Header Ads



கடலும், கப்ரும் - ரமழான் முத்துக்கள் (கேள்வி 3)

அறியாமைக் கால மக்களுக்கு அறிவூட்டுவதற்கும் நன்மையின் பால் வழிகாட்டுவதற்கும் வல்ல நாயனால் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புத வேதமே அல்குர்ஆன். எப்படி வாழ வேண்டும்? என்ற வாழ்க்கைப் பாதையை அறியாத மக்களாய் மனம் போன போக்கில் வாழ்ந்த மக்களுக்கு சுவனத்தின் பால் வழிகாட்டுவதற்கே இந்த இறைவேதம்.  இத்திருமறை நல்வழி எது? தீய வழி எது? என்று பிரித்துக் காட்டுகிறது. சுவர்க்கம் செல்வதற்கான பாதையை தெளிவாகக் காட்டித் தருகிறது. நரகத்திற்குச் செல்வதற்கான பாதையை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. 

அதிகமான முஸ்லிம்கள் தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற கடமைகளை நிறைவேற்றுவதும் நல்லமல்கள், நற்காரியங்கள் புரிவதும்தான் இஸ்லாம் என்று நம்பியிருக்கிறார்கள். குர்ஆனும் இதைத்தான் பேசுகிறது என்றும் நினைக்கிறார்கள். இந்த சிந்தனையை முஸ்லிம்களின் உள்ளங்களிலிருந்து சுத்தமாக எடுத்து திருமறை இதை விட அதிகமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கிறது என்பதை அவர்களுக்கு எடுத்துக் காட்டுவதும் குருட்டுத் தனமான நம்பிக்கையை அல்லாஹ் விரும்பவில்லை என்பதை புரிய வைப்பதும் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். 

அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் இபாதத்கள், நல்லமல்கள் சம்பந்தமாகப் பேசுவதோடு வானம், பூமி, கடல், மலைகள், தாவரங்கள் என்று அடுக்கடுக்காகச் சொல்லும் அளவிற்கு அறிவியலையும் சேர்த்துப் பேசுகிறான். 

சுவர்க்கத்திற்கு வழிகாட்டியான இந்த வேதத்தில் நல்லமல்கள் பற்றிப் பேசியாக வேண்டும். ஆனால், கடல் சம்பந்தமாக ஏன் பேச வேண்டும்? அதன் தண்ணீரைப் பற்றி ஏன் பேச வேண்டும்? மலைகள் சம்பந்தமாக ஏன் பேச வேண்டும்? என்கின்ற சிந்தனை அதிகமானவர்களுக்கு எழலாம். அப்படியாயின் ஒரு முஃமின் சுவனம் செல்வதற்கு கடலைப் பற்றிப் படிக்க வேண்டுமா? தாவரங்கள் பற்றி கட்டாயம் படித்தாக வேண்டுமா? என்ற கேள்விகள் கூட எழும். இந்தக் கேள்விகளுக்கான பதில்களை தெரிந்துகொள்வதற்குத் தொடர்ந்தும் படியுங்கள். பதிலைப் பெற்றுக்கொள்வீர்கள். இன்ஷா அல்லாஹ். 

அல்லாஹ் திருமறைக் குர்ஆனில், ஷஷஇக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம் படிப்பினை பெறுபவர் உண்டா?|| (54:32) என்று கேட்கிறான். அது மட்டுமல்லாமல் உங்கள் ஷஷஇதயத்தில் பூட்டு போடப்பட்டுள்ளதா? ஆராய மாட்டீர்களா?|| என்றும் ஷஷஆராயுங்கள், ஆராயுங்கள்|| என்று சொல்லுவதிலிருந்தும் குருடர்களாக, செவிடர்களாக இருக்க வேண்டாம் என்று சொல்வதிலிருந்தும் ஒரு முஃமின் ஒரு விடயத்தை நன்றாக பரிசீலித்துப் பாரக்க் வேண்டும் என்று புலனாகிறது. 

அந்த அடிப்படையில் அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் ஏராளமான இடங்களில் கடலைப் பற்றிப் பேசுகிறான். 

