Header Ads



மத தீவிரவாதமே ஆபத்தானது, சொர்க்கத்திற்கு சென்று 72 கன்னிப்பெண்களை அடைவதற்காக எதனையும் செய்வர் - சரத் வீரசேகர


மததீவிரவாதமே மிகவும் ஆபத்தானது மததீவிரவாதிகள் சொர்க்கத்திற்கு சென்று 72 கன்னிப்பெண்களை அடைவதற்காக எதனையும் செய்வார்கள் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

சண்டே ஒப்சேவரிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவருடைய பேட்டியின் சில பகுதிகள் வருமாறு

கேள்வி

மததீவிரவாதம் நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது என்பது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் புலனாகியுள்ளது- நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் வீழ்ச்சியடைந்தமைக்கான காரணம் என்ன?

பதில்-புலனாய்வு சேவையில் ஏற்பட்ட பின்னடைவே முக்கிய காரணம்; . உதாரணத்திற்கு நாங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மே 19 2009 இல் வெற்றிபெற்றோம்.

அவ்வேளை மூன்று புலனாய்வு படைப்பிரிவுகளே காணப்பட்டன அதன் பின்னர் அதனை நாங்கள் ஏழாக மாற்றினோம்.

இதன்மூலம் புலனாய்வு பிரிவின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்துகொள்ள முடியும்,அந்த புலனாய்வு கட்டமைப்பு நல்லாட்;சி அரசாங்கத்தினால் அழிக்கப்பட்டது.

முன்னர் நாங்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள்,தேவாலயங்கள் சாதாரண ஹோட்டல்கள் ஏன் வீதியோரங்களில் கூடபுலனாய்வு பிரிவினரை பணியில் அமர்த்தினோம்.

ஏதாவது நடந்தால் எங்களிற்கு உடனடியாக தகவல் கிடைத்தது,நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இந்த வலையமைப்பு அழிக்கப்பட்டது,தற்போது அதனை நாங்கள் வலுப்படுத்தியுள்ளோம் அது சிறப்பாக செயற்படுகின்றது.

மததீவிரவாதமே மிகவும் ஆபத்தானது மததீவிரவாதிகள் சொர்க்கத்திற்கு சென்று 72 கன்னிப்பெண்களை அடைவதற்காக எதனையும் செய்வார்கள்

கேள்வி- காத்தான்குடி போன்ற பகுதிகள் மதவெறி மற்றும் சட்டமின்மையின் வளர்நிலங்களாக காணப்படுகின்றன- அந்த பகுதிகளில் தற்போது நிலைமை எவ்வாறு உள்ளது?

பதில்-அந்த பகுதிகளில் நாங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்,நாங்கள் அந்த பகுதியில் எஙகள் புலனாய்வாளர்களை பணியில் அமர்த்தியுள்ளதுடன் பாதுகாப்பு படையினருக்கும் அறிவித்துள்ளோம்.

நாங்கள் ரோந்தினை அதிகரித்துள்ளதுடன் எங்களுக்கு தகவல்வழங்குபவர்களை அங்கு நிறுத்தியுள்ளோம்,அவர்கள் எங்களிற்கு அவசியமான தகவல்களை வழங்குவார்கள்.

காத்தான்குடி மாத்திரமல்ல ஏனைய சில பகுதிகளுக்கும் நாங்கள் முக்கியத்துவத்தை வழங்கியுள்ளோம்.

அவர்கள் கடந்த காலத்தில் என்ன செய்திருக்கவேண்டுமென்றால் தகவல் கிடைத்ததும் அதனை ஆராய்ந்து புலனாய்வு பிரிவினருக்கு வழங்கியிருக்கவேண்டும்.

இந்த வலையமைப்பு கடந்த அரசாங்கத்தில் குழப்பப்பட்டுவிட்டது.

நாங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளோம் தகவல்களை பெறுகின்றோம்.

கேள்வி- நீங்கள் ஜெனீவாவிற்கு சுயமாகவே சென்றீர்கள்-மனித உரிமை குற்றச்சாட்டுகள் குறித்த பக்கச்சார்பற்ற நிலையை அங்கு சமர்ப்பித்தீர்கள்-உங்கள் அனுபவம் குறித்து தெரிவிக்க முடியுமா?

பதில்

நாங்கள் யுத்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளோம் என நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாலேயே நான் ஜெனீவா சென்றேன்.

