Header Ads



சுவிட்சர்லாந்தில் முதன்முறையாக இலங்கை, முஸ்லிம் சகோதரிகளின் பட்டமளிப்பு விழா


ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத்தின் ஏற்பாட்டில், சிலீரன் மஸ்­ஜிதுல் ரவ்ளா பள்ளிவாசலில் நடத்தப்பட்டுவந்த இஸ்லாமிய கற்கை நெறிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பட்டமளிப்பு விழாவும் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 31.08.2019 அன்று சனிக்கிழமை Abenteuerspielplatz, Bernstrasse 1818953 Dietikon என்ற இடத்தில் மாலை 4 மணிக்கு நிகழ்வுகள் நடைபெறும்.

இலங்கை இஸ்லாமிய சகோதரியினால், முஸ்லிம் சகோதரிகளின் நலன்கருதி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த பாடநெறிகள் சிலீரன் மஸ்­ஜிதுல் ரவ்ளா பள்ளிவாசலில் நடத்தப்பட்டு வந்தது.

தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்ட இஸ்லாமிய கற்கை நெறிகளை ஓரு வருடம் வெற்றிகரமாக நிறைவுசெய்த, சகோதரிகளுக்கே, இவ்வாறு பட்டமளிப்புடன், சான்றிதழும்  வழங்கப்படவுள்ளது,

தப்ஸீர், அறபு, தஜ்வீத் ஆகிய விடயதானங்கள் இந்த பாடநெறிக்குள் உள்ளீர்க்கப்பட்டிருந்தன.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம், புதிய பாடநெறிகள், மஸ்­ஜிதுல் ரவ்ளா பள்ளிவாசலில் ஆரம்பமாகவுள்ளதுடன், புதிதாக ஹதீஸ் (சஹிஹுல் புஹாரி) கற்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் மேற்குறித்த பாடநெறிகளில் பங்கேற்க விரும்பும் சகோதரிகள், பள்ளிவாசல் நிர்வாகிகளை தொடர்புகொண்டு இதுபற்றிய மேலதிகத் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

"Grill Event"

அதேவேளை 31.08.2019 அன்று காலை 10.30 மணியிலிருந்து Grill Event நடைபெறவுள்ளது. ஒரு குடும்பத்திற்கான கட்டணம் 60 பிராங்குகள் ஆகும்.

இதுபற்றிய மேலதிக விபரங்களை 078 633 13 35 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும்.

No comments

Powered by Blogger.