November 24, 2020

ஹிரு தொலைக்காட்சி நிறுவன தலைவருக்கு,, முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதில் இணைந்திருக்கிறீர்களா..?

The Chairman & Board Of Directors

Hiru Tv ,

Colombo.

ஹிரு தொலைக்காட்சி நிறுவன தலைவருக்கு!

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா எனும் வைரசைவிடவும் உங்கள் தொலைக்காட்சியில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரானவர்களின்  வார்த்தைகளையும், அவர்களின் நடவடிக்கைகளும் வலிந்து தொடர்ந்து ஒளிபரப்புவது கொரோனா வைரசை விடவும் ஆபத்தானதாகவும் மிகக் கொடிதாகவும் இருப்பது  தங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்!

இஸ்லாம் மார்க்கம் பற்றி தெரியாத அறிந்திராத அல்லது அறிந்திருந்தும் தெரிந்திருந்தும் காழ்ப்புணர்ச்சியில்  இஸ்லாத்துக்கு எதிராகவும் முஸ்லிம்களை தொடர்ச்சியாகவும்   பேச்சு சுதந்திரம் எனும் போர்வையில் தொடர்ந்தும் நாளாந்தம் அடிப்படை ஆதாரங்கள் அற்ற மிகவும் மோசமான கருத்துக்களை  தெரிவித்துவரும் ,

பௌத்த பேரினவாத வெறும் பேனர் அமைப்புக்களான பொதுபலசேனா, ராவணாபலய, சிங்களே அமைப்பு உட்பட இன்னும் சில அமைப்புக்கள். அவர்களை நாளாந்தம் ஊக்குவித்து அவர்களை பிரபல்யப்படுத்தும் ஊடகங்களாக நீங்கள் தொடர்ச்சியாக ஈடுபடும் நிகழ்ச்சி நிரல் எதற்காக!

உதாரணமாக,

ஒருசில தினங்களுக்கு முன்னர் டான் பிரசாத் மூலமாக ஒழுங்குசெய்யப்பட்ட 

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இஸ்லாமிய கலாச்சார ஆடை அணிந்த இரு பெண்களும் ஒரு ஆணும் தெரிவித்த கருத்தை இந்நாட்டின் 99.9 % முஸ்லிம்களின் இஸ்லாமிய மதம் சம்பந்தமான சட்டத்துக்கு எதிரான கருத்தை ஒளிபரப்பும் போது குறைந்தபட்சம் அவர்களின் தராதரம், கல்வி, மார்க்க அறிவு, சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரம் என்பவை பற்றியாவது கருசணை கொண்டிருக்க வேண்டும். தொடர்ந்தும் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான கருத்துக்களை ஒளிபரப்புவதில் உங்கள் தொலைக்காட்சிக்கு உள்ள கரிசணையும் ஆர்வமும் ஆச்சரியப்படவைத்துள்ளது!

டான் பிரசாத் போன்ற தராதரமோ எந்தத் தகுதியும் இல்லாத ஒருவரை உங்களின் குடும்பத்தேவைக்கான பிரச்சாசாரத்துக்கு பயண்படுத்தி வருவதும் நாடறிந்த விடயம். அவரும் ஏதோ தேவைகளுக்காக உங்களுடன் இனைந்து பயணிக்கின்றார்.

விடயத்துக்கு வருகின்றேன்,

இன்று கொரோனாவின் தாக்கத்தால் உயிரிழக்கும் சகலரையும் அரசின் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்ட சுற்று நிரூபணத்துக்கு அமைவாகவும் உலக சுகாதார அமைப்பின் சுற்று நிரூபணத்துக்கு எதிராகவும் எறியூட்டப்படுகிறது.(இலங்கையின் இரண்டாவதும் முஸ்லிம்களின் முதலாவது கொரோனா மரணம் நீர்கொழும்பு ஜமால்தீன்  உடல் குடும்ப உறுப்பினர்களுக்கும் அறிவிக்காது அவசரமாக எறியூட்டப்பட்டதன் பின்னர்,  மறுநாள் அவசரமாக அமுலாக்கப்பட்டதே இலங்கை சுகாதார சட்டம்.

