Header Ads



ஸம்ஸம் நிறுவனத்தின் ஏற்பாட்டில், தெல்தெனிய அல் ஹிஜ்றா வித்தியாலயத்திற்கு 3 மாடிக் கட்டடம்


கண்டி, தெல்தெனிய அல் ஹிஜ்றா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு புதிய மூன்று மாடிக் கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் இன்று 2020.09.22 ஆம் திகதி ஸம் ஸம் பவுண்டேஷன் தலைமையகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

பாடசாலையின் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக ஸம் ஸம் நிறுவனம் இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கிறது.

இந் நிகழ்வில் ஸம் ஸம் பவுண்டேஷனின் தலைவர் முப்தி யூசுப் ஹனிபா மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், அல் ஹிஜ்றா முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பள்ளிவாயல் நிருவாக சபைத் தலைவர் உட்பட ஊரின் நலன்விரும்பிகளும் கலந்து கொண்டனர்.

பாடசாலைகளுக்குப் பங்களிக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் ஸம் ஸம் நிறுவனம் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த அடிப்படையில் நுவரெலியா ஸாஹிரா வித்தியாலயத்திற்கு இரண்டு மாடி ஆசிரியர் விடுதி, ஹொரவப்பொத்தானை முஸ்லிம் வித்தியாலயத்திற்கான வகுப்பறைக் கட்டடம், மஸ்கெலிய முஸ்லிம் வித்தியாலயத்திற்கான இரண்டு மாடிக் கட்டடம், வெலிகல்ல -எல்பிடிய அல் அமான் வித்தியாலயத்திற்காக நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வகுப்பறைக் கட்டடத் தொகுதி என்பன இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.