போர்க்குற்றம் குறித்த ஆறு தலைசிறந்த நிபுணர்கள் இலங்கை போர்க்குற்றம் எதிலும் ஈடுபடவில்லை என மிகதெளிவான அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளனர்.

ஆனால அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீர ஜெனீவா சென்று நாங்கள் யுத்த குற்றங்களில் ஈடுபட்டோம் என தெரிவித்துடன் எங்களிற்கு எதிரான மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கினார்.

அதன் காரணமாக ஐக்கியநாடுகள் மனித உரிமை வாக்கெடுப்பின்றி அதனை நிறைவேற்றியது.

மனித உரிமை பேரவையின் அனைத்து நாடுகளும் எங்களிற்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்,இதன் பின்னரே நான் ஜெனீவா சென்று மற்றைய பக்கத்தினை எனக்கு வழங்கப்பட்ட குறுகிய நேரத்திற்குள் சமர்ப்பித்தேன்.

என்னால் முடிந்ததை நான் செய்துள்ளேன்,இந்த விவகாரத்தை அரசாங்கம் மிகவும் அவதானமாக கையாளும் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

கேள்வி தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் வெளிநாடுகளின் தலைவர்களின் பின்னால் சென்று ஜெனீவாவில் உள்நாட்டு விவகாரங்களை விவாதிப்பதற்கு பதில் ஏன் அவர்கள் அரசாங்கத்துடன் தங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை விவாதிக்க கூடாது ?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் பிரதேச ஒருமைப்பாட்டிற்காக சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். இலங்கையில் சமஸ்டியை அறிமுகப்படுத்துவது குறித்து அவர்கள் வேறு நாட்டுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்கள் என்றால் அது அவர்கள் மேற்கொண்ட சத்திய பிரமாணத்திற்கு முற்றிலும் விரோதமானது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தவறிழைத்துவிட்டார் என நான் கருதுகின்றேன்,அவர் தமிழ் அரசியல்வாதிகள் குறித்து அனுதாபமுள்ளவராகயிருந்துள்ளார்

ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டவேளை நாஜி அரசியல் கட்சி முற்றாக முற்றாக அழிக்கப்பட்டது,போல்பொட் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரர் கெமரூஜ் கட்சி காணாமல்போய்விட்டது.

சதாம் ஹ_சைன் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது பாத்கட்சி அழிக்கப்பட்டது, ஹொஸ்னி முபாராக் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதை தொடர்ந்து அவரது தேசிய ஜனநாயக கட்சி தடைசெய்யப்பட்டது

அவ்வேளை ஜனாதிபதியாகயிருந்த மகிந்த ராஜபக்சவின் தவறு அது,அவர் தமிழ் அரசியல்வாதிகள் குறித்து அனுதாபம் கொண்டிருந்தார்,அவர் அவர்களை மன்னித்தார்,தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை சாதகமாக பயன்படுத்துகின்றது,

கடந்தகாலங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த பின்னரே நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம்; செய்தார்கள்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்தவர்கள் உட்பட எங்கள் படையினரை கொலை செய்த பண்டிதரின் வீட்டிற்கு சென்று சுமந்திரன் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கின்றார் அவருக்கு புகழாரம் சூட்டுகின்றார் தனது பாதுகாப்பிற்கு அளிக்கபபட்ட விசேட அதிரடிப்படையினரை தனது வீட்டின் வெளியே வைத்துக்கொண்டே எங்கள் பாதுகாப்பு படையினரின் கொலையாளிக்கு அஞ்சலி செலுத்தும் தைரியம் சுமந்திரனுக்கு உள்ளது

அதன் பின்னர் அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குறித்து பேசுகின்றார்

சிங்களவர்களிற்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் உரைகளை நிகழ்த்தும தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திற்கு வருவதை தடை செய்யவேண்டும் எனவும் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

11 comments:

  1. This man is crazy man...Islam does not say anything like thisQuran does not incite to kill any one ..
    killers will go to Hell not paradise .
    this saying is misquote ..

    ReplyDelete
  2. YOUR BEST RACIEST , FIRST IF YOUR BRAVE PERSON , START YOUR INQUIRY FROM RAJAPAKSA MAPIYA GROUP OF COMPANY ABOUT EASTER BOM BLAST

    ReplyDelete
  3. கருப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று குழம்பிப் போயுள்ளார், ஊது குழல் ஊதுபவர் யாரோ

    ReplyDelete
  4. Prophet Muhammad said, "A man was inflicted with wounds and he committed suicide, and so God said: My slave has caused death on himself hurriedly, so I forbid Paradise for him."

