Header Ads



20 க்கு வாக்களித்த முஸ்லிம் Mp க்கள் மேற்கொண்டுள்ள நல்ல முயற்சிகள் - தரக்குறைவான விமர்சனங்களை தவிர்ப்போம்


அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்த, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நல்ல முயற்சிகளை மேற்கொண்டுள்ளதை நாம் வரவேற்க வேண்டும்.

அவர்களின் நல்ல முயற்சிகள் குறித்த பல தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

அதில் குறிப்பாக அண்மையில் அலரி மாளிகையில் நடந்த, பிரதமருடனான சந்திப்பை பிரதமரின் மகன் யோசித்தவுடன் இணைந்து மேற்கொண்டமை. இதில் உடல்களை அடக்குவதில்  சில இடங்கள் பரிசீலிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளமை.

பசிலுடன் 11.12.2020 அன்று நடந்த சந்திப்பு. இதன்போது உடல்களை அடக்குவதில் உள்ள, சில தடைகளை நீக்கவும் மேற்கொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடவும் பசில் முன்வந்தமை 

முக்கிய சிங்கள ஊடக நிறுவனரை சந்தித்து, உடல் எரிப்புக்கு ஆரவான பிரச்சாரத்தை நிறுத்தச் சொன்னமை. அதற்கு அவர் இணங்கியதுடன், உடல் அடக்கத்திற்கு ஆதரவான வைத்தியர்களை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்துவதாக வாக்குறுதி வழங்கியமை.

பௌத்த  சிங்கள கடும்போக்காளரை நேரில் சந்தித்து, உடல்களை அடக்குவதில் உள்ள நியாயத்தை விளக்கி, உடல் அடக்கத்திற்கு வர் ஆதரவை வெளியிட்டமை

அரசாங்க மருத்துவ அதிகாரிகளை சந்தித்தமை

எதிர்வரும் திங்கட்கிழமை 14 ஆம் திகதி, கிறிஸ்த்தவ சமூகத்தின் முக்கிய பிரதானியை சந்திக்க உள்ளமை என பல தரப்பட்ட முயற்சிகளை அரசியலமைப்பின் 20 திருத்தத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ளார்கள்

அந்தவகையில் யார் குத்தியாவது அரிசியாகட்டும். தரக்குறைவான விமர்சனங்களை தவிர்ப்போம். உடல்களை அடக்கம் செய்வதில் உள்ள உரிமையை வென்றெடுப்போம்..!


14 comments:

  1. Yes ..when good comes from any one we should appreciate it .
    But most of Muslim MPs are selfish..
    And they play politics with Muslim community issues .
    They do not care about the Muslim community.
    Muslim party politics is no good for our community at all.
    We can get more from a JVP MP than from these people

    ReplyDelete
  2. ஐயோ இந்த களுதைகளுடைய மூஞ்சிகள திரும்ப திரும்ப காட்டாதீங்கப்பா வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறோம் இனி இவனுகளும் வேண்டாம் இவனுகளின் முயற்சிகளும் வேண்டாம்

    ReplyDelete
  3. யார்குத்தியாவது அரிசியாகட்டும் ஆனால் அதில் இந்த கேவலம்கெட்ட அரசியல் சாக்கடைகள் குத்தவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இனவாத அரசியலின் நிகழ்ச்சி நிரல் இனிதாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்குத் தடையாக முஸ்லிம் சமூகத்தின் சிலமுடிவுகள் (ஜெனாஸாக்களை பொருப்பேற்காமை), கிழக்கு, மேற்கு நாடுகளின் இலங்கைப் பக்கமான பார்வைகள், இந்த நடவடிக்கை முலமாக இலங்கையின் அறிவியல் மேற்கைய நாடுகளில் நகைப்பிக்கிடமாக பார்கின்றமை,.... இவைகள் பெறும் தடையாக இருக்குறது. இனி இனவாத அரசியலுக்கு வேறு வழியில்லை எப்படியாவது ஜனாஸா நல்லடக்கங்களுக்கு அனுமதியளிக்கவேண்டும். அதையும் சும்மா (இலவசமாக) கொடுக்கவிரும்பவில்லை 20 என்றபெயரில் சமூகத்தை விற்றுப்பிழைத்த இந்தப் பாவிகளின் முயற்சியால் தான் இதை நாம் அனுமதித்தோம் என்ற விம்பத்தைத் தேற்றிவிக்க இந்த சாக்கடைகளை விளம்பரப்படுத்திகிறார்கள். தடஸ் ஓல்...

    ReplyDelete
  4. When they supported the government it was about 20 bodies cremated,now it’s past 100,TOO LATE

    ReplyDelete
  5. இலங்கையில் பணத்துக்காக துரோகங்கள்-காட்டிக்கொடுப்பகளை எந்த சமூகம் செய்கின்றது என்பதற்கு சிறந்த உதாரணம் தான் இவர்கள்.

    இந்த கருத்து உண்மையா, பொய்யா என்பது இவர்களுக்கு எதிராக எடுக்கம்போகும் நடவடிக்கைகளில் தான் திரூபணமாகும்.

    ReplyDelete
  6. MUSLIMGALIN UDALKAL ERINDAALENNA SHAAMBALAANAL ENNA!!!
    POCKETTUKALAI NIRAITHUKOLLAMUN
    VIDUTHIRUKKAVENDIYA KORIKKAIKALAI THATTIKALITHAVARKAL.

    ReplyDelete
  7. கற்றவர்கள் கலாநிதி பட்டம் பெற்றவர்களின் விமர்சனங்களைப் பார்க்கும்பொழுதும் ஆச்சரியமாக இருந்தது. சுய நலமா உலகமறியா புத்தகப்பூச்சிகளா புரியவில்லை.

    ReplyDelete
  8. they were given an opportunity meet some people .
    they can feel good about that for the their damage they have done. we have not heard about their efforts and the result.

    ReplyDelete
  9. கண்ணால் காண்பதும் பொய்....
    காதால் கேட்பதும் பொய்....
    தீர விசாரிப்பதே மெய்....

    அதன்பிறகு NET ல் பதிவதே நன்மை / உண்மை / நேர்மை / மேன்மை
    பிரித்தாழும் சூழ்ச்சிகளில் மாட்டாதிருப்போம்!
    பொதுவாகச் சொல்கிறேன்.
    உட்பூசல்களாயிருப்பினும் உள்ளுக்குள்ளே தீர்த்துக்கொள்வோம்!...
    Dehianga Rizwan M Uzman

    ReplyDelete
  10. May Allah reward our muslim politicians.

    ReplyDelete
  11. As the saying goes Better Late than Never. Nice to know that these MPs have taken some action. Now, we will have to wait for the results.

    ReplyDelete
  12. நல்லது நடக்கட்டும் யாராயினும் நலவுகளைப் பாராட்டுவோம்...

    ReplyDelete
  13. இவர்கள் இவைகளை செய்தார்களா?அப்படியே வைத்துக்கொள்வோம் ஏன் இவர்கள் நாங்கள் இவ்வாறான நடவடிக்கைகள் எடுத்துள்ளோம் என்பதனை அறிவிக்க வில்லை

    ReplyDelete
  14. இவர்கள் இவைகளை செய்தார்களா?அப்படியே வைத்துக்கொள்வோம் ஏன் இவர்கள் நாங்கள் இவ்வாறான நடவடிக்கைகள் எடுத்துள்ளோம் என்பதனை அறிவிக்க வில்லை

    ReplyDelete

Powered by Blogger.