Header Ads



எதைச் சாதித்தாலும் பரவாயில்லை, விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் - மலிங்க உருக்கம்


இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா பிரீமியல் லீக் (எல்பிஎல்) டி-20 கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியதற்கான காரணத்தை இலங்கை டி-20 அணித்தலைவர் லசித் மலிங்கா வெளிப்படுத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பங்கேற்ற மலிங்கா நவம்பர் 26ம் திகதி முதல் தொடங்கவுள்ள எல்பிஎல் தெடாரிலிருந்து விலகியதை பலர் விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை அணியில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வழி வகுக்கும் நோக்கத்துடன் தான் எல்பிஎல் தொடரிலிருந்து விலகுவதாக மலிங்கா விளக்கமளித்துள்ளார்.

விமர்சனங்களுக்கு பதிலளித்த லசித் மலிங்கா, தனக்கான நேரம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், புதிய வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பெற உதவ தயாராக இருப்பதாகவும் கூறினார்.

எல்பிஎல் வெற்றிப்பெற வாழ்த்து தெரிவித்த மலிங்கா, இவ்வளவு கிரிக்கெட் விளையாடிய ஒருவருக்கு ஏன் எல்பிஎல் தொடருக்கு தயாராவதில் பிரச்சினை என்று சிலர் ஆச்சரியப்படுவார்கள்.

வீட்டிலுள்ள ஜிம்மில் பயிற்சி செய்வதின் மூலம் டி-20 தொடருக்கு தயாராக முடியாது. ஒரு போட்டியில் நான் ஒரு யார்க்கரை வீசுவதற்கு முன்பு, அந்த பந்தை சுமார் ஆயிரம் முறை வீசி பயிற்சி செய்ய வேண்டும். யாரக்கர் பந்து என்பது தற்செயலாக வீசப்படும் ஒன்று அல்ல என்று அவர் விளக்கினார்.

எல்பிஎல்-ல் யார்க்கர்களை வீசத் தவறினால், ஐ.பி.எல் தொடரில் யார்க்கர்களை பந்து வீசலாம், எல்பிஎல்-ல் தொடரில் வீச முடியாத என்று மக்கள் விமர்சிப்பார்கள்.

எல்பிஎல்-ல் இருந்து வெளியேறியதற்காக மக்கள் அவரை விமர்சிக்கிறார்கள் என்று கூறிய மலிங்கா, இலங்கைக்கு விக்கெட் எடுத்தபோது அவரை உற்சாகப்படுத்தியவர்களும் இவர்கள்தான் என்று கூறினார்.

எதைச் சாதித்தாலும் பரவாயில்லை, சில சமயங்களில் விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனது நாட்டுக்காக நான் என்ன செய்தேன் என்பதை உலகம் அறியும். என்னை நேசிக்கும் மக்களுக்கும் அது தெரியும். அது எனக்குப் போதுமானது என்று லசித் மலிங்கா கூறினார்.

No comments

Powered by Blogger.