Header Ads



ரியாஜ் பதியுதீனின் விடுதலையில் எவ்வித, அரசியல் அழுத்தங்களும் இருக்கவில்லை - பொலிஸ் பேச்சாளர்


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் இல்லாமைக் காரணமாக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன இன்று -02- தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்திருந்தமை தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது இவ்வாறு பதிலளித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கான ஆதாராங்கள் தொடர்பில் விசாரணைக்காக கடந்த ஐந்து மாதங்களாக அவர் தடுப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

குற்றம் நிரூபிக்கப்படாத போது சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரை தொடர்ந்து தடுத்து வைத்திருக்க முடியாது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை. விசாரணைகளின் போது அவருக்கு சம்பவத்துடன் தொடர்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

அவரின் விடுதலைக்கு எவ்வித அரசியல் அழுத்தங்களும் இருக்கவில்லை என்றும் பேச்சாளர் தெரிவிததுள்ளார்.

1 comment:

  1. Let’s hope there’s no deal of Rishad joining the Government in return of his brother’s release.

    ReplyDelete

Powered by Blogger.