Header Ads



பத்ர் தரும் படிப்பினை - புனித ரமழான் அறிவுப்போட்டி (கேள்வி 13)

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த தியாக நிகழ்ச்சியே பத்ர்ப் போரா கும். போதிய முன்னேற்பாடுகள் இல்லாத சுமார் 313 பேர்கள் 1000 பேர் கொண்ட யுத்த படையை களத்தில் எதிர்கொண்டு ஈமானிய பலத்தாலும், தியாக குணத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று சிதற டித்த நிகழ்ச்சி அதுவாகும். இந்த பத்ர் போர் வரலாற்றின் மூலம் நாங்கள் வேறு படிப்பினைகளைப் பெறலாம். அவற்றைச் சுருக்கமாக முன்வைப்பதே இவ்வாக்கத் தின் நோக்கமாகும்.

சுருக்கமான தகவல்

பத்ர்| போர் குறித்த ஒரு சுருக்கமான தகவலை முதலில் முன்வைப்பது பொருத்த மென நினைக்கின்றேன். அபூ சுப்யான் மிகப் பெரும் வர்த்தகப் பொருட்களுடன் மதீ னாவை அண்டிய பகுதியால் வருகின்றார் என்ற செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைக்கின்றது. அந்த வியாபாரக் குழுவை மடக்கிப் பிடிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தை அழைத்துக்கொண்டு செல்கின்றார்கள். அபூ சுப்யான் உளவு பார்த்ததில் நபி(ஸல்) அவர்கள் தன்னைப் பிடிக்கக்கூடும் என்று அறிந்து மக்காவுக்கு செய்தி அனுப்புகின்றார். இதுதான் சந்தர்ப் பம் என நினைத்த மக்காவாசிகள் முஸ்லிம் களைப் பூண்டோடு அழிப்பதற்காகப் படை திரட்டி வருகின்றனர்.

பின்னர் அபூ சுப்யான் வேறு வழியாக மக்கா சென்றுவிட முஸ்லிம்கள் ஆயுதக்குழு வுடன் மோதும் நிலை ஏற்படுகின்றது! ஈற்றில் இந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவதுடன் அபூ சுப்யான், அபூலஹப் போன்ற போரில் பங்கெடுக்காத குறைஷித் தலைவர்கள் போக மீதி முக்கியஸ்தர்கள் அனைவரும் பத்ரில் கொல்லப்பட்டு குறை ஷிக் கூட்டம் வலுவிழக்கச் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் பெறவேண் டிய படிப்பினைகளை நோக்குவோம்.

அல்லாஹ்வின் கழாவை ஏற்றுக்கொள்ளல்

ஷஷவானங்கள், பூமியைப் படைப்பதற்கு 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே படைப் பினங்களின் கத்ரை| (விதியை) அல்லாஹ்; விதித்துவிட்டான்|| என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ரிப்னுல் ஆஸ்(ரழி) நூல்: முஸ்லிம்)

பத்ர் யுத்தம் அல்லாஹ்வின் கத்ரின் வல்லமையை மிகத்தெளிவாக உணர்த்தும் ஒரு நிகழ்ச்சியாகும். நபித்தோழர்கள் வியா பாரக் கோஷ்டியை இலக்குவைத்தனர். அல்லாஹ் அவர்கள் யுத்தக் குழுவுடன் மோத ஏற்பாடு செய்துவிட்டான். எனவே, இவர்கள் எத்தனை திட்டங்கள் போட்டா லும் அவர்களால் அல்லாஹ்வின் நாட் டத்தை மீறி வியாபாரக் குழுவைப் பிடிக்க முடியவில்லை.

(அபூ சுப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம், அபூ ஜஹ்லின் தலை மையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூருங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள். (ஆனால்,) அல்லாஹ் தன் திருவாக்கு களால் சத்தியத்தை நிலைநாட்டவும், காபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான். (8:7)

மேலும், குற்றவாளிகள் வெறுத்த போதி லும், அல்லாஹ் பொய்யை அழித்து (ஹக்கை) உண்மையை நிலை நாட்டவே (நாடுகிறான்). (8:8)

இங்கே அல்லாஹ்வின் நாட்டம்தான் நடைபெற்றது. இதுகுறித்து கஃப் இப்னு மாலிக் குறிப்பிடும்போது, நபி (ஸல்) அவர் கள் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இலக்குவைத்துத்தான் வெளியேறினார்கள். எனினும் எவ்வித முன்னேற்பாடோ, சந்திக் கும் நேரம் குறித்த பேச்சுக்களோ இல்லாது அல்லாஹ் அவர்களையும், காபிர்களையும் பத்ரில் ஒன்று சேர்த்தான் எனக் குறிப்பிடு கின்றார்கள் (புகாரி).

