Header Ads



ஜனாசாக்களை அடக்க ஓட்டமாவடி மஜ்மா நகரைத் தெரிவு செய்யுங்கள் - வாகனமும் ஆளணியும் நாம் தருகிறோம்


இஸ்லாமியர்களின் இறந்த உடலங்களை அடக்கம் செய்ய பொருத்தமான இடத்தைத்தேர்வு செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அது உண்மையாக இருக்குமாயின், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மஜ்மா நகர் பிரதேசத்தில் முஸ்லிம் பொது மையவாடிக்காக ஒதுக்கப்பட்ட சுமார் பத்து ஏக்கர் காணி உள்ளது. 

அதில் அடக்கம் செய்வதில் எமது பிரதேச மக்கள் எவருக்கும் எதுவித ஆட்சேபனையுமில்லை. நிலத்தடி நீர் சுமார் 30 அடி ஆழத்தில் உள்ள, குடியிருப்புக்கள் இல்லாத, கொழும்பு-மட்டக்களப்புக்கான பிரதான வீதியிலிருந்து மிக நெருக்கமாகவே இவ்விடம் உள்ளது.  

நிருவாக ரீதியாகவோ அல்லது தனி நபர் குடியிருப்பின் ஊடாகவோ மாற்று சமயத்தவர்கள் சம்பந்தப்படாத குறித்த இடத்தைப் பயன்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். 

அடக்கம் செய்யும் பணிகளில் ஈடுபடுவதற்கு ஆளணி தேவைப்படுமானால், அதற்கும் நாம் தயாராகவுள்ளோம். ஜனாஷாக்களை எடுத்துச்செல்வதற்கான வாகன வசதியும் எம்மிடமுண்டு. 

இலங்கையை நாம் ஆளக்கேட்கவில்லை. இலங்கையில் வாழவும், இலங்கை பிரஜையாக வாழ்ந்து மாழ்ந்த பின்னர் எமது சமய முறைப்படி அடக்கம் செய்யவுமே அனுமதி கேட்கிறோம்.

5 comments:

  1. ஜஸாக்கல்லாஹு கைரன் சகோதரா. அல்லாஹ் உங்களுக்கும் இந்த நற்காரியத்தில் இணைந்து கொள்ளும் அனைவருக்கும் பேரரளும் பெருங்கிருபையும் செய்வானாக என்று என் உளமாறப் பிரார்த்தனை செய்கிறேன்.

    ReplyDelete
  2. ஜஸாக்கல்லாஹு கைரன் சகோதரா. அல்லாஹ் உங்களுக்கும் இந்த நற்காரியத்தில் இணைந்து கொள்ளும் அனைவருக்கும் பேரரளும் பெருங்கிருபையும் செய்வானாக என்று என் உளமாறப் பிரார்த்தனை செய்கிறேன்.

    ReplyDelete
  3. ஜஸாக்கல்லாஹு கைரன் சகோதரா. அல்லாஹ் உங்களுக்கும் இந்த நற்காரியத்தில் இணைந்து கொள்ளும் அனைவருக்கும் பேரரளும் பெருங்கிருபையும் செய்வானாக என்று என் உளமாறப் பிரார்த்தனை செய்கிறேன்.

    ReplyDelete
  4. உங்கள் துய்மையான நோக்கத்தை அல்லாஹ் கபூல் செய்வானாக, உங்களுக்கும் உங்களைச் சார்ந்து இநத தூய பணியில் ஒத்து ழைக்க வரும்அத்தனை பேருடைய பாவங்களையும் மன்னித்து அல்லாஹ் அனைவரினதும் செயலைக் கபூல செய்வானாக. ஆமீன்.

    ReplyDelete
  5. Hats of to u dear brother

    ReplyDelete

Powered by Blogger.