Header Ads



இன்றுமுதல் முடக்க நிலையில், இருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்


கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட பொலிஸ் அதிகாரப் பிரிவுகள் சில இன்று (30) அதிகாலை 05.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, கரையோர மற்றும் புறக்கோட்டை ஆகிய பொலிஸ் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

அதற்கு மேலதிகமாக கம்பஹா மாவட்டத்தில் நீர்க்கொழும்பு மற்றும் ராகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளும் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. 

எவ்வாறாயினும், மட்டக்குளி பொலிஸ் பிரிவின் ரன்திய உயன வீடமைப்புத் தொகுதி மற்றும் பர்குசன் வீதியின் தெற்கு பிரதேசத்தை தொடர்ந்தும் தனிமைப்படுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

அதேபோல், வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின் “லக்செத செவன” வீடமைப்புத் தொகுதி, சாலமுல்ல மற்றும் விஜயபுர ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரவுகள் இன்று அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை, கொழும்பு மாவட்டததின் முகத்துவாரம், புளுமென்டல், கொட்டாஞ்சேனை, கிரான்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டேம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொடை, மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளும், கொம்பனி வீதி பொலிஸ் பிரிவில் வேகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவும் பொரளை பொலிஸ் பிரிவில் வானாத்தமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதேபோல், கம்பஹாவில் வத்தளை, பேலியகொடை மற்றும் களனி ஆகிய பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களாகவே காணப்படும் என இராணுவத்தளதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.