எனினும் இஸ்லாமிய சட்ட வரையறைக்குள்  முஸ்லிம் ஜனாசாக்களை சிறு உறுப்புக்களை கூட சிதைக்காமல் அடக்கம் செய்வதை தவிரவும் எறியூட்ட எமக்கோ எவருக்கோ (அது அரசாக இருப்பினும்)அனுமதி இல்லை என்பதை பாராளுமன்ற உறுப்பினர் முகம்மத் முஸம்மில் ஒரு முஸ்லிமாக இருந்தும் அறிந்திராத போது சம்பந்தப்பட்டவர்கள்  அறியாமல் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

அமெரிக்காவிலும்,ஐரோப்பாவிலும்,பிரேசிலிலும்,உலகின் கொரோனா பாதிப்புள்ள சகல நாடுகளிலும் பல லட்சம் கொரோனா உடல்கள் புதைக்கப்பட்டும் அங்கில்லாத சுகாதார அறிவும், சுகாதார சீர்கேடும்  எமது நாட்டின் ஒருசில வைத்திய நிபுணர்கள் மாத்திரம் எங்கிருந்து கற்றார்கள் எனும் நியாயமான கேள்வியும் சம்பந்தபட்ட வைத்திய நிபுணர்களிடமும், ஒருசில காவிஉடை தரித்த சகலகலா நிபுணர்களிடமும் கேட்க தோன்றுகிறது. 

அத்துடன் உலகின் இரண்டாவது சணத்தொகையும் அதில் 79% இந்துக்களை கொண்டதும், முஸ்லிம் எதிர்ப்பு கொள்கையே தமது அரசியல் கொள்கையாக கொண்ட மோடி அரசு ஆட்சி செய்யும் இந்தியாவில்,

25 மில்லியன் மக்களைக்கொண்ட மும்பாயிலும், 16 மில்லியன் மக்களைக்கொண்ட சென்னையிலும், இலங்கையின் கடல் மட்டத்துடன்  ஒன்றுபடும் கேரளாவிலும், இந்தியாகொரோனாவால் இறந்த உடல்கள் புதைக்கப்படும் போது  

23 மில்லியன் மொத்த சணத்தொகை கொண்ட நமது நாட்டில் மாத்திரம் கொராணாவால் இறந்த உடல்கள் எறிக்கப்படவே வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலில் செயல்படும் ஒரு சிலருடன் உங்கள் தொலைக்காட்சி நிறுவனமும்  சேர்ந்திருப்பது எமக்கு ஒன்றும் ஆச்சரியமானதல்ல, இருப்பினும் உங்கள் நிறுவனத்தின் திட்டமிட்ட இழிச்செயலை நிறுத்தி உங்கள் நிறுவனத்தின் ஊடாக நாட்டில் இணநல்லுறவையும் சாந்தி சமாதானத்தை வளர்க்க பாடுபடுங்கள் நாங்களும் உங்களுடன் கைகோர்க்க ஆவலாய் காத்திருக்கின்றோம்!

இன்றவன் உங்களுக்கு நல்வழியை காட்டி உங்களையும், என்னையும் சகல உலக மக்களையும் காப்பாற்ற பிரார்த்தனை செய்து விடைபெறுகின்றேன்!

இவ்வண்ணம்

ராசிக் குவைதிர்கான்.


3 கருத்துரைகள்:

குளவியிடம் தேனை எதிர்பார்க்கலாமா?

Very good Kuvaithir your statement actually true

முஸம்மில் என்று அழைக்கப்படும், தன்னை அழைத்துக் கொள்ளும் நபர் பகிரங்கமாகவே TV கமெராக்களுக்கு முன்னிலையில் தான் பௌத்த மதத்தைத் தழுவுகிறேன் என்று பிரதான பிக்கு அவர்களின் காலில் வீழ்ந்து வணங்கி அறிவித்திருக்கும் நிலையில் அவரை "முஸ்லிமாக இருந்தும்" என்று சகோதரர் குவைதிர் கூறியிருப்பது வினோதமாக உள்ளது.

Post a comment