Header Ads



7 மாவட்டங்கள் அபாய, வலயங்களாக அறிவிப்பு

டெங்கு நோய் பரவும் அபாயமுள்ள மாவட்டங்களாக இலங்கையின் ஏழு மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விடயத்தை தேசிய டெங்கு நோய் தடுப்பு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் அருண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இந்த நிலையில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்து காணப்படுகிறது.

மேலும் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 23934 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.