Header Ads



உலகில் சக்திவாய்ந்த 100 பெண்கள் - இலங்கை பெண்ணுக்கு 29 வது இடம்


2020 ஆம் ஆண்டில் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை உலக புகழ்பெற்ற போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஷேமாரா விக்ரமநாயக்க உள்ளடக்கப்பட்டுள்ளார். அந்த இந்த பட்டியலில் 29 வது இடத்தை அவர் பிடித்துள்ளார்.

பிரித்தானியாவிலுள்ள Macquarie குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் செயற்படுகின்றார்.

பிரித்தானியாவில் பிறந்த ஷேமாரா தனது சிறு வயது முதல் இலங்கையில் வாழ்ந்துள்ளார்.

பின்னர் 13 வருடங்களில் அவர் அவுஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு அவர் தனது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

ஷேமாராவின் தந்தை இலங்கை வைத்தியராகும். அவர் அவுஸ்திரேலியாவில் உள்ள மிகப்பெரிய 20 நிறுவனங்களின் ஒரே பிரதான நிறைவேற்று அதிகாரியாகும்.

2020ஆம் ஆண்டு உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலின் முதல் இடத்தில் ஜேர்மன் அதிபரான என்ஜலோ மேர்கல் தெரிவித்துள்ளார்.

போர்ப்ஸ் சஞ்சிகைக்கமைய அவர் தொடர்ந்து 10 வருடங்களாக முதல் இடத்தில் உள்ள சக்தி வாய்ந்த பெண் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.