Header Ads



ரிஷாட் பதியுதீன் சிறையில் வாடும்போது, மௌனம் காப்பது மிகுத்த மனவேதனையளிக்கின்றது - மாநகரசபை உறுப்பினர் மனாப்


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் கேட்டு வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்ற எமது பிரதிநிதிகள் கூட கட்சியின் தலைமை  ரிஷாட் பதியுதீன்  சிறையில் வாடும்போது மௌனம் காப்பது மிகுத்த மனவேதனையளிக்கின்றது என் 

கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம் அப்துல் மனாப் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

இவர் இது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

இந்த அரசாங்கம்  தலைவர் ரிஷாட் பதியுதீன்  மீது முன்வைத்திருக்கும் இரண்டு குற்றச்சாட்டுக்களும் அவரது தனிப்பட்ட நலன்களோடு அல்லது பொருளாதார ஊழல்களோடு சம்பந்தப்பட்ட ஒன்றல்ல..  வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து அகதிகளாக தஞ்சம் அடைந்த வடபுலத்து முஸ்லிம்களுக்கு வாழ்க்கை  கொடுத்ததை குற்றம் என்று இந்த அரசாங்கம் கண்டிருக்கிறது.  

அதே வடபுலத்து மக்கள் தனது சொந்த மண்ணில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அவர்களையும் வாக்குச்சாவடிக்கு அனுப்பியதை குற்றம் என்று இந்த அரசாங்கம் கண்டிருக்கிறது.

20வது சீர்திருத்தறிக்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்களான எமது பிரதிநிதிகள் கூட தலைமையின் விடுதலை பற்றி பாராளுமன்றில் குரல் கொடுக்காதது மிகுந்த மனவேதனையளிக்கின்றது.

இந்த நிலையில் அம்பாறை மாவட்ட மக்களின் குறைதீர்த்து எம்மை அபிவிருத்தியின் உச்சத்திற்கு கொண்டு சென்று சமூகம் சார்ந்த பிரச்சினைகளை தீர்த்த எமது தலைமைக்காக அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளின் மூலம் பாராளுமன்றம் சென்ற எமது பிரதிநிதிகள் கூட மௌனம் காப்பது அம்பாறை மாவட்ட மக்களுக்கும் கட்சியின் ஆதரவார்களுக்கும் மிகுந்த மனவேதனையளிக்கின்றது. 

அடையாளத்துக்காகவாது ஒரு கறுப்பு பட்டியாவது அணிந்து பாராளுமன்றம் சென்றீர்களா எனவும் இவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

- ஏ.பி.எம்.அஸ்ஹர்  -


2 comments:

  1. its really injustice for Mr.Risad revenging on him,

    ReplyDelete
  2. அரசியல் செய்வதற்கு நிதானம் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் வானூர்தி வெடிக்கும் சிறைக்கதவு திறக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.