December 06, 2020

ஜனாஸா எரிப்பு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், மல்கம் ரஞ்சித்தும் இரட்டை வேடம் போடுகிறார்களா..??

(சர்ஜுன் லாபீர்)

மரணித்த உடல்களை நல்லடக்கம் செய்யவேண்டும் என்பது இஸ்லாமிய, கத்தோலிக்க மக்களின் கட்டாய மார்க்க கடமையாகும். கொரோனா தொற்று ஏற்பட்ட பின்பு மரணித்த உடல்களை அடக்கம் செய்வதற்கு பதிலாக எரிப்பதற்கு அரசு தீர்மானித்த போது. பாராளுமன்றத்தில் உள்ள சகல முஸ்லிம் கட்சிகளின் எம்பிக்களும், தலைவர்களும், போர்க்கொடி தூக்கினார்கள். இதற்காக அரசின் உயர்மட்டத்தை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்ய முயன்றனர். போதாக்குறைக்கு வெளிநாட்டு தூதுவர்கள் இராஜதந்திரிகளை சந்தித்து முறையிட்டார்கள். 

அதே நேரம் இதே மதக்கடமையை செய்யவேண்டிய இன்னுமொரு சமூகமான கிறிஸ்தவ, கத்தோலிக்க சமூகம் திட்டமிட்டே மௌனிக்க செய்யப்பட்டது. இலங்கையில் கத்தோலிக்க, கிறிஸ்தவ சமூகத்தில் இரண்டு குழுக்கள் இருக்கின்றது. 

1. சிங்கள கிறிஸ்தவ சமூகம் 

2. தமிழ் கிறிஸ்தவ சமூகம் 

அதில் சிங்கள கிறிஸ்தவ சமூகத்தை வழிநடத்தும் பிரதானியாக கார்த்தினால் மால்கம் ரஞ்சித் ஆண்டகை இருக்கிறார். இந்த ஜனாஸா எரிப்பு விவகாரம் வந்தவுடன் சஹ்ரானின் குண்டுவெடிப்பு காரணத்தை கொண்டு முஸ்லிங்கள் மீது இருந்த கோபத்தை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி "தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை முஸ்லிங்களுக்கு இரண்டு கண்களும் போக வேண்டும்" என்ற அடிப்படையில் ஜனாதிபதி கோத்தாபாயவை சந்தித்து கடும் நிபந்தனையாக அடக்க அனுமதிக்க கூடாது என்ற நிபந்தனையை முன்வைத்திருந்தது நாடறிந்த ரகசியமாக உள்ளது. 

இதில் உள்ள முக்கிய விடயம் என்னவென்றால் வடக்கு, கிழக்கில் உள்ள லட்சக்கணக்கான தமிழ் கிறிஸ்தவ சமூகத்தை தலைமையேற்று வழிநடாத்தும் அவர்களின் பிரதிநிதியாக உள்ளவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர். இதன் பின்னணியில் உள்ள மர்மத்தை நாங்கள் ஆராய்ந்து தெளிவுபடுத்தவேண்டிய கடமை எமக்கு இருக்கிறது. ஏனென்றால் தமிழ் கிறிஸ்தவ சமூக அடிப்படை உரிமையை அரசு மறுத்த போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அதட்க்கு எதிராக போராடாமல் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் வழக்குகள் கூட தாக்கல் செய்யாமல் மௌனமாக இருந்தது. இது ஏன் என்று புலனாய்வு செய்த போதே பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின. 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தரான  சுமந்திரன் என அறியப்படும் மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் ஒரு கிறிஸ்தவர். மற்றும் சாணக்கியன் 2015 இல் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டவர். அதனால் இவருக்கு இப்போதைய அரசுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. என்பதை எல்லோரும் அறிவர். இவர்கள் இருவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இருந்த நெருங்கிய உறவின் காரணமாகவே இந்த விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இறந்த உடல்களை நல்லடக்கம் செய்கின்ற விவகாரத்தில் வெளிப்படையாக எதையும் பேசாமல், போராடாமல் இவ்விவகாரத்தை லாபகரமாக அரசு கையாண்டு மௌனிக்க செய்யப்பட்டார்கள். இதற்கான பிரதியுபகாரமாக சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பும் வழங்கி வேறுபல சலுகைகளும் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. அண்மையில் கூட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் முஸ்லிங்கள் உச்சநீதிமன்றில் தாக்கல் செய்திருந்த வழக்குக்கு சட்டத்தரணியாக ஆஜரானாரே தவிர அவரின் சமூகத்தின் சார்பில் எவ்வித வழக்கு தாக்கல்களையும் செய்ய முன்வரவில்லை. என்பதை நாம் இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டும். 

