Header Ads



இலங்கை பேராசிரியரால் 104 புதியவகை சிலந்திகள் கண்டுபிடிப்பு - ஒன்றுக்கு தமது மனைவியின் பெயரை சூட்டினார்


இலங்கை பேராசிரியர் ஒருவர் 104 புதிய சிலந்தி இனங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

அடிப்படை ஆய்வுகளுக்கான தேசிய நிறுவனத்தின் சுற்றுச்சூழல் உயிரியல் ஆராய்ச்சி திட்டத்தின் தலைவராக உள்ள பேராசிரியர் சுரேஷ் ஜி. பெஞ்சமின் என்பவரே இச் சிலந்தி இனங்களை கண்டுபிடித்துள்ளார்.

பேராசிரியர் மேலும் 50 புதிய இனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இது தொடர்பான முயற்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

104 சிலந்தி இனங்களில் 82 இனங்கள் இலங்கையிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் 22 சிலந்தி இனங்கள் மற்ற நாடுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இந்தோனேசியாவிலிருந்து 7 இனங்களும், பிரேசில் மற்றும் இந்தியாவிலிருந்து தலா 4 இனங்களும், மலேசியாவிலிருந்து 3இனங்களும், மடகஸ்கர் மற்றும் டொமினிகனில் இருந்து 2 சிலந்தி இனங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பேராசிரியர் தாம் கண்டறிந்த சிலந்தி இனங்களில் ஒன்றிற்கு தனது மனைவியின் பெயரான துஷானி பெஞ்சமின் என்னும் பெயரை சூட்டியுள்ளார்.

நாட்டில் உள்ள பல்லுயிரியலுக்கு தீங்கு விளைவிப்பது, சிலந்திகளின் உயிர்வாழ்வை அச்சுறுத்துகிறது. அதன்படி, நாட்டின் காடழிப்பை குறைப்பதன் மூலம் பெருந்தொகையான பல்லுயிர்கள் பாதுகாக்கப்ப்டும் என்று பேராசிரியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் சுரேஷ் சிலந்திகள் அதன் வலையை சுழற்றும் விதம் குறித்து ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.