Header Ads



'என் நாய் உங்களுக்கு வேண்டாமெனில், எனக்கு நீங்களே வேண்டாம்..."

"ஒரு மனிதனின் சிறந்த நண்பன் ஒரு நாய்" என்ற வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார், பெங்களூரைச் சேர்ந்த கரிஷ்மா வாலியா. கூர்கானில் (Gurgaon) வேலை செய்து வரும் இவருக்கு வீட்டில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஒரு நல்ல வேலையில் இருக்கும் ஆணை அவரது பெற்றோர் தேர்வு செய்து நிச்சயிக்க முடிவெடுத்த வேளையில்தான் கரிஷ்மா, தன் முடிவை கூறியிருக்கிறார். 

இவர் வளர்த்து வரும் செல்ல நாயின் பெயர், லூசி வாலியா. இவர் அந்த நாய் மீது கொண்டிருக்கும் அன்பை விளக்க இது ஒன்றே போதும். தனது பெயரின் பின்பாகத்தையே அதற்கும் கொடுத்திருக்கிறார் கரிஷ்மா. கரிஷ்மாவிற்காக அவரது வீட்டார் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளையிடம், அவர் ஒரு வார காலம் பேசிய முடிவில், அந்த திருமணம் ரத்து செய்யப்பட்டது! ஆம், இதற்கான காரணம் லூசி. இவர் லூசி மீது கொண்டுள்ள அன்பு. தனது அம்மாவிற்கு நாய் என்றால் பயம் என்பதாலும், இவர்களுக்கு நடுவில் நாய் வருவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தினாலும் அந்த நாயை விட்டு விட வேண்டும் என்று கூறுயிருக்கிறார். அதற்கு, கரிஷ்மா மறுப்பு தெரிவித்ததோடு, லூசியை ஏற்றுக் கொள்ளாவிட்டால், திருமணமே வேண்டாம் என்று உறுதியாகக் கூறிவிட்டார். இவர் கூறுகையில், "ஒரு வாரம் நாங்கள் பேசியிருக்கிறோம். அதற்குள் அவரின் கருத்துக்களை என்மீது திணிக்கிறார். இது எனக்கு மிகவும் எரிச்சலாகி விட்டது."

மேலும், இவர்களுடைய chatஐ, அப்படியே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வலைத்தளத்தில் போட்டிருக்கிறார். இது மிகவும் வைரல் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது. கரிஷ்மா திருமணம் வேண்டாம் எனக் கூறியதும், முதலில் அவரை சமாதானப் படுத்த பேசிவிட்டு, இறுதியில் 'நீ நாயைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்' எனக் கூறுயிருக்கிறார் அந்த ஆண். கரிஷ்மா வேண்டாம் எனக் கூறிய பிறகும், அவருடைய பெற்றோர்கள், இது நல்ல சம்பந்தம் என அவரை வற்புறுத்தி இருக்கிறார்கள். ஆனாலும், கரிஷ்மா இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்!

கரிஷ்மா நாய் மீது கொண்டுள்ள அதீத அன்பு, அவரது முகநூலில் முழுவதும் நிரம்பி வழிகிறது என்றே கூறலாம். மனிதன் மீதே மரியாதையோ, அன்போ வைக்காத இக்காலத்தில், தான் வளர்க்கும் செல்லப் பிராணியின் மீது இவர்கொண்டுள்ள காதல், ஆச்சர்யக் குறி போட வைக்கிறது!

-ந. ஆசிபா பாத்திமா பாவா

7 comments:

  1. Dog loves dog. Indians are getting westernised. Not a good sign. They will lose their identity

    ReplyDelete
  2. Nowfara is perfectly correct. I agree with her 100 percent.

    ReplyDelete
  3. நாய் நாயோடுதான் சேரும்

    ReplyDelete
  4. There might be story behind this.....

    ReplyDelete
  5. பிரச்சினை நாய் அல்ல; 'ஒரு பெண் எனது மேலாதிக்கத்தை மீறுவதா?' எனும் ஒரு ஆணின் (வரட்டுக்)கவுரவப் பிரச்சினைதான் இது!

    ReplyDelete
  6. என்னா எல்லாரும் இஸ்லாத்துக்கே முறனான , இயற்கை நடைமுறைக்கே மிகக் கேவழமான ஒன்ற ஆச்சரியமா எல்லாரும் பேசுரிங்க, அதுல வேர இந்த கேடுகெட்ட மோட்டுக்கருத்து வேர"ஆணின் வரட்டுக் கவுரவப் பிரச்சினைதான் இது" நல்லா இறுக்கு தாயே உங்களது மடமை. அவள் கேவழம் நாயோட குடும்பம் நடத்துரால் அதப்போய் உரிம'ண்டு நினைகிரீங்களே !!!!!!?
    எல்லாரும் போய் ஆரம்பத்துல இஸ்லாத்தப் படிங்க .
    அல்லாஹ் எம்மனைவருக்கும் விளக்கத்தை தந்தருள்வானாக.

    ReplyDelete
  7. Hi Jessliya, 1st of all tell us about you,weather you are a Muslim or non,man or woman and to whom belongs the profile picture?

    ReplyDelete

Powered by Blogger.