Header Ads



பள்ளிவாசல் தாக்குதல் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை - நியூஸிலாந்து பிரதமரின் பிரதிபலிப்பு இதோ



நியூஸிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் கடந்த ஆண்டு இரண்டு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தி 51 பேரை கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


டர்ரன்டுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து அறிந்த நியூஸிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டென் கூறுகையில், "குற்றவாளியை பற்றி இனி சிந்திக்கவோ, அவர் கூறுவதை கேட்கவோ நமக்கு இனி எதுவும் இல்லை என்பதே இத்தீர்ப்பின் அர்த்தம்" என தெரிவித்தார்.


மேலும், "தீவிரவாதி என்று குறிப்பிடப்படும் நபர் குறித்து கேட்பதோ பேசுவதோ இதுவே கடைசி நாளாக இருக்கும் என நம்புகிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டார்.



1 comment:

  1. சட்டத்தையும் நீதியையும் மதித்து சட்டத்தின் அனைவரும் சமன் என்ற தத்துவத்தை செயல்படுத்தி ஆட்சி செய்யும் நியூஸிலாந்து பிரதமர் ஜெஸின்தா ஆர்டன் அவர்கள் முழு உலகத்துக்கும் முன்மாதிரியான ஒரு பிரதமராக விளங்குகின்றார். அனைவரும் அவரிடமிருந்து பாடம் படித்துக் கொள்வோம்.

    ReplyDelete

Powered by Blogger.