Header Ads



கரண்டை காலுக்கு கீழ் - புனித ரமழான் அறிவுப்போட்டி (கேள்வி 11)

யார் பெருமைக்காக தனது கீழா டையை தரையில் படும் படி அணிகிறாரோ அவரை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான் என்று நபியவர்கள் கூறியதும் பக்கத் திலிருந்த அபூபக்கர் (ரழி) அவர்கள் ஷயா ரஸூலுல்லாஹ்! நான்அறியாதபோது, எனது கீழாடை கரண்டைக் காலுக்கு கீழாக தரையில் படுகிறது என்று கூறினார் கள். நீர் பெருமைக்காக அணிபவரல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

ஒரு மனிதர் எவ்வாறு ஆடை அணிய வேண்டும். எந்த நிறமான ஆடைகளை அணிய வேண்டும். அணியும் ஆடை எந்த அளவுக்கு இருக்க வேண்டும். என்பதை யெல்லாம் மிகத் தெளிவாக நபியவர்கள் விளக்கப்படுத்தியுள்ளார்கள்.

ஆதன் ஒரு அங்கமாக ஆண்களுடைய ஆடை விடயமாகவும் விளக்கப்படுத்தினார்கள். ஆண்கள் கரண்டைக் காலுக்கு கீழ் ஆடை அணிவதை கடுமையாக தடை செய்த செய்திகளை பின்வரும் நபிமொழி மூலம் அறியலாம்.

எவர் பெருமைக்காக தன் ஆடையை கரண்டை காலுக்குக் கீழாக அணிகிறாரோ அவரை மறுமையில் அல்லாஹ் பார்க்க மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள். (புகாரி முஸ்லிம் 2087)

யார் தனது கீழாடை (வேட்டி) சட்டை, தலைப்பாகை இவற்றை பெருமைக்காக அணிகிறாரோ அவரை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூதாவூத் (4094) நஸாயி.

மேலும் கரண்டைக் காலுக்கு கீழாக யார் ஆடை அணிகிறாரோ அவர் நரகில் நுழைவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

இதுபோல இன்னும் பல ஹதீஸ்கள் வந்துள்ளது. அத்தனை ஹதீஸ்களும் பெருமைக் காக கரண்டைக் காலுக்குக் கீழாக அணிந்தாலும் பெருமையின்றி அணிந்தாலும் நர கம் தான் என்பதை தெளிவுபடுத்தியது. இந்த ஹதீஸ்களை ஆதாரம் காட்டி கரண்டைக் காலுக்குக் கீழ் ஆடை அணிய வேண்டாம் என்று சொல்லும்போது எங்களிடம் பெருமை கிடையாது பெருமையின்றி கரண்டைக் காலுக்கு கீழ் ஆடை அணிய ஆதாரம் உள்ளது என்று மேலேயுள்ள அபூபக்கர் (ரலி) அவர்களின் அறிவிப்பை முன்வைக்கிறார்கள்.

இந்த அறிவிப்பை  ஆதாரமாக வைத்து அதிகமான சகோதரர்கள் தனது கீழாடையை கரண்டைக் காலுக்குக் கீழாக அணிந்து கொள்வதை-அதனை நியாயப்படுத்துவதை- காண்கிறோம்.

நபியவர்கள் கரண்டை காலுக்கு கீழ் அணிவதை கண்டிக்கும் சந்தர்ப்பத்தில் நான் அறியாமலிருக்கும் போது எனது ஆடை கரண்டைக்கு கீழே சென்று விடுகிறதே, என்று அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறி விளக்கம் கேட்ட போது தான் நீர் பெருமைக்காக அணிபவரல்ல, என்று நபி (ஸல்) அவர்கள் கூறிகிறார்கள்.

இந்த வாசகத்தை சரியாக விளங்காதத்தினாலேயே தவறாக விளக்கம் சொல்கிறார்கள். குரண்டைக்கு மேலே ஆடை அணியும் போது அது கீழே சென்றால் தவறில்லை என்று தான் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர கரண்டைக்குக் கீழால் அணிவது கூடும் என எடுத்;துக் கொள்க்கூடாது. ஆனால் நம்மவர்கள் தெரிந்து கொண்டுதான் ஆடையை  கீழே போடுகிறார்கள்.

நாங்கள் பெருமைக்காக கீழாடையை இப்படி அணியவில்லை என்று சொல்லக் கூடியவர்கள் தொழுவதற்கு செல்லும் முன் தனது மேல் மிச்சமான கீழாடையை சுருட்டி மடக்கி வடுவதை பார்க்கிறோம். பெருமை இல்லை என்றால் ஏன் கீழாடையை சுருட்டி, மடக்கி விட வேண்டும்? சுருட்டாமல் தொழலாம் தானே. இப்படி மடக்கி விடுவதின் மூலம் இவர்களிடம் பெருமை ஏற்படுகிறது என்பதை அறியலாம். பெருமை இல்லை என்றால் சாதார ணமாக மடக்கி விடாமல் தொழலாம் தானே! எனவே அவர்களின் மனம் இந்த நேரத்தில் இடம் கொடுப்பது கிடையாது. அதுபோல் குர்ஆன், ஹதீஸ் அல்லது மார்க்கச் சொற்பொழிவு நடைபெறும் இடத்திற்கு சமூகம் தரும்போது தனது மேல் மிச்சமான கீழாடையை மடக்கி விடு வதையும் காணலாம்.

