Header Ads



இங்கிலாந்தின் கொரோனா தடுப்பூசியை, போட்டுக்கொள்பவர்கள் குரங்குகளாகிவிடுவர் - மிரட்டும் ரஷியா


ஆக்ஸ்போர்டு கொரோனா ஊசியை போட்டுக்கொள்பவர்கள் குரங்குகளாகிவிடும் அபாயம் இருப்பதாக ரஷியா வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இங்கிலாந்தில் தயாராகும் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி சிம்பன்ஸி கொரோனா வைரஸ் பயன்படுத்தப்படுவதால், அதை போட்டுக்கொள்வோர் குரங்குகளாக மாறிவிடுவார்கள் என ரஷ்யா பிரச்சாரம் செய்து வருகிறது.

இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் எந்த தடுப்பூசியுமே அபாயமானதுதான் என்ற கருத்து படங்கள் மூலமும், வீடியோக்கள் மூலமும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

அத்துடன், இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் சில ரஷியாவின் பிரபல தொலைக்காட்சியிலும் வெளியிடப்பட்டு வருகின்றன.பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் குரங்காகிவிட்டது போன்ற ஒரு புகைப்படமும், ஒரு குரங்கு, தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் ஆய்வக உடையில் இருப்பது போன்ற புகைப்படம் முதலான புகைப்படங்களும் ரஷியா வெளியிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.