Header Ads



வர்த்தமானி வருகிறதா என ஓரிரு, நாட்கள் வரை பொறுத்திருந்து பார்ப்போம் - சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்


ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் ஜனாஸாக்களை அடக்குவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றதாக நேற்றைய தினம் (09.11.2020) நீதி அமைச்சர் தெரிவித்ததை அடுத்து முஸ்லிம்கள் மத்தியில் இந்த செய்தி மிகவும் மகிழ்ச்சிக்குறியதாக மாறிவிட்டது.

இந்நிலையில், ஜனாஸா அடக்குவதற்கான அனுமதி கிடைத்த செய்தி தற்போது கிடைத்ததா? இல்லையா? என்ற அடிப்படையில் மக்களுக்கு மத்தியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இந்நேரத்தில் ஜனாஸா அடக்கத்திற்கான அனுமதி கிடைத்ததாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ அறிவித்தது எந்த அடிப்படையில் என்பதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதி கிடைத்து விட்டதாக தம்மிடம் நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் தற்போது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்ததாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி அவர்களின் வட்ஸ்அப் ஆடியோ ஒன்று (https://rb.gy/1znxzb) நேற்று (09.11.2020) மாலை வைரலாக பரவியது.

இதே வேலை நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களையும் உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தி அவர்களையும் மேற்கோள் காட்டி ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி கிடைத்த செய்தியை #ColomboTimes ஆங்கில இணையதளமும் வெளியிட்டது. (https://bit.ly/3kkMO5U)

ரிஸ்வி முப்தியின் ஆடியோவை பலரும் அனுப்பி இது உண்மையா என கேட்ட நேரத்தில் நாம் உடனடியாக நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களை தொடர்பு கொண்டு சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ சார்பில் உத்தியோகபூர்வமாக அவரிடம் விசாரித்தோம்.

அப்போது “ஆம். அடக்கம் செய்வதற்கான அனுமதி கிடைத்து விட்டது. – அல்ஹம்து லில்லாஹ். தற்போது அடக்கம் செய்வதற்குறிய இடத்தை தயார் செய்ய வேண்டும் என்று கூறினார்.

இந்தச் செய்தியை பொது மக்களுக்கு அறிவிக்கலாமா? என நம் தரப்பில் அமைச்சர் அவர்களிடம் கேட்ட நேரத்தில் அறிவிக்கலாம். எந்த பிரச்சினையும் இல்லை என்றும் நீதி அமைச்சர் அவர்கள் நம்மிடம் தெரிவித்தார்.

நீதி அமைச்சர் அவர்களிடம் செய்தியை கேட்டு உறுதி செய்த பின்னர் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ சார்பில் நாமும் உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிட்டோம்.

இந்நிலையில் இதே செய்தியை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் பிரபல ஆங்கில செய்திச் சேவையான #DailyMirro ம் (https://bit.ly/36kyqWt) அமைச்சரவையில் நேற்றைய தினம் அடக்கம் செய்வதற்கான முடிவு எட்டப்பட்டதாகவும், அடக்கம் செய்வதற்குறிய பொறுத்தமான இடமொன்றை தேர்வு செய்யுங்கள் எனவும் ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியிட்டிருந்ததுடன், #வீரகேசரி (https://bit.ly/32tvAx2) உள்ளிட்ட செய்திச் சேவைகளும் இதனை உறுதி செய்தன.

இந்நிலையில் ஜனாஸா அடக்கத்திற்கான அனுமதி இன்னும் வழங்கப்பட வில்லை என்ற செய்திகள் இன்று (10.11.2020) ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றில் (https://bit.ly/3lgWEag) கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் இறுதி முடிவு எட்டப்பட வில்லை என்றும் ஆனால் அடக்கம் செய்வதற்குறிய சாதகமான இடமொன்றை தேர்வு செய்யுமாறு இது தொடர்பான குழுவுக்கு தெரிவித்துள்ளதாகவும், குறித்த குழுவின் முடிவின் பின்னால் தீர்க்கமான தீர்மானமொன்றுக்கு அரசு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அடக்கம் செய்வதற்கான அனுமதி கிடைத்து விட்டதாக நீதி அமைச்சர் கூறியதன் தொடரில் இன்று இதுவரை குறித்த விவகாரத்தின் நிலை இதுதான்.

தொழிநுற்ப்ப குழுவின் முடிவின் பின்னர் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டு கெசட் – வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என நீதி அமைச்சர் கூறியுள்ள காரணத்தினால் கெசட் வருகிறதா என ஓரிரு நாட்கள் வரை பொறுத்திருந்து பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.


R. அப்துர் ராசிக் B.COM

பொதுச் செயலாளர்,

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ

10.11.2020

6 comments:

  1. இல்லாட்டி என்னா புடங்கப் போரீங்களோ.நாட்டுல சமாதானம் தேவை என்றால் இந்த சங்கத்தை தடைசெய்ய வேண்டும்

    ReplyDelete
  2. Why you are giving prominence to this guy... He is the told that Niqab is only for Our Prophet's wives and for the women it is Haram!
    What a betrayer is he?

    ReplyDelete
  3. அல்லாஹ்வுக்காகச் செய்யும் பணியை விளம்பரம் செய்து ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என மதிப்புக்குரிய நீதி அமைச்சர் கூறும் போது 'சரி கெசட் வருகிறதா கன ஓரிரு நாட்கள் வரை பொறுத்திருந்து பார்ப்பபோம்' என கர்வத்துடன் கூறும் தவ்ஹீத் ஜமாஆத்தின் பொதுச் செயலாளரின் இறுமாப்பும் கர்வமும் மேலோங்கிய தொனி தென்படுகிறது. சரி அவ்வாறு நடைபெறாவிட்டால் இவர் என்ன செய்யப் போகிறாராம். இந்த இறுமாப்பு தௌஹீதின் பெயரால் தென்படுவது தான் எங்களால் தாங்கமுடியாமல் இருக்கின்றது. தற்போது இந்த நாட்டில் புரையோடிப் போயியுள்ள இனவெறி,முஸ்லிம்களுக்கு எதிரான வெறி உணர்வை எவ்வாறு இல்லாமல் செய்யலாம் என ஆய்வதற்கு முன்பு முஸ்லிம் என தங்களைக் கூறிக் கொள்பவர்களுடைய நடத்தை,பண்புகளில், அடுத்தவர்களோடு பழகுவதில் பண்பும் நன்னடத்தையும் இல்லாவிட்டால் நிச்சியம் நாம் இறுதியில் அடைவது தோல்வியும் ஏமாற்றமும் எல்லாவற்றுக்கும் மேலால் இந்த நாட்டில் வாழும் 9% வீதமான மக்களுக்கு இழி​வையும் கேவலத்தையும் மாத்திரம்தான் விட்டுச் செல்ல முடியும்.அதாவது ஸஹ்ரான் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு விட்டுச் சென்ற அந்த வடுவுக்கு எந்தவகையிலும் குறைவாக இருக்காது.

    ReplyDelete
  4. 🤷‍♂️🙊🙆‍♂️🖕🖕🖕🖕🖕🖕

    ReplyDelete
  5. y ware illatti thirumbawum nattule kollappathe undaakke poreegela

    ReplyDelete
  6. Why you want to inform general public ? Who are you ? You represent salafi sect not entire muslims. Why you issue letter in Sinhala to media before Gazzette notification. Your purpose is put oil in the fire that's why you want to do demonstration then anti muslim groups do demonstrations against this. You are agents of Dhajjal followers.

    ReplyDelete

Powered by Blogger.