Header Ads



இதுவரை 5 ஜனாஸாக்கள், குளிர்சாதன கொள்கலனில் வைப்பு


கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை, பாதுகாப்பாக வைப்பதற்கு குளிர்சாதன வசதிகளுடன் கூடிய கொள்கலன்களை அரசாங்கம் தயார் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ் லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து, ஒரு திட்டவட்டமான தீர்மான வரும் வரை முஸ்லிம்களின் உடல்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு, குளிர்சாதன வசதிகளுடன் கூடிய ஐந்து கொள்கலன்களை அரசாங்கம் தயார் செய்துள்ளது.

குறித்த கொள்கலன்கள் முஸ்லிம்களின் தனிப்பட்ட நன் கொடையாக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி குறித்த குளிர் கொள்கலன்களில் 5 உடல்கள் இதுவரை வைக்கப்பட்டுள்ளன

சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு நீதி அமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

கொழும்பு, களுத்துறை, கண்டி மற்றும் நீர் கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தலைமை நீதித்துறை வைத்திய அலுவலகங்கள் மற்றும் கல்முனை நகரில் அஷ்ரப் வைத் தியசாலை ஆகிய இடங்களுக்கு ஐந்து குளிர் கொள் கலன்களை வழங்க வேண்டும் என்று கடிதத்தில் கேட் டுள்ளார்.

இதற்கிடையில், கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவினால் இறுதி தீர்மானம் எடுக்கும் வரை, காலி – தெத்துகொட பகுதியில் கொரோனா தொற்றால் உயிரி ழக்கும் முஸ்லிம்களின் உடல்களைத் தகனம் செய்யாமல் கராபிட்டி போதனா வைத்தியசாலையில் குளிர் அறை யில் வைப்பதற்கு காலி நீதவான் நீதிபதி பவித்ரா சஞ் ஜீவனி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.