Header Ads



பயங்கரவாத சஹ்ரான் குழு 2 வது, தாக்குதல் நடாத்த திட்டமிட்டிருந்தது

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் பெரஹரவை இலக்கு வைத்து இரண்டாவது தாக்குதல் நடாத்துவதற்கான திட்டம் பயங்கரவாதிகளிடம் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் சாய்ந்தமருது பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட வெடி சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு அமைய கிழக்கு மாகாணத்தில் சேவையாற்றிய அரச புலனாய்வு சேவை அதிகாரியிடம் நேற்று இரண்டாவது நாளாகவும் வாக்குமூலம் பெறப்பட்ட போது இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

முஸ்லீம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான சிப்லி பாறுக்இ சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பிற்கு பாரியளவு அரசியல் ரீதியான ஒத்துழைப்புகளை வழங்கியதாக குறித்த அதிகாரி இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் சஹ்ரான் ஹாசிம் மற்றுமொரு குழுவுடன் ஏற்பட்ட ஆலியார் மோதல் தொடர்பில் மட்டகளப்பு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கில் சஹ்ரான் தரப்பினர் சார்பில் சட்டத்தரணி மைத்ரி குணரத்ன அழைக்கப்பட்டிருந்தார்.

அப்துல் காதர் அன்சார் எனப்படும் சஹ்ரான் ஹாசிமின் மனையினது சகோதரர் ஊடாக சட்டத்தரணி மைத்ரி குணரத்ன அழைக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.

இதன்போது புலனாய்வு சேவை அதிகாரி மேலும் பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் இரண்டாவது தாக்குதல் நடாத்துவதற்கான திட்டம் காணப்பட்டதாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் கைது செய்யப்பட்ட நவ்பர் மௌலவி வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையை இலக்கு வைத்து இரண்டாவது தாக்குதல் நடாத்தப்படவிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. அனைத்தும் பொய் ..... உண்மை வெளிப்பட்டு விடும் என்ற பயத்தில் அவ்வப்போது இவ்வாறான பொய் செய்திகளை வெளிடுகிறது இந்த தாக்குதலை நட்திய கூட்டம் .

    ReplyDelete

Powered by Blogger.