Header Ads



ஜனாஸாக்களை எடுத்து மீள, அடக்கம் செய்யும் நிலை


(மாளிகா அஸ்ஹர்)

கடைசிக்கட்ட முயற்சிகளும் கைகூடாத நிலையில் கடலுக்குள் கவிழ்ந்தது மாளிகைக்காடு மையவாடிச் சுவர்.  இதனால் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட பல ஜனாஸாக்கள் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டதையடுத்து அவற்றை தேடியெடுத்து மீள அடக்கம் செய்யும் நடவடிக்கையில் பொதுமக்கள் இரவு பகல் பாராமல் அதீத கரிசனை செலுத்தி வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் அனைத்தும் கடலரிப்புக்குள்ளாகிவரும் நிலையில் மாளிகைக்காடு கிராமத்தின் கடற்கரையை அண்டிய பகுதியில் அமையப்பெற்றுள்ள மையவாடியின் கிழக்குப்புற எல்லைச்சுவர் பாரிய கடலலைகளின் தாக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் முழுமையாக உடைந்து சேதமடைந்துள்ளது.

இதனால் சுவரை அண்டிய பகுதிகளில் அடக்கம் செய்யப்பட்டிருந்த பல ஜனாஸாக்கள் கடலலைகளால் தோண்டியெடுக்கப்பட்டு வருகின்றது.

இம்மையவாடியின் சுவர்களை பாதுகாப்பதற்காக தற்காலிகமாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்த போதிலும் கடைசிக் கட்டத்தில் அவை எதுவும் பயனளிக்கவில்லையென பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

5 comments:

  1. மளிகை காட்டு மையவடி மூலம் எம் சமூகத்துக்கு அல்லாஹ் கட்டிய ஒரு அற்புத பாடமும் ஒரு தற்காலிக தீர்வும்...
    கொரோனா மரணங்கள் தொடர்பாக...
    இந்த அரசாங்கம் தடை செய்த ஜனாஸா அடக்கம் சம்பந்தமாக எமது பார்வை..
    எம் முன்னோர் புனித ஹஜ் கடமைக்காக கப்பலில் பயணம் செய்யும் போது மரணம் ஏற்பட்டால் அந்த கனடாவை கடலில் அடக்கம் செய்வார்கள். மேலும் தபோதய பிரச்சினை குறித்து நாம் ஒரு தீர்வாக..
    கொரோன மரணங்களின் ஜனசக்களை கடலில் அடக்கம் செய்வது குறித்து ஆலோசனை செய்வது ஒரு பெரிய சமூக கவலைக்கான தீர்வாக அமையும்.
    அல்லாஹ் போதுமானவன்.

    ReplyDelete
  2. தம்பி தும்பி எம்பீ யாராவது வாங்கப்பா. போட்டோ பிடிச்சி பேட்டி கொடுத்து பேஸ் புக் ல போடுவோம்

    ReplyDelete
  3. அம்பாறை மாளிகைக்காடு பொது மக்களுக்கு என் தலைமையான வேண்டுகோல்,உங்களால் முடிந்த வரை எல்லோரும் இதை புனர் நிர்மாணம் செய்ய பண உதவி செய்யுங்கள்.செல்வந்தர்கள்,புத்தி ஜீவிகள்,இளைஞர்கள்,உங்கள் ஊரை உண்மையாக நேசிப்பர்வர்கள் பைத்துல் மால் மற்றும் கூட்டு ஸதகாவை கொண்டு!இனியும் எந்த அரசியில் வாதியையும் நம்பாதீர்கள்!அடுத்து வரும் மாகாண சபை தேர்தலில் ஓட்டு கேட்டு வரும் அரசியல் வாதிகளிடம் உங்கள் பெண்கள் பாவித்த பழைய புடவையை கையிலே கொடுங்கள் அணிய சொல்லி."ஒன்று பட்டால் உண்டு வாழ்வு "

    ReplyDelete
  4. அம்பாறை மாளிகைக்காடு பொது மக்களுக்கு என் தலைமையான வேண்டுகோல்,உங்களால் முடிந்த வரை எல்லோரும் இதை புனர் நிர்மாணம் செய்ய பண உதவி செய்யுங்கள்.செல்வந்தர்கள்,புத்தி ஜீவிகள்,இளைஞர்கள்,உங்கள் ஊரை உண்மையாக நேசிப்பர்வர்கள் பைத்துல் மால் மற்றும் கூட்டு ஸதகாவை கொண்டு!இனியும் எந்த அரசியில் வாதியையும் நம்பாதீர்கள்!அடுத்து வரும் மாகாண சபை தேர்தலில் ஓட்டு கேட்டு வரும் அரசியல் வாதிகளிடம் உங்கள் பெண்கள் பாவித்த பழைய புடவையை கையிலே கொடுங்கள் அணிய சொல்லி."ஒன்று பட்டால் உண்டு வாழ்வு "

    ReplyDelete
  5. பழைய படையையும் கொடுக்க மாட்டோம் அதையும் மொத்தமாக ஒன்று சேர்த்து கொழும்பில் விற்றுவிடுவானுகள்

    ReplyDelete

Powered by Blogger.