June 11, 2018

அரச ஆதரவுடன், புலிகளினால் கொல்லப்பட்ட 600 முஸ்லிம்கள்

#இன்று_ஜுன்_11

-U.H Hyder Ali-

1990.06.11 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்கள் விடுதலைப்புலிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது மேலிடத்து அரச உத்தரவின் பெயரில் ஆயுதங்கள் தம்வசம் இருந்தும் விடுதலைபுலிகளுக்கு தாக்குதல் நடத்தாமல் தம்மிடம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் விடுதலைப்புளிகளிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்த 800 பொலிஸ் அதிகாரிகளில் 600 பேர் தமிழ்பேசும் சமுகத்தை சார்ந்த முஸ்லிம்கள் ஆவார்கள்.

ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாச புதிய ஆயுதங்களை கிழக்கு பொலிஸ் நியங்களுக்கு வழங்கி ஒரு கிழமையில் கிழக்கில் LTTE யின் கட்டளை தலைமைகளான கருனா அம்மான் மற்றும் கரிகாளன் தலைமையிளான குழுவிடம் ஒப்படைக்க 800 பொலிஸ் பாதுகாப்பு படையினரின் உயிர் தாரைவார்க்கப்பட்டது.

சரன் அடைந்தவர்கள் திருக்கோவில் பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஒன்றில் 3 நாட்கள் அடைத்து வைத்திருந்து 4காவது நாள் இரவு இவர்கள் திருக்கோவில் பகுதியில் உள்ள ஒரு காட்டுப்பகுதி சமவெளியில் வைத்து LTTE யின் பொலீஸ் பிரிவுக்கு பொறுப்பாய் இருந்த நடேசனின் மேற்பார்வையில் 800 பொலிஸ் அதிகாரிகளும் நிர்வாணப்படுத்தி கண்களும் கைகளும் கட்டப்பட்டு சுடப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சுடப்பட்டு பின்னர் ஒரே கிடங்கில் போட்டு பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டார்கள் .

இந்த சம்பவத்தின் போது துப்பாக்கிச்சூடு பட்டும் உயிர் தப்பிய இரண்டே இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மாத்திரம் தற்போதும் வாழ்ந்து வருகின்றார்கள்.

ஒருவர் ஹோமாகமையைச் சார்ந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபல் பின்னர் இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அடுத்தவர் ஒரு முஸ்லிம் இவர் பலாங்கொடையை சேர்ந்தவர்.

1994 சந்ரிகா பண்டாரநாயக ஜனாதியானதும் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆனைக்குளுவில் இந்த கிழக்கின் பொலிஸ் கொலை சம்பந்தமாக இவ் இருவரும் மாத்திரம் தான் இந்த சம்பவத்தில் இறுதிக் கட்டத்தில் சாவின் விளிம்பில் தப்பியவர்களாக சாட்சியம் அளித்தார்கள்.

பின்னர் அந்த திருக்கோயில் புதைகுழி அகழ்வுக்கும் ஆணைக்குழு சிபார்சு செய்தது….,.

ஒரு சிலதை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை

இந்த படுகொலைகள் சாதாரணமாக விடுதலைபுலிகள் செய்த கொலைகளுடன் இதுவும் ஒன்றாக கருத முடியாது. இந்த படுகொலைகள் அரச அனுசரனையில் விடுதலைப்புலிகள் நடத்திய கொலைகளில் மிகப்பெரிய படுகொலை யாகும். இம் மாதம் ஜுன் 11ம் திகதியோடு 28 வருடங்கள் கழிந்தும் இன்னும் இதன் மர்மங்கள் அகலவில்லை.

முன்னால் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜெரத்னவும் ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாசவும் விடுதலைப்புலிகளின் தலைமைகலும் மாத்திரமே இதன் மர்மங்களை அறிவார்கள்.

விடுதலைப்புலிகளின் கிழக்கு கட்டளை தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் கருனா அம்மான் கடந்த மகிந்த அரசில் பல முக்கிய பதவிகள் மற்றும் அமைச்சுக்கள் பொறுப்பாக இருந்தும் இந்த கொலைகளுக்குரிய பின்னனியை அரசு கண்டரிய தவறிவிட்டது.

விடுதலைப்புலிகளின் முன்னால் கிழக்கு கட்டளை தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் தற்போதைய முஸ்லிம் காங்கரஸ் உறுப்பினரும் முன்னால் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினருமாகிய அலிசாகிர் மௌலானாவின் பாதுகாப்பில் வெளிநாடு ஒன்றில் தங்கி மீண்டும் இலங்கை வந்தபோதும் அதன் பின்னர் அவர் அமைச்சு பதவி வகிக்கும் போதும். திரு விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களை பலமுறை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது அந்த நேரங்களில் ஒருமுறை இந்த போலீஸ் கொலைகள் சம்பந்தமாக அவரிடம் வினவியபோது அவர் அதற்கான ஒரு நீண்ட பதில் கூறினர். ஆனால் அந்த பதில் திருப்தியடைய முடியாததாலும் அந்த பதில் இப்பிரட்சினையை வேறு திசைக்கு கொண்டுசெல்லும் என்பதால் நான் இங்கு பதிவிட விரும்பவில்லை.

