Header Ads



தேசியப் பட்டியலுக்கான மோதல் - வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு தாக்கப்பட்ட பிக்கு


எங்கள மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரான தான் வசிக்கும் விகாரைக்கு வந்த சிலர் தன்னை தாக்கியதாக வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் மக்கள் சக்தியினரின் தேசியப் பட்டியல் விவகாரம் சிக்கலாகியிருக்கிறது.

இந்நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் கிடைத்த வாக்குகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை பெற்றுக்கொண்டுள்ள எங்கள் மக்கள் சக்தி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மோதலான நிலைமை கைகலப்பு வரை சென்றுள்ளது.

எங்கள மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரான தான் வசிக்கும் விகாரைக்கு வந்த சிலர் தன்னை தாக்கியதாக வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் இதுவரையில் இந்த விடயம் தொடர்பாக தலையீடுகளை செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தான் வசித்து வரும் விகாரையில் வசிக்கும் அரம்பேபொல ரதனசார தேரர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வீட்டுக்கு தடுத்து வைத்து அவரை தாக்கியுள்ளதாகவும் விமலதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தன்னை நியமிக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்து வருகிறார்.

எனினும் அந்த கட்சியின் பொதுச் செயலாளரான விமலதிஸ்ஸ தேரர், தேசிய பட்டியலில் தன்னை நியமிக்குமாறு கூறி, தேர்தல் ஆணைக்குழுவில் கடிதத்தை வழங்கி விட்டு தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.