Header Ads



கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் வங்கி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை



வங்கிக் கணக்குகளில் கறுப்புப் பணம் புழக்கத்தில் விடப்பட்டதற்காக வங்கி முகாமையாளர்கள் உள்ளிட்ட பொறுப்பான அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.


கடந்த இரண்டு வருடங்களில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 480 மில்லியன் ரூபாய் பணம் வங்கி கணக்கில் பரிமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்குகளை நடத்தி செல்வது தொடர்பில் அந்தந்த வங்கி கிளைகளின் முகாமையாளர்கள் பொறுப்பு கூற வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.


போதைப் பொருள் கடத்தல்காரர்களின் வங்கி கணக்குகளில் பல கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதனை தொடர்ந்து வங்கிகளின் பிரதானிகளை பாதுகாப்பு அமைச்சிற்கு அழைக்க பாதுகாப்பு செயலாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.


இவ்வாறான சம்பவங்களினால் வங்கிகளின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என பாதுகாப்பு செயலாளர் வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.


அத்துடன் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் அதிக பணத்தை வைப்பில் வைக்க அனுமதி வழங்கிய தனியார் வங்கிகளின் பிரதானிகள் தனியாக அழைக்கப்பட்டு அறிவுத்தப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. How about those who have deposited Hundreds of Millions of Dollars of Black money in Off shore Banks in Foreign countries? Will any action be taken against the culprits regardless of their status and to bring back all the ill-gotten money to Sri Lanka?

    ReplyDelete

Powered by Blogger.