Header Ads



பாபர் மசூதியை இடிப்பதற்கு உதவிய, இந்துமத வெறியர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலை - இந்திய நீதிமன்றம் விசித்திரத் தீர்ப்பு


உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் திகதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். 


பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. பொலிஸார் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். 


17 பேர் இறந்து விட்டதால், மீதி 32 பேர் மீது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கை ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்து தீர்ப்பளிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பின்னர் மேலும் ஒரு மாதம் அவகாசம் அளித்து, செப்டம்பர் இறுதிக்குள் தீர்ப்பளிக்குமாறு உத்தரவிட்டது. 


அதன்படி இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தீர்ப்பு வழங்கினார். அப்போது, பாபர் மசூதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரையும் விடுவிப்பதாக அறிவித்தார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்களை போதிய ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்கத் தவறியதால் 32 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 


இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி 32 பேரில் 26 பேர் ஆஜராகினர். வயது முதிர்வு காரணமாக அத்வானி (92), முரளி மனோகர் ஜோஷி (86), உடல்நலம் பாதிக்கப்பட்ட உமாபாரதி, கல்யாண் சிங் மற்றும் சதீஷ் பிரதான், மகந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் ஆஜராகவில்லை. காணொலி வாயிலாக ஆஜராகினர். 


தீர்ப்பு வழங்குவதை ஒட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதேபோல் நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

3 comments:

  1. வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் வழங்குவார்கள் என்பது உண்மைதான். அது சட்டத்தின்படியான தீர்ப்பாக இருந்தால் குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்கும். அக் குற்றவாளியே குற்றத்தைச் செய்தபடியால் அவன் எந்தவகையிலும் பாதிக்கப்படமாட்டான். ஆனால் நீதி பொய்க்குமானால் பலர் பாதிக்கப்படுவார்கள். பொய்ச் சாட்சியம் அளித்தவரகள், பிழையாக தகவல்களை வழங்கியவரகள், வழக்கினை பிழையாக வழி நடத்தியவரகள், உண்மையை மறைத்து பிறழ்வான முறையில் வழக்கை நடத்திய வழக்கறிஞர்கள், இதற்கு மேலால் பதவிக்கும் பணத்திற்கும் அடிபணிந்த நீதிபதிகள். நீதிபதிகளின் தீர்ப்பை பணத்திற்கு வாங்கிவிடலாம். கடவுளின் தீர்ப்பை பணத்திற்கு வாங்க முடியாது. இது அவர் அவரது குடும்பம், குடும்பத்தின் குடும்பம் என்று சுற்றிச் சுழன்று கொண்டே இருக்கும். ஜாக்கிரதை.

    ReplyDelete
  2. அங்கு மட்டுமா விசித்திரம்...

    ReplyDelete
  3. Justice who gave judgement resigned in two hours and joined BJP, it is said.

    ReplyDelete

Powered by Blogger.