    A few years ago, the Fiqh Council of North America reaffirmed Islam's condemnation of terrorism and religious extremism by issuing the following fatwa, or formal religious ruling: "We have consistently condemned terrorism and extremism in all forms and under all circumstances, and we reiterate this unequivocal position. Islam strictly condemns religious extremism and the use of violence against innocent lives.

    "There is no justification in Islam for extremism or terrorism. Targeting civilians' life and property through suicide bombings or any other method of attack is haram - prohibited in Islam - and those who commit these barbaric acts are criminals, not 'martyrs.'"

    The Quran states: "Whoever kills a person unjustly, it is as though he has killed all mankind. And whoever saves a life, it is as though he had saved all mankind."

    The closest reference to "72 virgins" comes from a saying of the Prophet Muhammad, "The smallest reward for the people of Paradise is an abode where there are 80,000 servants and 72 companions, over which stands a dome decorated with pearls, aquamarine, and ruby, as wide as the distance from Al-Jabiyyah [a Damascus suburb] to Sana'a [Yemen]."

    Even if it is an authentic saying of Prophet Muhammad, there is no reference to suggest that if someone commits acts of terrorism they would be rewarded with 72 virgins in Paradise.

    The reference "terrorists are rewarded with 72 virgins in paradise" goes against the nature and true essence of the teachings of Islam. One cannot achieve paradise by committing acts of injustice.

    Islam is a faith that adheres to peace and justice.

    Yes, there are some who are misguided and commit acts of violence, but one cannot hold an entire faith of 1.5 billion people accountable for the actions of some.

    In Islam, people who commit good deeds are rewarded and those who commit evil deeds are punished.

    Terrorists, all terrorists regardless of race, ethnicity or religion, will be and should be punished not rewarded.

    Nowhere in the Quran will one find, "Terrorists will receive 72 virgins when they die."

    This stereotype about Islam and Muslims needs to be put to rest once and for all. (https://www.sun-sentinel.com/sfl-opedonline091508-story.html)

    ReplyDelete
  5. " Religious extremism is the most dangerous as such extremists will do anything to go to heaven and sleep with 72 virgins."

    The most UNINTELLIGENT comment from the Minister who boasts about the highly improved Intelligence Service in the country.

    He is using Baseless and Ridiculous Invective used by Islamophobes to ridicule Islam which is Highly Objectionable, Irresponsible and needs severe Condemnation.

    If the Minister who boasts about the Intelligence Service considers Baseless Insults and Insinuations as Facts and goes public in the National Media, does it inspire any confidence in the Intelligence Service he heads?

    This matter Must be taken up VERY STRONGLY by the Community at the Highest levels and the Minister taken to task.

    ReplyDelete
  6. venomous mouth worst the than the covid19

    ReplyDelete
  7. Appo neeenga..unga...All Terrorist groups are full of white....full of innocents??? they all r baby.....!!!... Pls give them white milk to (Ghana sara, Gammanbila, Vimal, Madumaadava, Madushan, Aluthgama killers, Ampara killers, Dhigana killers, Minuwangoda killers, Kurunagala killers..... Give them all white milk.... Shame on you

    ReplyDelete
  8. He got wrong information about those terrorist...who are blasting and killing innocent people... They never go to paradise, Hell only their destination... Someone can teach him the true Islam!!!

    ReplyDelete
  9. இவரின் பேச்சு தனிநபர் பேச்சு அல்ல இவருடைய கொள்கைப்பிடிப்பிலேயே இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் போக்கு சிறுபான்மையினருக்கு வாசியானது. சிறுபான்மையினர் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால் இக்காலத்தில் சாதிக்கலாம். கட்சி பேதமின்றி ஒருமித்த குரலில் பேசவேண்டும். அவர்களின் பிரித்தாளும் தந்திரம் தோல்வியடைய வேண்டும். இதுவரை பிரித்தாளும் நோக்கில் செய்யப்பட முயற்சிகள், செலவுகள் அனைத்தும் வீண்போக வேண்டும். ஒத்திகைக்காவது ஒருமுறை இதனைச்செய்து பார்க்க எம்மவர்கள் முயற்சிப்பார்களா?

    ReplyDelete
  10. 'மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்.. இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புகாரி எண் 25 Volume :1

    ReplyDelete
  11. Field Marshal, gave him good reply to this......., trust its enough !!!

    ReplyDelete

Powered by Blogger.