மேலும் பாராளுமன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களாக உள்ள இரா. சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், போன்றோர் இந்த நாட்டில் வாழும் தமிழ் கிறிஸ்தவ கத்தோலிக்க மக்களின் இறுதி மதக்கடமையான உடல்களை நல்லடக்கம் செய்ய இந்த அரசு மறுக்கிறது. இந்த உரிமையை தமிழ் கிறிஸ்தவ கத்தோலிக்க மக்களுக்கும் மேலும் முஸ்லிங்களுக்கும் வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கவில்லை. 

இறந்த உடல்களை எரிக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுக்கு எதிராக முஸ்லிம் எம்.பிக்களை போன்று குரல் கொடுத்திருந்தால் அல்லது கடும் தொனியில் போராடியிருந்தால் அதனால் அரசுக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கும். ஏனென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சர்வதேச அரங்கில் பாரியளவிலான செல்வாக்கு இருக்கிறது. அதிலும் குறிப்பாக அண்மைய நாட்டின் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியிடம் செல்வாக்கு மிக்கவர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இருக்கிறார்கள். எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை வாழ்  தமிழ் கிறிஸ்தவ சமூக உரிமை பறிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீ நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தால் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் வழங்கியிருப்பார். இவைகளெல்லாம் நடக்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுக்கு மறைமுக உதவிகளை செய்கின்றது. 

இந்த ரகசிய உறவின் வெளிப்பாடாக ஒரு கட்டத்தில் அரசினால் மரணித்த கொரோனா தொற்று உடல்களை மன்னாரில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்ட  போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் அங்கு அடக்கம் செய்யக்கூடாது என எதிராக வலுவாக குரல்கொடுத்தனர். அதே நேரம் அரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இருக்கும் உறவுக்கு வெளிப்பாடாக 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்ட வாக்கெடுப்பில் அரசை எதிர்க்காமல் விட்டதுடன் பாதுகாப்பு அமைச்சின் வாக்கெடுப்பிலும் டெலோவின் மூன்று எம்.பிக்கள் மாத்திரமே எதிர்த்து வாக்களித்தனர்.  தவிர ஏனையோர் ? 

இலங்கை அரசியலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லிங்களுக்கு எதிரான சிங்கள பேரினவாத கடும்போக்கு எதிர்ப்பு அரசியலில் முஸ்லிம் சமூகத்திற்கும் தெற்கு சிங்கள சமூகத்திற்கும் இடையில் கடும் விரிசல் வரவேண்டும் என்பவற்றை உள்ளீடாக விரும்புகிறது. இதனாலயே முஸ்லிங்களுக்கு எதிரான அரசின்  நடவடிக்கைகளுக்கு மௌனமாக இருந்து தமிழ் கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவு வழங்குகிறது. இதே நேரம் கிழக்கு பூகோள அரசியலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நீண்டகால தேவையாக இருந்துவரும் கல்முனை, வாழைச்சேனை, மூதூர், விவகாரங்களை நிறைவேற்றும் திட்டங்களை முஸ்லிம்- சிங்கள இடைவெளியில் குளிர்காய்ந்து சாதிக்க முயன்று வருகிறார்கள். 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களான சார்ள்ஸ், சாணக்கியன் போன்றோர்கள் இரு வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு பிரேரணையை கொண்டுவந்து கல்முனை பிரதேச செயலக விவகாரத்தில் காய் நகர்த்தி கல்முனை மாநகரை அபகரிக்க முயன்றதை  நாமெல்லோரும் தெளிவாக திறந்தவெளியில் அறிந்துள்ளோம். அங்கு எமக்கு எதிராக செயற்பட்ட அதே சாணக்கியன் எம்.பி நேற்று பாராளுமன்றத்தில் முஸ்லிம் ஜனாஸா எரிப்புக்கு எதிராக குரல்கொடுக்கிறார். நாங்களும் அதற்காக அவரை பாராட்டுகிறோம். இருந்தாலும் இந்த சாணக்கியன் எம்.பி தான் பிரதிநித்தித்துவப்படுத்தும் தமிழ் கிறிஸ்தவ கத்தோலிக்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை எந்த இடத்திலும் பேசவில்லை. அதில் ஒரு சூழ்ச்சி இருப்பது தெளிவாக உணரமுடிகின்றது. 

உண்மையில் முஸ்லிங்கள் போராடுவது போன்று அவர் தன்னுடைய கட்சிகாரர்களை போராடவைத்து கொரோனா தொற்றுக்கு இலக்கான உடல்களை அடக்கம் செய்ய இரு சமூகங்களையும் ஒன்றிணைத்து குரல்கொடுக்க முனைந்திருந்தால் இரு சமூகங்களும் இவ்விடயத்தில் வெற்றிபெற்றிருக்கும். எனவே தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரட்டை முகத்தையும், சந்தர்ப்பவாத காய் நகர்த்தல்களையும்  முஸ்லிம் சமூகமும் எமது இளைஞர்களும், புத்திஜீவிகளும் பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

7 கருத்துரைகள்:

கற்பனை பிரமாதம் வீரவன்ச தோற்று விடுவார்.தமிழர்களுக்காக நாம் எதனைச்செய்து கிழித்து விட்டு அவர்கள் எங்களுடன் போராட வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது. பற்றிய வீட்டில் பிடுங்கியது இலாபம் என்று கிடைத்ததை எண்ணி சந்தோஷப்பட வேண்டியதுதான். இதனை ஆரம்பமாகக் கொண்டு எதிர்காலத்தில் சிறுபான்மையினர் ஒற்றுமையாகப் போராட வழி அமைக்க வேண்டியதுதான்.

