கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலங்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி அனுமதியளித்து விட்டதாகவும், அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டு CTJ அமைப்பு வெளியிட்டிருந்த கடிதம் தொடர்பில் விசாரிக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த.
இது தொடர்பில் தாம் ஜனாதிபதியிடம் வினவிய போது, அவ்வாறு எதுவித அனுமதியும் தான் வழங்கவில்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளதோடு அதனை விசாரிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
2 கருத்துரைகள்:
அவரைப்பிடித்து கொஞ்ச நாட்களுக்கு அடைத்து வைத்து சமூகமயப்படுததிவிட்டு விடுங்கள் ஐயா.
யூத ஏஜன்டை கைது செய்தால் என்ன நடக்கும் தெரியும்தானே?
Post a comment