December 18, 2019

18 சாதிகள் இஸ்லாத்துக்கு மாறி, சாதிகளற்று சம்பந்தம் பண்ணிக் கொண்டார்கள்


நடிகர் ராஜ் கிரண் தனது பதிவில்.... 

பிரித்தாளும் சூழ்ச்சி என்பது,
காலங்காலமாக 
புளித்துப்போன விசயம்...

இஸ்லாமியர்கள்,
அரபு நாடுகளிலிருந்து வந்தவர்கள் போலவும், அல்லது பாகிஸ்தான் தான்
அவர்களது நாடு என்பது போலவும்,
பாமர மக்களின் மனங்களில்
பிரிவினையை உண்டாக்குவதற்கான,
நச்சுக்கருத்துக்களை, காலங்காலமாக
விதைத்து வந்தனர், வருகின்றனர்...

இந்த பொய்ப்பிரச்சாரங்கள்
ஒரு காலத்திலும் செல்லுபடியாகாது...
சத்தியத்தை யாராலும் புதைத்து விட
முடியாது...

இங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும்
இந்துக்களின் இரத்த சொந்தங்கள்...

இந்து மதத்திலுள்ள தீண்டாமை போன்ற,
இன்ன பிற கொடுமைகளால்,
அந்த வாழ்க்கை முறையிலிருந்து தப்பித்து,
சுய மரியாதையைப்பேணவும்,
சமத்துவத்தை அனுபவிக்கவும்,
அதற்கு வழி வகுத்துத்தந்த
இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு
மாறியவர்கள்...

ஒவ்வொரு மனிதனும்,
தனக்குப்பிடித்த வாழ்க்கை முறையை
தேர்ந்தெடுத்துக்கொள்வது,
அவனவனுடைய அடிப்படை சுதந்திரம்.
இதை "இந்திய அரசியல் சாசன சட்டம்"
உறுதி செய்திருக்கிறது...

ஒரே தாய், தந்தையருக்கு பிறந்த
பிள்ளைகள், அவரவருக்கு பிடித்தமான
வாழ்க்கை முறையை
தேர்ந்தெடுத்துக்கொள்வதில்லையா,
அதே போலத்தான் இதுவும்...

எல்லா மதத்தினரும்
இந்திய தேசத்தின் பிள்ளைகளே...

என் தகப்பனாரின் மூதாதையர்கள்,
சேதுபதிச்சீமையின் மறவர் குலம்.

என் தாயாரின் மூதாதையர்கள்,
சேதுபதிச்சீமையின் மீனவர் குலம்.

எனது மூதாதையர் காலத்தில்,
சேதுபதிச்சீமையில்,
பள்ளு, பறை என்று 18 சாதிகள்
இருந்தனவென்றும்,
அவர்களில் பெரும்பாலானோர்
இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறி,
சாதிகளற்று, சம்பந்தம் பண்ணிக்
கொண்டார்கள் என்றும், என் தாயார்
எனக்கு சொல்லியிருக்கிறார்கள்...

அதனால், எல்லா சாதியிலும்
எனக்கு சொந்த பந்தங்கள் உண்டு...

பேதங்கள் அற்றதே பெரு வாழ்வு.
அதில் மனித நேயமே மாண்பு.

10 கருத்துரைகள்:

Islam is unrivalled and the only religion that is recognized by Almighty Allah.

எப்பவுமே நான் மதிக்கும் கலைஞன் ராஜ்கிரனுக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்

அப்படிப்போடு

மனிதன் என்பது மட்டும் தான் உண்மை.

Dear Raj Kiran Sir, If you are talking about Tamil Nadu Muslims (Islamic Tamils) I am 100% agree with you.
But North Indian Muslims are trouble makers like SL Muslims

your psycho AJAN... shut up your bloody mouth you cant talk anything about SL Muslims. We are not like you collect the money name of EELAM community and TAMIL peoples spending with sex workers. your racist comments always proof that there something wrong in your birth. un inaithai vaithu pilakkura parade thaneda nee...

Dear Admin why your giving more priority this AJAN when ever he is insulting a Muslims and our country? do you getting any money from this fellow? is this ethic of your journalism?well coming a comments from racist person while he insulting a our community there is good name about your news web around the Tamil news readers specially Tamil Muslim readers those who living around the world. but since you announce that your web become NO1 position your making new plate form to racist peoples.. many of our friends,well wisher noticed this. as a Muslims we feel very sad about you publishing the insulting comments of our community from this psycho AJAN. Afraid of ALLAH to give place to insult the your Muslim brothers.

ஈழமுமில்லை மூலமுமில்லாத காவி அஜன்.

உண்மையை உண்மையின் பிரகாரம் நவின்று "இஸ்லாமும் இந்தியரகளும்" என்ற பாடத்தையே சுருக்கமாக எல்லோருக்கும் விளங்கும்படி எடுத்துக்கூறிய ராஜ்கிரண் அவரகளுக்கு எனது வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் அன்னரரைப் பொருந்திக் கொள்வானாக.

Post a Comment