இத்திருமறை வசனத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். ஷஅவனே இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். ஆயினும், அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது. அதை அவை மீற மாட்டாது.| (55:19-20)

அல்லாஹ் எந்த ஒரு வார்த்தையையும் வீணாகப் பேச மாட்டான் என்பதை நம்பியிருக்கிறோம். அந்த அடிப்படையிலேயே இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்க வைத்ததாகக் கூறும் இறைவன் ஷஅவை இரண்டிற்கும் இடையில் ஒரு தடுப்பு உள்ளது. அவை அதை மீற மாட்டாது| என்றும் சொல்கிறான். 

சாதாரணமாக ஒரு வாளியில் இரண்டு பக்கத்திலிருந்தும் நீர் ஊற்றினால் அந்தத் தண்ணீர் கலந்து விடும். அப்படியிருக்க பெரிய அலைகள் அடிக்கும் கடலிலுள்ள நீர் கலந்து விடாமல் எப்படியிருக்க முடியும்?

இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்த்தால் வேடிக்கiயான ஒரு விடயத்தை சொல்வது போன்றும் நடக்க முடியாத ஒன்றைப் பேசுவது போன்றும் தெரிகிறது. ஆனால், ஏழு வானத்திற்கு மேல் இருந்து வந்த செய்தி நிச்சயமாக பிரயோசனம் இல்லாத ஒரு வசனமாக இருக்க முடியாது. அதில் கடுவளவும் சந்தேகத்திற்கு இடம் இருக்காது என்று அனைத்து முஸ்லிம்களும் நம்ப வேண்டும். 

அப்படியாயின் இந்த கடல்களுக்கு மத்தியில் எப்படி ஒரு திரை இருக்க முடியும்? இன்னும் சொல்லப் போனால் ஷபர்ஸக்| எனும் அரபுப் பதம் தான் அங்கு திரையை குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஷபர்ஸக்| என்ற பதத்தின் அர்த்தத்தை நன்றாகப் பரிசீலித்துப் பார்தோமேயானால், கண்ணுக்குத் தெரியாத திரை என்பதைக் குறிப்பிடுவதற்குத்தான் அந்த அரபுப் பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

கண்ணுக்குத் தெரியாத திரையை போட்டு. அது மீற மாட்டாது என்று சொல்லி, இதை பொய்ப்பிக்கலாமா? என்று சவால் விடுகிறான் இறைவன். திருமறையை பொய்ப்பிப்பதற்கு உலகமெங்கும் துடித்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் இந்த சவால். இறைவன் சவால் விட்டால் அதை யாராலும் முறியடிக்க முடியாது என்பதை அல்லாஹ் நிரூபித்துக் காட்டிவிட்டான். அல்லாஹு அக்பர். 

திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துக் கூறும் இந்த விஞ்ஞான உண்மையை கடலாய்வு விஞ்ஞானியாகவும் அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தின் மண்ணியல் துறை பேராசிரியராகவும் உள்ள டொக்டர் வில்லியம் ஹை (றுடைடயைஅ ர்யல) தன் ஆராய்ச்சி மூலம் இரு கடல்களுக்கு இடையே தடுப்பு உள்ளது என்பதை உறுதி செய்துள்ளார். மத்திய தரைக் கடலுக்கும் ஜிப்ரால்டரில் உள்ள அத்லாந்திக் சமுத்திரத்திற்கும் இடையே உள்ள தடுப்பு உட்பட பல்வேறு இடங்களில் இந்த அற்புத நிகழ்வு ஏற்படுகிறது. 

மத்திய தரைக் கடலுக்குள் ஓடி மறையும் எகிப்தின் நைல் நதியிலும் இந்த அற்புத நிகழ்வு ஏற்படுகிறது. 

கடல்களுக்கு இடையில் தடுப்பு உள்ளது என்ற உண்மையை கடலின் இரு பகுதிகளின் சுவையும் வித்தியாசப்படுவதிலிருந்து கண்டுபிடித்தள்ளார். கடல் இரண்டாகப் பிரிந்து ஒரு பகுதி நீர் உப்பு சுவையாகவும் இன்னொரு பகுதி நீர் இனிப்பாகவும் உள்ளது என்பதை தனது ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளார். இந்த விஞ்ஞான உண்மையைக் கூட திருக்குர்ஆன் கூறிவிடத் தவறவில்லை. இறைவன் இந்த அற்புதத்தை தனது திருமறையில் கூறுகையில், 

ஷஷஅவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான். ஒன்று மிக்க இனிமையும் சுவையும் உள்ளது. மற்றொன்று உப்பும் கசப்புமானது. இவ்விரண்டிற்கும் இடையே வரம்பையும் மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்|| (அல்குர்ஆன் 25:53) என்று தெளிவாக சொல்லிக் காட்டுகிறான். 