THE WTF TIMES இணையத்தில் வெளிவந்த 17 TERRORIST ATTACKS THAT SHOOK THE WORLD ஆக்கத்தில் இடம் பிடித்த இலங்கையின் இந்த கொலைக்களம்

இன்று 28 வருடங்களுக்கு பிறகு இவ்விடயத்தை நினைவுகூரும் நாம் அதே நேரத்தில் இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசபடைகளால் மேற்கொண்ட இன அழிப்பையும் மறந்துவிட முடியாது .

12 கருத்துரைகள்:

அரசாங்கத்திற்கு எப்போதும் முஸ்லிம் MPகள் ஆதரவு. எனவே இந்த படுகொலைகளுக்கு முஸ்லிம்களும் பொறுப்பு தான்.

ராணுவதாலேயே முடியாது எனதான் இந்தியாவிடமிருந்து வான்படைகளும் சீனாவிடம் இருந்து ரசாயன மற்றும் கொத்தணி குண்டுகளும் பாகிஸ்தானிடம் இருந்து பல்குழல் எறிகணைகள் மற்றும் கனரக ஆட்லெறியும் இஸ்ரேலிடமிருந்து ரேடார்களும் அமெரிக்காவிடமிருந்து போர்க்கப்பல்கள் மற்றும் கடல்வழி ஆயுத கடத்தல்களை தடுக்கும் வியூகங்கள் மற்றும் கருவிகள் கிடைக்கப்பெற்றன. இதிலே போலீசாரால் என்ன செய்திருக்க முடியும். மேலிடத்து உத்தரவால் தான் நான்கு நாட்கள் வரை நீடிக்கப்பட்டது.

இந்த இரு கிறுக்குகளுக்கும் மூளை கழிவுறுப்பில் வைத்து இறைவன் படைத்துவிட்டான் என்று நினைக்கிறேன்.

Two blood thirsty group the Srilankan politicians and Tamil Terrorist carried out barbaric act of killing innocent unarmed policemen.Nowhere in the world such a thing happened.Not only that but also so many army camps were ransacked and killed so many thousand innocent soldiers not because this terrorist are so strong
but because of help of Srilankan politicians.

It shows how brutal and how greedy these two group,in one camp I think it is Poonarin attack in which more than 2000 soldiers were killed and entire armory was taken by terrorist.according to some soldiers who worked in north during this time told that it is entirely backed by government politicians for the sake money and business.So for this two side this war is good business and good investment and became beggars wound. Yet they are civilized.

Now this two forces fought each other, did business(weapon) each other got together aiming Muslim culture, Muslim's food and Muslim's dress and want our ladies walk half naked.civilized?

Muslims never forget the atrocities and killings against them by Tamil terrorists.

இத்தனை அக்கிரமங்களுக்கு சேர்த்து தான் முள்ளிவாய்க்கால் மிகப்பெரிய ஒரு செய்தியை அநீதி இளைக்கும் தீவிரவாதிகளுக்கு விட்டு சென்றது

இத்தனை அக்கிரமங்களுக்கு சேர்த்து தான் முள்ளிவாய்க்கால் மிகப்பெரிய ஒரு செய்தியை அநீதி இளைக்கும் தீவிரவாதிகளுக்கு விட்டு சென்றது புலி பயங்கரவாதிகளின் அழிவு உலக அரங்கில் இந்த நூற்றாண்டின் மிக சிறந்த நிகழ்வு

Two LTTE's Ajan and Anusath. Very Clear...
You two deserved to go behind bars. not to write communal words.

Two LTTE's Ajan and Anusath. Very Clear...
You two deserved to go behind bars. not to write communal words.

ஒரு சிறுபான்மையினரை பாதுகாக்க என்று ஆயுதம் ஏந்திய புலிக்காட்டேரிகள் இன்னொரு அப்பாவி சிறுபான்மை இனத்தை மனிதர்கள் என்றே கருதாமல் கொண்று குவித்தனர். அதற்கான தகுந்த பாடத்தை அல்லாஹ் அவர்களுக்கு கற்றுக் கொடுத்து விட்டான்.

Tamil terrorists are dirty criminals and master killers.

Antha 800 police men la 2 per uyirudan irukirarkal. Ithai seithavarkal oruvar kooda ippa iruppathu santhegam.
Ithuthan awarkalukku thandanai.
Madintharkal LTTE

Post a Comment