இது குறித்து அல்லாஹ் குறிப்பிடும் போது,

(பத்ர் போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூர மான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளா கிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப் புறத் திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம், இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும், அதை நிறைவேற்று வதில் நிச்சயமாக கருத்துவேற்றுமை கொண்டிருப்பீர்கள். ஆனால், செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறை வேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப் பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்). நிச்சயமாக அல்லாஹ் செவி யேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக் கின்றான்.(8:42)

அருகருகில் இருந்தும் நீங்கள் வியாபாரக் குழுவை சந்திக்கவில்லை. முன்னரே முறைப்படி யுத்தம் செய்வதாக முடிவுசெய்து திட்டமிட்டிருந்தால் கூட குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு வருவதில் உங்களுக் கிடையில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். எனினும், அல்லாஹ்வின் விதி அதற்கான சூழலை ஏற்படுத்தி உங்களை ஒன்றுசேர்த்தது என்ற கருத்தை இந்த வசனம் தருகின்றது.

எனவே, வாழ்வில் ஏற்படும் இன்பமோ, துன்பமோ இரண்டுமே அல்லாஹ்வின் விதி என்பதை ஏற்று இன்பத்தில் தலைகால் தெரியாது ஆட்டம் போடாது, துன்பத்தில் துவண்டு போகாது இரண்டையும் சமமாக ஏற்று வாழும் பக்குவத்தைப் பெறவேண்டும். அதேநேரத்தில், விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை போகும் என்று முயற்சி செய்யாது முடங் கிக் கிடக்கவும் கூடாது! நபி (ஸல்) அவர்களின் திட்டமிடல் முனைப்புடனான செயற்பாடுகள் இதை எமக் குணர்த்துகின்றன.

கலந்தாலோசித்தலின் அவசியம்

மார்க்க விவகாரங்களில் அறிஞர்களுடனும், உலக விவகாரங்களில் குறித்த துறையில் ஆற்றல் உள் ளவர்களிடமும் ஆலோ சனை செய்வது அல் லாஹ்வின் உதவியும், முஸ்லிம்களின் உல கியல் விவகாரங்களில் நன்மை நடப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத் தும் முக்கிய அம்சமாகும். 

நபி(ஸல்) அவர்கள் போருக்கு முன்னர் நபித்தோழர்களிடம் ஆலோசனை கேட்டார் கள். தாம் விரும்பும் முடிவை சில தோழர் கள் முன் வைத்தனர். அப்போது கூட அவர்கள் திடீர் முடிவு செய்யாது மதீனத்து தோழர்களின் முடிவை அறியும் ஆர்வத்தில் தொடர்ந்தும் ஆலோசனை செய்தார்கள். அவர்களின் ஆலோசனையும் சாதகமாக அமைந்த பின்னரே போர் செய்யும் முடிவை எடுத்தார்கள். இது ஆலோசனை செய்வ தின் அவசியத்தை உணர்த்து கின்றது.

மற்றுமொரு நிகழ்ச்சியையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

நபி (ஸல்) அவர்கள் பத்ர்| களம் சென்று மதீனா பகுதிக்கு நேராக இருக்கும் முதலாவது கிணற்றுக்கருகில் தமது கூடா ரங்களை அமைத்துக் கொள்ளுமாறு உத் தரவிட்டார்கள். அப்போது ஹுபாப் இப்னுல் முன்தீர் என்ற நபித்தோழர் அல்லாஹ்வின் தூதரே! இந்த இடத்தில் நாம் கூடாரமிட வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்ட ளையா? அப்படியாயின் நாம் இதை விட்டும் ஒரு அடி முன்னாலோ, பின்னாலோ நகர மாட்டோம்! அல்லது உங்களது சொந்த அபிப்பிராயப்படி நீங்கள் தீர்மானித்த இடம் என்றால், என்னிடம் மாற்று அபிப்பிராயம் உள்ளது! என்றார். நபி(ஸல்) அவர்கள் தனது சொந்த முடிவு என்றதும், அல்லாஹ் வின் தூதரே! இதற்கு பின்னரும் தொட்டி கள் உள்ளன. நாம் முன்னேறிச் சென்று அவற்றையும் எம் வசப்படுத்திக்கொள்ள வேண்டும். அதைத் தாண்டியிருக்கும் சிறிய நீர் தொட்டிகளிலிருந்து தண்ணீரை நாம் எடுத்துக் கொள்வோம். அப்போது நாம் தண்ணீர் குடிக்க அவர்கள் தாகத்தோடு போராடுவார்கள்| என்று தனது அபிப்பிரா யத்தைக் கூற அது போர்த்தந்திரத்திற்கும், எதிரிகளைப் பலவீணப்படுத்தவும் ஏற்ற யுக்தியாகத் திகழ்ந்ததால் நபி (ஸல்) அவர் கள் தனது முடிவை மாற்றி அவர் கருத்துப்படி செயற்பட்டார்கள். (அஸ்ஸீரதுன் நபவிய்யா-இப்னு ஹிஸாம்., அத் தபகாத்-இப்னு ஸஃத்).

