Header Ads



உக்ரைனிலிருந்து 185 சுற்றுலா பயணிகள், விஷேட விமானத்தில் இலங்கையை வந்தடைந்தனர்


உக்ரைனிலிருந்து 185 சுற்றுலா பயணிகளுடன் கூடிய விஷேட விமானம் ஒன்று சற்று முன்னர் மத்தள விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளதாக சுற்றுலாதுறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஸ்கைஅப் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றில் குறித்த பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த சுற்றுலா பயணிகள் 10 முதல் 14 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்க போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

3 comments:

  1. கொரோனாவின் இரண்டாம் அலை பேலியகொட மீன் சந்தை கொத்தணிக்கு முக்கிய காரணமே ஒரு ரஷ்ய நாட்டு பிரஜை என்று சில பத்திரிகை செய்தி பரவியது பின்பு அது மறைக்க பட்டது. லண்டனில் கண்டு பிடிக்கப்பட்ட புதிய கொரோன முனையதை விட 70 மடங்கு வீரியம் உள்ளது என்று உலகில் தலைசிறந்த விமான நிலையங்கள்,முதல் தர விமான நிலையம்,பரபரப்பான விமான நிலையங்கள் எல்லாம் மூடி இருக்கும் போது முட்டாள்கல் இங்கு திரண்டு விட்டிருக்கிறார்கள்!அப்பொழுது தானே எரிப்பதை இன்னும் அதிகமாகி காசு பார்க்கலாம்.

    ReplyDelete
  2. 185 x 4 = 740 local corona patients
    1 tourist can spread to 4 people in 7 days.

    ReplyDelete
  3. Peliyagoda covid started with Ukrain nationality then why again??? Money...money....money....money.... die with money... they dont care about public health - nonsense

    ReplyDelete

Powered by Blogger.