அவசர சந்தர்ப்பங்களில் பொலிஸாரை தொடர்புகொள்ளும், சாதனம் விரைவில் அறிமுகம்
குழந்தைகள் அவசர சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் மற்றும் காவல்துறையினரை தொடர்புகொள்ளும் வகையில் சிறப்பு தொலைத் தொடர்பு சாதனம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றியப் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அண்மையில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிராக இடம்பெற்ற துயரமான சம்பவங்களை குறைக்கும் வகையில், இச்சாதனம் அறிமுகப்படுத்தப்பட விருக்கின்றது என தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் பெற்றோர்கள் குறிப்பிட்ட தருணங்களில் குழந்தைகளின் இருப்பிடத்தினை அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment