Header Ads



நீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலையத்தில் இயங்கும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது  புத்தளத்திலிருந்து 222 இ.போ.ச. பஸ்களில் 12 ஆயிரம் இடப்பெயர்ந்த வாக்காளர்களுக்கு சிலாவத்துறை பகுதிக்கு வாக்களிக்கச் செல்ல போக்குவரத்து வசதிகளை செய்துக் கொடுத்தமை ஊடாக , நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீள் குடியேற்றுவதற்கான திட்டத்தின் 9.5 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியமை  தொடர்பிலான குற்றச்சாட்டின் கீழ் ரிஷாத் பதியூதீன் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.


இந் நிலையிலேயே அவர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக மேற்கண்ட நிலையத்திற்கு நேற்றிரவு அனுப்பி வைக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் துஷாரா உபுல்தேனியா குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் செய்ய வேண்டியதை ஒரு அரச அமைச்சர் செய்திருக்கிறார். முறைப்படி பார்த்தால் தேர்தல் ஆணைக்குழு இவருக்கு நன்றி சொல்ல வேண்டும், அரசாங்கம் கௌரவ படுத்த வேண்டும். 12000 வாக்குகள் வீணாக்காமல் பயன்படுத்த பட்டுள்ளன. மேலும் அரச சேவை என்பதனால் அதற்க்கு பாரிய அளவில் சேவைக்கழிவு (விலை) வழங்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது பொது மக்களுக்காக பொது போக்குவரத்து சேவை என்பதால், அரசாங்கம் இதை பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனாலும் இவர் அதற்கான செலவுகளை செலுத்தி உள்ளார் என்று நீதி அமைச்சர் சுட்டி காட்டியும் உள்ளார். இதற்கு மேலும் கைது என்பது பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் இனவாதிகளை ஊக்கமூட்டும் நடவடிக்கை என்று சொல்லுவதை விட வேறு என்ன இருக்கின்றது ?

    ReplyDelete
  2. The ONE who not respected COURT is out side
    The ONE who arrange transportation to cast vote to establish democracy is inside.

    Fate of Sri Lanka...

    ReplyDelete
  3. Allah will always help for the good deed.

    ReplyDelete

Powered by Blogger.