இன்னும் சிலர்கள் நீளகால் சட்டை (பேண்ட்) அணியம்போது மட்டும் தான் கரண்டைக் காலுக்கு கீழ் அணிகிறார்கள். சாராம் அணியும்போது கரண்டைக்கு மேல் அணிவதை காணலாம். இதுவும் ஓர் பெரு மைதான். ஏன் என்றால் தான் வேலை செய்யும் இடங்களில் காரியாலயங்களில் அனைவரும் கரண்டைக்கு கீழாக ஆடை அணிந்துள்ளார்கள். நான் மட்டும் எப்படி வித்தியாசமாக ஆடை அணிய முடியும்? என்று கரண்டைக்கு கீழ் ஆடை அணிகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் முக்கிய விசேட நாட்களில் கீழாடை கரண் டைக்கு கீழாகவும் பள்ளிக்கு வரும்போது கரண்டைக்கு மேலாகவும் அணிவதே பெருமைக்கு அடையாளமாகும்.

மேலும் இப்படியொரு நபிமொழி வருகிறது: உனது கீழாடையை பாதி கெண் டைக் கால் அளவுக்கு அணிவாயாக. அல்லது உனது கரண்டைக்கால் அளவிற்கு அணிவாயாக. அதற்கு கீழாக அணிவதே பெருமையாகும். (அபூதாவூத் 4084, திர்மிதி 2722)

இந்தளவு தான் கீழாடை இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது, அதை மீறி நடப்பது முஸ்லிமுக்கு அழகல்ல. அதே போல் அபூதாவூதி (4089)ல் பதிவு செய்யப்பட்ட மற்றொரு நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியில் ஷஷகுரைம்அல் உஸைதீ|| குலத்தார் தனது கீழாடையை கரண்டைக்கு கீழ் அணியாமலும், தனது தலை முடியை நீண்டதாக வளர்க்காமலும் இருந்தால் அவர்கள் நல்லவர்களே என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அந்த குலத்தார்கள் தனது கீழாடையை உயர்த்திக் கொண்டார்கள். தலைமுடியை காது வரை வெட்டிக் கொண்டார்கள். எங்களிடம் பெருமையில்லை என்று நம்மவர்கள் கூறுவதைப் போன்று கூறாமல் இவ்வாறு உடுத்த வேண்டும் என்ற நபிமொழிக்கு கட்டுப்பட்டு செயல்பட்டார்கள்.

அதேபோல் ஒரு முறை இப்னு உமர் (ரழி) அவர்கள் நடந்து செல்லும்போது அவர்களின் கீழாடை (வேட்டி) தரையில் தொங்கியது. அப்போது நபியவர்கள் அப்துல்லாஹ்வே! உனது கீழாடையை (வேட்டியை) உயர்த்துவாயாக என்றார்கள். நான் உயர்த்தினேன். அதன் பிறகு அந்த விடயத்தில் பேணுதலாகவே நடந்து கொண்டேன். இந்த நேரத்தில் சில நபித் தோழர்கள் யா ரஸூலுல்லாஹ்! எது வரை கீழாடை அணிய வேண்டும் என்று கேட்டபோது கெண்டைக் கால் (முட்டுக் காலுக்கும் கரண்டைக்கும் நடுப்பகுதி வரை என்றார்கள். (முஸ்லிம் 2086)

அப்துல்லா';வே! கீழாடையை உயர்த்து என்று நபியவர்கள் கூறியபோது என்னிடம் பெருமை கிடையாது என்று கூறாமல் நபியவர்களுக்கு கட்டுப்பட்டு உயர்த்தி யதோடு அதன் பின் அந்த விடயத்தில் பேணுதலாக இருந்தார்கள் என்றால் இப்படியான தோழர்கள் மூலம் நாம் பாடம் படிக்க வேண்டும்.

அந்த தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி உள்ளது என்று அடிக்கடி சொல்லக் கூடிய நாம் அந்த நபி (ஸல்) அவர்கள் ஒரு தடவை சரி கீழாடையை கரண்டைக் காலு க்குக் கீழாக அணிந்ததாக காண முடியுமா? அதுபோல் அந்த ஸஹாபாக்கள் கீழாடை விடயத்தில் அலட்சியமாக இருந் ததை காண முடியுமா?

எனவே குறிப்பிட்ட ஓரிரு விடயத்தில் மட்டும் நபியவர்களை நேரடியாக பின்பற்றுவது மற்ற இடங்களில் தனது சுயநலத்திற்காக பல நொண்டிச் சாட்டுகளை கூறுவது உண்மையான முஃமினுக்கு அழகல்ல. அதனால் ஆடை விடயத்தில் குறிப்பாக கரண்டைக் கீழ் ஆடை அணிபவர்கள் பெருமைக்காகவா, அல்லது வேறெந்த நோக்கத்திற்காகவா என்பது அவர்களே மிக அறிந்தவர்கள். ஆடை விடயத்தில் பேணுதலாக நடப்போமாக.

கரண்டை காலுக்கு கீழ் ஆடை - 11

கேள்வி – 1 யார் தனது கீழாடையை கரன்டை காலுக்கு கீழாக பெருமைக்காக அணிகிறாரோ அவறை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான் என்ற ஹதீஸ் எந்த கிரந்தங்களில் பதிவு செய்யப் பட்டுள்ளன?

கேள்வி – 2 தனது ஆடை கரண்டைக்கு கீழ் உடுக்காமல் இருந்தால் அவர்கள் சிறந்தவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் எந்த குலத்தாரைப் பற்றி கூறினார்கள.

No comments

Powered by Blogger.