Header Ads



நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது, வதந்திகளை நம்பாதீர்கள் - சுகாதார அமைச்சு


பேலியகொட மீன் சந்தையில் ஏற்பட்ட கொரோனா தொற்றுப் பரவலே தற்போது கொத்தணி பரவலாக  மாற்றம் பெற்றுள்ளது. 

இந்நிலையில், நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மீன் வியாபாரிகள் பலருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. 

இந்நிலையில்,  நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சதாசிவம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதேவேளை கோட்பாட்டு அடிப்படையில் எந்த ஒரு மேற்பரப்பிலும் கொரோனா வைரஸ் காணப்படும் என்பதால் சமைப்பதற்கு மீனை தயாரிக்கும் போது அல்லது சேமித்து வைக்கும் போது முகத்தை கைகளால் தொடுவதை தவிர்ப்பதுடன் சமையல் பாத்திரங்கள் மற்றும் கரங்களை நன்கு கழுவி கொள்ளுதல் வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அடிப்படையற்ற விதத்தில் மீன் சந்தைகளை மூடுவது அனாவசியமாகும். ஆகையால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நெறிமுறையான முகக் கவசம் அணிதல் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் கைகளை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவுதல் ஆகியவற்றை இறுக்கமாக பின்பற்றி மீன் சந்தை தொடர்ந்து நடத்தலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிட தக்கது. 

1 comment:

  1. முஸ்லீம் பெண்கள் முகத்தை மூடக்கூடாது என தடை கொண்டுவர பார்த்தார்கள். இறைவன் எல்லாருடைய முகத்தையும் மூட வைத்தான்.

    இறைச்சிக்காக மாடு அறுக்கக்கூடாது என சட்டம் இயற்ற பார்த்தார்கள். மீன் கூட உண்ண அச்சப்படக்கூடிய அளவுக்கு நிலைமையை மாறிவிட்டது.

    மனிதன் நேரடியாக செய்யும் சதித்திட்டத்தை இறைவன் எப்படி முறியடிக்கிறான் எனபதை மனிதன் புரிந்து கொண்டால் போதும்.

    ReplyDelete

Powered by Blogger.