Header Ads



அக்கரைப்பற்றிலிருந்து வெளியேற பலரும், முயற்சிப்பது மிக அபாயகரமானது – இராணுவத் தளபதி


 (எம்.மனோசித்ரா)

கொவிட் -19 பரவல் அச்சுறுத்தல் காரணமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சில பகுதிகள் இன்று (17) வியாழக்கிழமை காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

தனிமைப்படுத்துதற்ககான எதிர்பார்ப்புக்கு காரணம் அந்த பிரதேசங்களிலிருந்து வேறு பகுதிகளுக்கு தொற்று பரவக் கூடாது என்பதற்காகவே ஆனால் தனிமைப்படுத்தல் அறிவிக்கப்பட்டவுடன் அங்கிருந்து வெளியேறுவதற்கே பலரும் முயற்சிக்கின்றனர். இவ்வாறு வெளியேறுவது மிகுந்த அபாயமானதாகும் என்றும் இராணுவத்தளபதி சுட்டிக்காட்டினார்.

அக்கரைப்பற்றில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் அக்கரைப்பற்று 5 , அக்கரைப்பற்று 14 மற்றும் நகர எல்லைப் பகுதிகள் 3 என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை அட்டாளைச்சேனை பொலிஸ் பிரிவில் பாலமுனை 1, ஒலுவில் 2 மற்றும் அட்டாளைச்சேனை 8 ஆகினய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.  ஆலை யடிவேம்பு பொலிஸ் பிரிவில் ஆலையடிவேம்பு 1, 8 மற்றும் 9 ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் மொனராகலை மாவட்டத்தில் அலுபொத கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

இது இவ்வாறிருக்க, கல்முனையில் மேலும் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பபட்டுள்ளன.

கல்முனைக்குடி பிரதேசம் உட்பட கல்முனை ஸாஹிராக் கல்லூரி வீதி தொடக்கம் ரெஸ்ட் ஹவுஸ் வீதி வரையான அனைத்து பிரதேசங்களும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) நள்ளிரவு வரை தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.

கல்முனை மாநகர சபையில் மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற கொவிட் தடுப்பு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை செய்லான் வீதி தொடக்கம் மாதவன் வீதி வரையான பிரதேசங்கள் இன்று (17) காலை 6.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்பேரில் அதனை மேலும் விஸ்தரித்து கொவிட் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. அட்டுழுகம அடுத்தது அக்கரைப்பற்று.

    ReplyDelete
  2. The real situation:

    Whole Akkaraipattu, Addalaichenai and Alayadivembu (Akkaraipattu police division) were locked down on 26th of November and most of the areas were released from lock down on 17th of December. Lock down in few areas in the said towns is being continued. Onset of lock down on 26th of November was not officially informed by the government, but suddenly, continuation of lock down in certain areas was officially informed and appears in all medias. Either RDHS and PD have purposely mislead the people of Akkaraipattu and the government or there had been a miscommunication between them and the government. When the lock down was initiated on 26th of November some may have tried to flee the area, but definitely not now as lock down has been released in 70% of the area and most of the shops are open. This clearly shows the intention of the government to highlight muslim areas

    ReplyDelete

Powered by Blogger.