நபியவர்கள் சுய கௌரவம் பாராது அடுத்தவர் கருத்தையும் மதித்து நடந்த தால், முஸ்லிம்களுக்கு நன்மை விளைந்தது. இது கலந்தாலோசனை செய்வதன் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது. 

எதிரிகள் குறித்த விழிப்புணர்வு

நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் இருக்கும் போதும் எதிரிகளின் நடமாட்டம் குறித்து புலனாய்வு செய்தார்கள். பத்ர் களம் வந்த போதும் பலரை அனுப்பி புலனாய்வுத் தகவல்களைத் திரட்டினார்கள். ஒரு முறை அவர்களும் அபூபக்கர்(ஸல்) அவர்களும் சேர்ந்து, களத்தில் தகவல் அறியச் சென்றனர்;. மற்றொரு முறை அலி, சுபைர் இப்னுல் அவ்வாம், ஸஃத் இப்னு அபீவக் காஸ் (ரழி) ஆகிய நபித்தோழர்களை அனுப்பி அவர்கள் மூலம் குறைஷிகளுக்கு தண்ணீர் இறைக்கும் இளைஞர்களைக் கைது செய்து அவர்கள் மூலம் எதிரிகளின் எண்ணிக்கை, படைபலம், முக்கிய தளபதி கள் குறித்த தகவல்கள் என்பவற்றை அறிந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சி எதிரிகளின் செயல்திட்டங்கள், பலம், பலவீனம் பற்றிய அறிவின் அவசியத்தைத் உணர்த்துகின்றது. இந்த விழிப்புணர்வு முஸ்லிம்களிடம், அதிலும் குறிப்பாக சமூகத் தலைவர்களிடம் அவசியம் இருந் தாக வேண்டும்.

அல்லாஹ்வின் உதவியில் நம்பிக்கை வைத்தல்:

உலகியல் ரீதியில் முடிந்தவரை முயற்சி செய்யும் அதேவேளை ஆயுதத்திலோ, ஆட் பலத்திலோ நம்பிக்கை கொள்ளாமல் அல்லாஹ்வின் மூலமே உதவி கிடைக்கும் என்ற ஈமானிய பலத்தில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்.

நபித் தோழர்களிடம் போதிய யுத்த சாதனங்கள் இருக்கவில்லை. 70 ஒட்டகங் களும், 60 கேடயங்களும் சுபைர் இப்னுல் அவ்வாம்(ஸல்), மிக்தாத் இப்னு அஸ்வர் ஆகிய இருவரிடம் மட்டும் இரு குதிரை களும் இருந்தன. (அல்-பிதாயா வன்னி ஹாயா) பௌதீக காரணிகளை வைத்து ஆராய்ந்தால் முஸ்லிம்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால், இந்த சிறுகூட்டம் அந்தப் பெரும் கூட்டத்தை சிதறடித்தது.

உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான். அல்லாஹ்விடம் இருந்தே தவிர உதவி இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்த வனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (8:10)

எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள்மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள். மேலும் அல்லாஹ் பொறு மையாளர்களுடன் இருக்கின்றான் என்று கூறினார்கள். (2:249)

எனவே, முஸ்லிம்களின் முழுமையான நம்பிக்கை அல்லாஹ்வின் மீதே இருக்க வேண் டும். இந்தப் போரின் போது மழை பொழிந்து அது முஸ்லிம்களுக்குச் சாதக மாகவும், காபிர்களுக்குப் பாதகமாகவும் அமைந்து, மலக்குகள் முஸ்லிம்களுக்குத் துணையாகப் போரிட்டனர் என்பதை குர்ஆன் குறிப்பிடுகின்றது. (பார்க்க 8:9-12., 8:17)

கட்டுப்படுத்தலும் தூய பிரார்தனையும் உதவியை பெற்றுத்தரும் போர் நிகழ முன்னரே நபி (ஸல்) அவர்கள் அதிகமதிகம் அழுதழுது அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். 

பத்ரு தரும் படிப்பினை - 13

கேள்வி – 1 வானங்கள், பூமியை படைப்பதற்கு எத்தனை வருடங்களுக்கு முன் அல்லாஹ் கத்ரை (விதியை) கடைத்தான்.
கேள்வி – 2 பத்ரு களத்தில் ஓர் இடத்தில் கூடாரம் அடித்த போது அதை வேறு இடத்தில் மாற்றி அமைக்கச் சொன்ன நபித் தோழர் யார் ?

No comments

Powered by Blogger.