Header Ads



இலங்கையில் பௌத்த பிக்குகளுடன், உறவுகளை வலுப்படுத்தும் சீனா

- வையோன் -

இலங்கை அடுத்த ஆறு நாட்களில் தேர்தலில் கொரோனா வைரசினால் தாமதமான தேர்தலில் வாக்களிக்கவுள்ளது ஆனால் தற்போது சீனா தேர்தலில் தலையிடுகின்றது.

இலங்கையில் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் பரவாயில்லை தான் இந்த தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என சீனா விரும்புகின்றது.

இதன் காரணமாக இலங்கை அரசியலில் மிகப்பெரும் செல்வாக்கும் செலுத்தும் பிரிவினரான பௌத்த மதகுருமார்களுடனும் அவர்களின் தலைவர்களுடனும் சீனா உறவை ஏற்படுத்த முயல்கின்றது.

கடந்த வருடம் தாமரை தடாகம் இலங்கையில் திறந்து வைக்கப்பட்டது.350 மீற்றர் உயரமான கோபுரம் சீனாவால் உருவாக்கப்பட்டது.

பௌத்த மதத்தின் புனித நூலொன்றை அடிப்படையாகவைத்து இந்த பெயர் சூட்டப்பட்டது.

கோபுரத்தின் வடிவமைப்பு கூட பௌத்தத் பின்னணியை கொண்டதாக காணப்படுகின்றது.

தாமரை தடாகம் சீன பௌத்த இராஜதந்திரத்துக்கு ஒரு சிறந்த உதாரணம்.இது 2015 இல் இடம்பெற்ற இன்னொரு தேர்தலுடன் தொடர்புபட்டது.

அவ்வேளை ராஜபக்சாக்களின் பிரச்சாரத்துக்கு பெருமளவு சீன நிதியுதவி கிடைத்ததாகவும்,அந்த நிதியின் ஒரு பகுதி பௌத்த மதகுரு ஒருவருக்கு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 7 மில்லியன் டொலர் பெறுமதியான பணம் இந்த விவகாரத்தில் தொடர்புபட்டுள்ளது இந்த நிதியை அம்பாந்தோட்டை துறைமுகத்தை உருவாக்கிய சீனா ஹார்பர் என்ற நிறுவனம் வழங்கியுள்ளது.
இதில் 38,000 ம் அமெரிக்க டொலர் ராஜபக்ச ஆதரவாளரான பிரபல மதகுருவுக்கு சென்றுள்ளது.ஆனால் ராஜபக்ச தேர்தலில் வெற்றிபெறாத அதேவேளை சீன இராஜதந்திரிகள் புதிய நண்பர்களை இனம் கண்டுகொண்டனர்- பௌத்தமதகுருமாரே அவர்களுடைய புதிய நண்பர்கள்.
2015 இல் சீன தூதுவர் அஸ்கிரிய பீடத்தின் தலைமை மதகுருவை சந்தித்தார். இலங்கையின் இரண்டு முக்கிய பௌத்தமத தலைவர்களில் இவர் ஒருவர்.

கடந்த வருடம் அவர் முஸ்லீம்கள் நாட்டை அழித்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

கடந்த வருடம் இலங்கையின் பௌத்த மதகுருமாரின் குழுவொன்று சீனாவில் இடம்பெற்ற பௌத்த மாநாட்டில் கலந்துகொண்டது.

இலங்கையின் முக்கியமான அரசியல் பிரிவொன்றுடன் செல்வாக்கை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் சீனா பணத்தையும், நேரத்தையும்,இராஜதந்திரசேவைகளையும் பயன்படுத்துகின்றது.
சீனா பயன்படுத்த முயலும் அரசியல் பிரிவு இது மாத்திரமில்லை.

திபெத்தில் பௌத்தர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீனா இன்னொரு குறுகிய கால உறவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

2 comments:

  1. அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது; பின்னர் (அசத்தியம்) அழிந்தே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.
    (அல்குர்ஆன் : 21:18)

    ReplyDelete
  2. தமிழர்கள் நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் சீனா பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். வடகிழக்கில் சீனாவை பெரிய அளவில் கொண்டுவர அரசுகள் எடுத்த முயற்ச்சிகள் சர்வதேச ஆதரவுடன் தடுக்கபட்டுள்ளன. ஆனால் தமிழர்கள் வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் சீன செல்வாக்கு உயருவது பற்றி கவலை கொள்வதில்லை. தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு மலையக தமிழரைத் தவிர முஸ்லிம்களோடோ சீனாவை எதிர்க்கும் சிங்கள அமைப்புகளோடோ தொடர்புகள் இல்லை. இலங்கை 1. சிங்களவர், 2. தமிழர் + மலையகத் தமிழர் 3. முஸ்லிம்கள் என மூன்று அரசியல் பிரிவுகளாக மறி வருகிறது.

    ReplyDelete

Powered by Blogger.