Header Ads



ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள, பிரதேச மக்களுக்கான அறிவித்தல்


ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பிரதேசங்களில் தற்போது அத்தியாவசிய சேவைகளை விநியோகிக்கும் சில நிறுவனங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 


பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். 


இன்று (09) காலை தொடக்கம் இரவு 8 மணி வரை சதொச, மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள், மீன் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள் விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி அருகில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள பிரதேச மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் .


அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்வதற்காக ஒரு வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே விற்பனை நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார். 


அதற்கு எதிராக செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார். 


கம்பஹா மாவட்டத்தின் 18 பொலிஸ் அதிகார பிரிவுகளுக்கு தற்போதைய நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.