இன்னும் சொல்லப் போனால் மனிதர்கள் கண்டுபிடிப்பதை இலகுவாக்கவும் திரை ஒன்று உள்ளதை இனங்காண்பிப்பதற்கும் நீரின் சுவையில் காணப்படும் வித்தியாசத்தை சேர்த்தே கூறியிருக்கிறான் என்றால், அவன் மிகப் பெரியவன், அல்ஹம்துலில்லாஹ்.

எனவே இறைவேதத்தின் புனிதத்தையும் மகிமையையும் புரிகின்ற ஒரு முஃமின் நிச்சயம் குர்ஆன் இறைவேதம்! இறைவன் ஒரு வார்த்தையைக் கூட வீணுக்குப் பேச மாட்டான் என்பதையும் உறுதியாக நம்புவான்.

அது மட்டுமல்லாமல், இக்குர்ஆன் வசனம் இரு கடல்களுக்கிடையே திரை உள்ளது என்ற அறிவியல் உண்மையை விளக்குவதோடு, இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் ஞாபகப்படுத்துகிறது. 

இந்தத் திருமறை வசனத்தில் கண்ணுக்குத் தெரியாத திரை எனும் சொல்லை விளக்குவதற்கு ஷபர்ஸக்| என்ற சொல் இடம்பெற்றுள்ளதை மேலே சுட்டிக் காட்டியிருந்தோம். இந்த பர்ஸக் என்ற சொல்லை தான் கப்ருடைய வாழ்வை குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

ஒரு மனிதன் உயிர் வாழும்போது உலகில் வாழ்வான். உலகில் அவனின் செயற்பாடுகளை அனைவரும் காண்பார்கள். ஒரு மனிதன் மரணித்து விட்டால் கப்ருடைய வாழ்வுக்கு சொந்தக்காரனாக மாறுகிறான். மனிதன் மரணித்ததன் பின்னால் அவனுக்கும் உலக மக்களுக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத ஒரு திரை போடப்படுகிறது. இதனால் கப்ரில் அடக்கப்பட்டவர் வேதனையால் துடிப்பதையும் அலறுவதையும் கேட்க முடிவதில்லை. பார்க்க முடிவதில்லை. ஏனெனில், அவர்கள் ஆலமுல் பர்ஸக் இல் (திரையுடைய வாழ்வு) வாழ்கிறார்கள். 

கடல்களுக்கிடையே கண்ணுக்குத் தெரியாத திரை இருப்பது உண்மை என்றால் மரணித்தவர்களுக்கும் உலக மக்களுக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத திரை உண்மையாக உள்ளது என்பதை சிந்திக்கும் எல்லா உள்ளங்களும் ஏற்றுக்கொள்ளும். 

எனவே கப்ருடைய வேதனை உண்மையானது. நானும் நீங்களும் கட்டாயம் கப்ருக்குள் செல்வோம். உலகில் உறவு என்று சொல்லித் திரிந்த எவரும் துணையாக இருக்க மாட்டார்கள். நாங்கள் ஒவ்வொருவரும் தனித் தனியாக கப்ருக்குள் செல்லவுள்ளோம். நாம் அலறினாலும் துடித்தாலும் உறவுகள் உதவாது. நாம் செய்த நன்மை தீமைகள் மாத்திரமே நம்முடன் தொடர்ந்து வரும்.  சிந்தியுங்கள், சீர்பெறுவீர்கள்.

03
கடலும் கப்ரும்
1.இந்த குர்ஆனை விளங்குவதற்க்கு எளிதாக்கியுள்ளோம் படிப்பினை பெறுபவர் உண்டா ?என்ற வசனத்தின்  இலக்கத்தையும் அத்தியாயத்தின் இலக்கத்தையும் குறிப்பிடுக.
2. இரண்டு கடல்களுக்கு இடையில் தடுப்பு உள்ளது என்று கண்டு பிடித்த விஞ்ஞானி யார்?

No comments

Powered by Blogger.