Header Ads



'ரமழான் பொறுமையின் மாதம்' - ரமழான் முத்துக்கள் (கேள்வி 6)

பொறுமை எனும் குணம் வார்த்தையாகவே பெரும்பாலோரிடத்தில் உள்ளது. சொற்பமானவர்களிடமே இந்த குணத்தை காணுகிறோம். பொறுமை இறைவனிடத்தி லிருந்து வருகின்ற ஓர் அருள். பொறுமை க்கு எதிரான குணங்கள் உணர்ச்சிவசப் படுதல் அல்லது கோபம் என்பனவாகும். இவை ஷைத்தானின் புறத்திலிருந்து வருவன.

இன்று நாட்டில் நடக்கும் திடீர்ச் சண்டை சச்சரவுகளுக்கு மூலக் காரணமே கோபம் தான். ஒரு கணம் பொறுமையுடன் சிந்தித்தால் மனிதன் இவைகளை தடுக்க முடியும். நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களிலெல்லாம் ஓடுகிறான். (புகாரி, முஸ்லிம்)

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழியுமுண்டு. மனிதன் சிந்திக்காமல் உணர்ச்சிவசப்படுவதால் பின்னர் வருத்தப் படுகின்றான். உதாரணமாக, ஒரு பெண்ணை பார்த்து உணர்ச்சிவசப்படு பவன் சிந்திக்காமல் பலாத்காரத்துக்கு துணிந்துவிடுகின்றான். பின்னர் வருந்து கின்றான். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ஷஷதிருமண முடிக்க வசதி (சக்தி) யுடையவர் திரு மணம் முடிக்கட்டும். முடியாதவர் நோன்பு நோக்கட்டும். அது அவரது பார்வைக்கும் கற்புக்கும் பாதுகாப்பளிக்கும்.

தன்குறிக்கோளில் தோல்வியடைபவன் ஒரு நிமிட முடிவில் தற்கொலைக்குத் துணிந்துவிடும் சம்பவங்கள் அதிகம். ஏன்? உள்ளங்களில் ஷைத்தானின் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இத்தகைய தீய செயல்களுக்கு காரணம் அவர்களின் அந்த ஒரு நிமிட முடிவுதான். அந்த ஒரு நிமிடமும் பொறுமையாக கழித்து விட்டால் துன்பப்பட வேண்டிய அவசிய மில்லை. எங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் போது கோபம் ஏற்பட் டால் உட்கார்ந்து கொள்ளட்டும். கோபம் அவரை விட்டும் நீங்கிவிட்டால் சரி, இல்லையேல் அவர் படுத்துக்கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார் கள். (திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எவன் தன் வாழ்வில் துன்பங்கள் நேரிடும் போது அதை சகித்துக் கொள்ள வேண் டும் என்று எண்ணுகிறானோ அவனுக்கு அல்லாஹ் சகிப்பபுத் தன்மையை வழங்கி விடுகின்றான். துன்பங்களை சகித்துக் கொள்ளும் தன்மையைவிட சிறந்த ஒரு அருட்கொடையை எவனும் பெற்ற தில்லை. அறிவிப்பவர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) (நூல் புகாரி முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக நோன்பு எனக்குரியது! அதற்கு நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறுகின்றான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடய மாகும். எனவே உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக் கள் பேச வேண்டாம், கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டை யிட்டால் நான் நோன்பாளி என்று அவர் சொல்லட்டும். (புகாரி 1904)

நேன்பு என்பது பட்டினி கிடந்து உண்ணாமல், பருகாமல் காலையிலிருந்து மாலைவரை இருப்பது மட்டுமல்ல. மாறாக இறைவனுக்காக நாம் ஆற்றவேண்டிய பல்வேறு தியாகங்களில் இந்த இரண்டும் இடம் பெறுகின்றன. ஏனெனில் மணமுடித்த மனைவியைப் பெற்றிருந்தும் அவளை அணுகாதிருப்பது. ஒரு பொய் கூறினால் பல இலட்சம் இலாபம் கிடைக்கும் என்று தெரிந்தும் பொய் பேசாதிருப் பது, கோபம், ஆத்திரம் பீறிட்டெழுந்தா லும் அடக்கிக் கொண்டு தவறான செயல் களை செய்யாதிருப்பது போன்ற பல ஒழுக்க முறைகளை உள்ளடக்கியதே நோன்பாகும். இது போன்ற ஒழுக்க முறை களைக் கைவிடும் போது அது நோன்பாக இறைவனால் ஏற்கப்படாது. (எவர் பொய் யான சொற்களையும் அதன் மீது செயல் புரிவதையும் மடத்தனமான செயல் புரிவதையும் விடவில்லையோ அவர் உண்ணாமல் பருகாமல் இருப்பதினால் அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை.) என்பது நபிமொழி. (புகாரி)

வல்ல இறைவன் கூறுகின்றான். அவர்கள் எத்தகையவரென்றால் செல்வ நிலையிலும் வறுமை நிலையிலும் செலவு செய்து கொண்டிருப்பார்கள். கோபத்தை யும் அடக்கிக் கொள்ளக் கூடியவர்கள். மனிதர் (களின் குற்றங்) களையும் மன்னி த்துவிடக் கூடியவர்ககள் அல்லாஹ்வோ நன்மை செய்வோரை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 03:134)

விசுவாசங் கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையைக் கொண்டு உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.  

எனவே ரமழான் மாதத்தில் என்னெ ன்ன பயிற்சிகளைப் பெற்றோமோ குறிப் பாக வீண் சண்டை சச்சரவில் ஈடுபடாமல், ஏசிப் பேசிக் கொள்ளாமல், மற்றவரைப் பற்றி குறை கூறி, புறம் பேசாமல், பொய் சொல்லாமல் வீணான செயல்களில் ஈடு படாமல் எம்மையும் புனித நோன்பையும் பாதுகாத்தோமோ அதே பயிற்சியை ரமழான் அல்லாத காலங்களிலும் கடை பிடித்து அல்லாஹ்வின் நல்லடியார்களாக வாழ்வோமாக!

கேள்விகள் -  6
ரமழான் பொறுமையின் மாதம்
1. நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான் என்ற ஹதீஸ் எந்த எந்த ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப் பட்டுள்ளது ?

2. எந்த அமலுக்கு நானே கூலி கொடுக்கிறேன் என்று அல்லாஹ் கூறுகிறான்?

http://www.jaffnamuslim.com/2013/07/2013_5711.html

No comments

Powered by Blogger.