிகமாக, செனட்டர் ராஜா ஜாபருல்லா  இம்ரான் கானுடன் இலங்கையில் பலாத்கார ஜனாஸா எரிப்பு பற்றி  இன்று டிசம்பர் (25) நேரடியாக பேச்சு நடத்தவும் உள்ளார். 

இலங்கையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலாத்காரமாக எரிக்கப்படுதல், அதனை தடுத்து நிறுத்த அழுத்தம் பிரயோகித்தல் ஆகிய விடயங்களில், இப்பேச்சு நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது

இந்த தகவலை Jaffna Muslim இணையத்திடம் கொழும்பில்  உள்ள ராஜதந்திர, அரசியல், சமூக வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

2 comments:

Powered by Blogger.