Header Ads



கொழும்பில் பதிவாகும் மரணங்களுக்கு விசேட காரணங்கள் உள்ளதா..? டிசம்பரில் இன்னும் கூடலாம்


எதிர்வரும் டிசம்பர் மாத ஆரம்பத்தில், கொரோனா மரணங்கள் பற்றியே கூடுதல் சிந்திக்கவேண்டியேற்படுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

 தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்;

கொரோனா தொற்றினால் பதிவான மரணங்களில் 16 மரணங்களில் பெரும்பாலானவை கொழும்பு மாநகர சபையை அண்மித்த பகுதிகளிலேயே பதிவாகியுள்ளன என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே, குறித்த மரணங்களில் ஏதேனும் விசேட காரணி தாக்கம் செலுத்துகின்றதா என்பது தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டும்என்றும் தெரிவித்துள்ளார்.  

ஒன்பது மாதங்களில் 13 மரணங்கள் என்றபோதும்  தற்போது இரு வாரங்களில் 16 மரணங்கள் என்ற நிலைமையாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார். இது மிகவும் அபாயமான நிலைமையாகும்.அதிலும் அண்மையில் பதிவாகிய 16 மரணங்களில் பெருமளவானவை கொழும்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்டவையாகும்.

எனவே, கொழும்பு மாநகசபையை அண்மித்த பகுதிகளில் பரவும் வைரஸினால் பதிவாகும் மரணங்களுக்கு ஏதேனும் விசேட காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆராய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

1 comment:

  1. Allame JMO da semma plan, azuku periya plan allah ya irukkuzu..naai kuttathukku..allah pozumanawan..

    ReplyDelete

Powered by Blogger.