Header Ads



ஷார்லி ஹெப்டோ பத்திரிக்கையை தடை செய்க - பிரான்ஸ் தூதுவராலயத்தில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் கடிதம்


முஹம்மது நபியென கூறி மீண்டும் கேளி சித்திரம் வரைந்துள்ள “ஷார்லி ஹெப்டோ” பத்திரிக்கைக்கு பிரான்ஸ் அரசு தடை விதித்து, பத்திரிக்கை ஆசிரியர் உள்ளிட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் இறுதி இறைத் தூதராவார். முஹம்மது நபியவர்களின் வழிகாட்டல்களை உலகின் 125 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பின்பற்றி வருகின்றனர். முஸ்லிம்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை தம் உயிருக்கும் மேலாக நேசிப்பதுடன், வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் முஹம்மத் நபியின் வழிகாட்டல்களை செயல்படுத்தும் வகையில் அவருடைய சொல், செயல், அங்கீகாரம் அனைத்தையும் முழுமையாக மனிதர்கள் பின்பற்ற வேண்டும் என இஸ்லாம் மனிதர்களுக்கு கற்றுத் தருகின்றது.

தமது வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை பின்பற்றி வரும் இஸ்லாமிய சமூகத்தில் இதுவரை முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு எந்த முஸ்லிம்களும் சிலை வைத்ததில்லை. எவரும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் உருவம் இதுதான் எனக் கூறி புகைப்படம் கூட வெளியிட்டதில்லை. 

முஹம்மத் நபியவர்களை கண்ணால் காணவில்லை என்றால் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் அனைத்தையும் தம் வாழ்வில் பின்பற்றி வாழ்வதுடன் தம் உயிரை விட மேலாக முஹம்மத் நபி (ஸல்) அவர்களை முஸ்லிம் சமூகம் நேசிக்கின்றது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் “ஷார்லி ஹெப்டோ” என்ற பத்திரிக்கை மீண்டும் முஹம்மத் நபியவர்களை கார்ட்டூன் சித்திரமாக சித்தரித்து பிரசுரித்து உலக முஸ்லிம்களின் நெஞ்சில் குத்தியுள்ளது.

இதற்கு முன் கடந்த 2011ம் ஆண்டு இதே பத்திரிக்கை முஹம்மத் நபியவர்களின் கேளி சித்திரம் என்ற பெயரில் இதே போன்ற காரியத்தில் ஈடுபட்டது. அந்நேரத்தில் சர்வதேச மட்டத்தில் குறித்த பத்திரிக்கைக்கு எதிரான கண்டனக் குரல்கள் எழுந்ததுடன், பல நாடுகளில் முஸ்லிம்கள் வீதியில் இறங்கி ஆர்பாட்டமும் செய்தார்கள்.

2011ம் ஆண்டு வெளியிட்ட அதே கார்ட்டூன் சித்திரங்களை மீண்டும் வெளியிட்டு முஸ்லிம்களின் மனதை புன்படுத்தியுள்ளதுடன், திட்டமிட்ட வகையில் முஸ்லிம்களை சீண்டியுள்ளது. 

உலக நாடுகளுக்கு ஜனநாயகம், மனித உரிமை, மத உரிமை தொடர்பில் பாடம் நடத்த முயலும் பிரான்ஸ் போன்ற நாடுகள் முஸ்லிம்களை மீண்டும் மீண்டும் சீண்டி இன்பம் காண நினைப்பது வெட்க்கக் கேடான ஒன்றாகும்.

எனவே, ஷார்லி ஹெப்டோ பத்திரிக்கையின் இந்த செயல்பாட்டை கண்டிப்பதுடன், குறித்த பத்திரிக்கையை உடனடியாக தடை செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு பிரான்ஸ் அரசுக்கு இலங்கையின் பிரான்ஸ் தூதுவராலயம் வலியுறுத்த வேண்டும் என்றும் முஸ்லிம்கள் சார்பில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ கோரிக்கை வைக்கிறது.


R. அப்துர் ராசிக் B.Com 

பொதுச் செயலாளர், 

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ

6 comments:

  1. Well done brothers. JazakAllah khairan.

    ReplyDelete
  2. First we need to banned 🚫 CTJ .....danger group

    ReplyDelete
  3. Please ban CTJ and SLTJ this both groups are danger the charlie hebdo news paper.
    Charlie hebdo editors are kuffar but ctj&sltj are munafik.

    ReplyDelete
  4. CTJ should be banned first in Sri Lanka.

    ReplyDelete
  5. உள்நாட்டில் நிறைய பிரச்சினைகளை உண்டு பண்ணிவிட்டு, இப்போ வெளிநாட்டிலுமா?

    ReplyDelete
  6. Mr. Hubail,

    Does this mean, You are oppose to the demand to ban CHARLY HEPTO, who make fun of our beloved Muhammed (sal) ? Hope you are a Muslim. If so you too should oppose the act of CARLY HEPTO is it?

    I do not agree with CTJ in many issue.. BUT in this case I agree with them.

    Once you hate, do not blindly oppose their good works also.

    ReplyDelete

Powered by Blogger.