சாணக்கியனின் பாராளுமன்ற பேச்சு இந்த கட்டுரையாளருக்கு ரொம்ப கவலையை ஏற்படுத்திவிட்டது போல ஈனவும் மாட்டாங்க நக்கவும் மாட்டாங்க என்ற மாதிரி கட்டுரை... இந்த யோசனை இவ்வளவு நாளும் எங்க போச்சுது ...

பேராயர் மல்கம் ரஞ்சித் ஜனாதிபதியுடன் இரகசியம் பேசினாரா? நிரூபிக்க முடியுமா? ஏண்டா எதிரிகளைக் கூட்டிக்கொள்கிறீர்கள்.நமக்காக பேசக்கூடியவர்களை பாராட்டத் தெரியாத இனவாதிகள் உங்களைப் போன்றவர்கள்தான்.பேராயர் ரஞ்சித் மல்கம் அவர்கள் கோயில்களில் தற்கொலைத் தாக்குதலின்போது முஸ்லீம்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டிருந்தால் தெற்குப்பகுதியில் மஸ்ஜித்கள் மிஞ்சி இருக்குமா?முஸ்லீம்கள் இலங்கையில் வாழ முடியாத சூழல் பேரினவாதிகளால் ஏற்படுத்தப் பட்டிருக்கும்.

மிக மோசமான முஸ்லிம்களை தனிமைபடுத்தும் விவாதம். 1970 பதுகளில் முஸ்லிம்கள் புத்தளத்திலும் பிற இடங்களிலும் தாக்கபட்டபோது முஸ்லிம் தலைமை பேடித்து வாயடைத்து நின்றது. அப்ப செல்வயாயகம் அவர்களும் தமிழரசுக்கட்ச்சியும்தான் பாராளுமன்றத்தில் போராடியது. அதையும் கொன்ஸ்பிரசி தியறி தத்துவர் சர்ஜூன் லாபீர் தமிழரின் சதி என்றுதான் கூறுவாரா? கல்முனை வடக்கு விட்டுக்கொடுப்புகளோடு வென்றெடுப்பது தமிழரின் உரிமைப் பிரச்சினையாகும். ஜனாசாக்கள் எரிப்பு ஆதரவு தரவேண்டிய சக தமிழ்பேசும் முஸ்லிம்களின் பிரச்சினை. கிறிஸ்துவர்கள் மத கலாச்சார உணர்வு லிபரலானது. அவர்கள் பெரும்தொற்று தருணத்தில் பொது நடைமுறையோடு இணங்கிப்போவது அவர்கள் இஸ்ட்டம். ஆனால் முஸ்லிம்கள் மதக் கலாச்சாரம் எரிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்காக அவர்கள் போஒராடுவது அவர்கள் உரிமை. மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோபத்தோடு இருக்கிறார். ஆனால் தமிழ் தலைமை குரல்கொடுப்பதை சந்தேகிப்பது கவலையாக இருக்கு. கல்முனைவடக்கு தமிழ் பிரிவு தரமுயர்த்துவது தொடர்பாக பிரச்சினை தீர்வுதிட்டம் உருவாகிவருவதால் காலம்தாழ்த்தாமல் முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் விட்டுகொடுப்புகள் பற்றி இருதரப்பும் பேசி பொதுமுடிவுக்கு வருவதே சிறந்ததாகும்.

Athu sari eluttaalare..... Any action from our own muslim MPs?????
They wated for 20+ and they sleep now... what you think about this?

கட்டுரையாளர் சர்ஜூன் லாபிர்க்கு சாணக்கியன் பேசியதை விட அவர் சார்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அசிங்கப் பட்டதைதான் தாங்க முடியவில்லை. அதனால் தான் உருண்டு புரண்டு கதறிக்கிட்டு இருக்கிறார் இல்லாத பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு. நிச்சயமான ஆதாரம் எதுவும் இல்லாமல் ஊகமாக வாந்தி எடுத்து இருக்கிறார். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சியாளர்களுக்கு பல்லுப் படாமல் சேவை செய்தால், கட்டுரையாளர் அந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாக்கில் உள்ள ஈரம் படாமல் சேவை செய்து இருக்கிறார். வாழ்க உங்கள் சேவை..!

Ada pongappa.... itha eluthinanvanukku (0) knowldge..Epdiyo..ivar saarntha Eruma MPs conj kushi avvalavuthaan...but...shame on u

Post a comment