Header Ads



பாராளுமன்ற கலைப்பு பற்றிய, ஜனாதிபதியின் வர்த்தமானி ரத்தாகவில்லை


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்தாகவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

 கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றின் அறிவித்தலை சிலர் வழக்குத் தீர்ப்பாக கருதுகின்றனர் உண்மையில் அவ்வாறான ஓர் தீர்ப்பு வெளியிடப்படவில்லை.

இன்னமும் இந்த வழக்குத் தொடர்பில் எதிர்த் தரப்பினரின் எதிர்ப்புக்களையும் வெளியிட சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை.

எழுத்து மூல எதிர்ப்பு பெற்றுக்கொள்ளப்படவில்லை, அதற்கு பதிலளிக்க இன்னமும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

இது ஓர் நீண்ட வழக்கு விசாரணைப் பொறிமுறைமையாக மூன்று நாட்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

தற்காலிக அடிப்படையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ள உத்தரவினை நாட்டு மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

இது முக்கியமான ஓர் அரசியல் அமைப்பு, சட்டப் பிரச்சினையாகும் எனவே முழு அளவிலான நீதியரசர்களை உள்ளடக்கி வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடப்பட முடியும், அது அனைத்து தரப்பினரதும் உரிமையாகும் என நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Any way you lost your ministry.
    All black cats came out.

    ReplyDelete
  2. enna nee solratha naattu makkal naanga kekkanuma...yaruda nee....makkala ninainga alakkalichi neenga fun.a gourawatha paarunga ...

    ReplyDelete

Powered by Blogger.