Header Ads



Ashen Senarathna விடை பெற்றார்...!

- முஹம்மட் பர்சாத் -

ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கொண்ட YouTube மற்றும், முகநூல் போன்ற சமூக ஊடகத்தில் சாதனையாளனாக வளர்ந்து வந்த இளம் ஊடகவியளாலர் அசேன் சேனாரத்னவின்
ரசிகனில் ஒருவனாக இதை பகிர்ந்துகொள்கிறேன்.
தன்னிடம் உள்ள ஊடகத்திறமையால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை தன் வசப்படுத்தி இன,மத வேறுபாட்டுக்கு அப்பால் இரு சமூகத்திலும் பிரதிபலிக்க வேண்டிய கருத்துக்களை வெளிக்
கொண்டு வருவார்.
சிறுபான்மை, பெரும்பான்மை என்ற 
சமூக வேறுபாற்றுடன் தேசிய ஊடகம்கள் செயட்பட்டபோது இவரின் நேர்மையான ஊடக பணி அவர்களுக்கு சவாலாகவும் இருந்தது.
அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள்,
கலைஞர்கள், புத்திஜீவிகள் என்று 
பல்வேறு தரப்புக்களை நேரடி கலந்துரையாடல் ஊடாக தனது ஊடகத்திறமையில் சிரிப்புடன் மடக்கிவிடும் துப்பறிவு கொண்ட ஒரு இளம் ஊடகவியளாலர் அசேன் சேனாரத்ன,
இவ்வாரு வளர்ந்து வந்த ஒரு இளம் ஊடகவியளாலர் தொடர்பான செய்தி ஒன்றை இவ்வாறு பார்க்க முடிந்தது,
செய்திகள்,
/ கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித்தை ஆதரித்தார் ஒருவேளை சஜித் தோல்வியடைந்தால் ஐந்து மில்லியன் பார்வையாளர்களைக் கொண்ட தனது YouTube பக்கத்தை அழித்து விடுவதாக பந்தயம் கட்டியதாகவும்,
சஜித்தின் தோல்வியின் பின் சொன்னமாதிரியே தனது YouTube கணக்கையும் முகநூலையும் அழித்துவிட்டதாகவும் செய்திகள் ஊடாக அறியமுடிகிறது /
இச்செய்தி 100% உண்மையானதாக 
இருந்தால் ? உன்னை கவர்ந்த ரசிகனில் ஒருவராக உன்னைப்பற்றி சிலவரிகளை எழுதிக்கொள்கிறேன்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் "ஜனாதிபதி தேர்தல்மக்கள் கணக்கெடுப்பு" நிகழ்வு சமூக ஊடகத்தில் கடும் தாக்கத்தை செலுத்தியது,
Galle face முன்றலில் நாட்டின் அனைத்து பாகத்திலும் இருந்து வந்து பொதுமக்களிடம் ஜனநாயக முறையில் அவர்களின் தெரிவை வழங்கி அதை கணக்கீடு செய்து வெளியிட்ட தேர்தல் கணிப்பீடு நிகழ்வானது எல்லோராலும் தொகுக்க முடியாத ஒன்றாகும்.
நாடு இக்கட்டான காலகட்டத்திலும் 
இன ரீதியான வன்முறை ஏற்பட்ட போதும் குறித்த பகுதிளுக்கு சென்று உண்மைகளை வெளிக்கொண்டு வந்த ஒர பெரும்பான்மை இனத்தை சேர்ந்த இளம் ஊடகவியளாலர் ஆவார்.
மினுவாங்கொடை பகுதிகளில் ஏற்பட்ட வன்முறையின் பின் தனியாக களப்பணி செய்து நடுநிலையாக செயட்பட்டு கருத்துக்களை வெளிக்கொண்டு வந்தவர் ,
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அவர்களுடனான சந்திப்பி ரஞ்சன் ரவெளியிட்ட கருத்துக்காக பெளத்த தேரர்களிடம் மன்னிப்புகேட்கும் நிலையை ரஞ்சனுக்கு சிக்கலை ஏற்படுத்திய ஒரு இளம் ஊடகவியலாளர்.
முன்னால் SLTJ, இன்னால் CTJ, 
அமைப்பின் முக்கிய பேச்சாளர் அப்துல் ராஸிக் அவர்களின் பிழையான வார்த்தை பிரயோகம் உட்பட ஏனைய விடத்தில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் அப்துர் ராஸிக் தொடர்பில் இருந்த தவரான நிலைப்பாட்டை, பெரும்பான்மை சமூகத்துக்கு சிரிப்புடன் கொண்டு சென்று 
அப்துர் ராஸிக் மீது ஏற்பட்ட களங்கத்தை ஓர் அலவு இல்லாமல் செய்த இன,மத,மொழி வேறுபாடுகளுக்கு அப்பாலான ஒரு இளைஞன்.
இவரது ஆளுமையால் அப்துல் ராஸிக்கை சிரிக்க வைத்தே அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை வெளிக்கொண்டு வந்த ஒரு துப்பறிவாளன்.
அரசியல்வாதிகள்,கலைஞர்கள்,
புத்திஜீவிகள் என்று அவர்களை நேரடியாக சந்தித்து விருவிருப்பாகவும், சுவாரஷ்யமாகவும்,புத்திசாலித்தனமாகவும் நிகழ்வுகளை தொகுத்து YouTube,முமநூலில் 
பதிவேற்றம் செய்து கருத்துக்களை மக்கள் மயப்படுத்தி வெற்றி நடைபோட்டு வந்தார்.
இவரின் அநேகமான காணொளிகளை பார்த்துள்ளேன். தனது சிரிப்புடனான சிக்கலான கேள்வியில் மாட்டிக்கொண்ட அரசியல்வாதிகளே அதிகம்!
உனது பந்தயப்படி YouTube, முகநூல் கணக்குகளை நீ முடக்கி விட்டாலும்,
உன்னை நீ ஒரு போதும் முடக்கி விடாதே,
உனது பந்தயத் தோல்வி
உன் பயணத்தின் தடையாக 
அமைந்து விட கூடாது,


No comments

Powered by Blogger.