இலங்கையிலிருந்து ஹஜ், சென்றவர்களின் கண்ணீர் கதைகள் (வீடியோ) ஏமாற்றிய முகவர்கள்..!
-Abdul Wahid Mohamed Mahroof![]()
Mohamed Jeezan-
இலங்கையின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த சுமார் ஐம்பதுக்கு மேற்பட்டோர் மூன்று நான்கு இலங்கை போலி ஹஜ் முகவர்களால் அநாதரவாக கைவிடப்பட்டு பெரும் சீரழிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
(இதில் ஒருவர் மரணம்) குறிப்பிட்ட முகவர்கள் ஹஜ்ஜுக்காக ஹாஜிகளிடம் பெருந்தொகை பணத்தை அறவிட்டு அதுவும் VIP சலுகை என்று கூறி வயதானவர்களும் கட்பிணிதாய்மாரும் , நோயாளிக்களுமாக ஐம்பதட்கு மேட்டோர் இவர்களிடம் பணத்தை கொடுத்து பயணத்தை மேற்கொண்டனர்.
வந்து சிலநாட்களில் சொல்லப்பட்டதற்கு மாராக சாதாரண தங்குமிடவசதிகளை செய்து கொடுத்து ஏமாற்றிய நிலையில் மீனாவில் அவர்களுக்கென இரண்டாம் தர கூடாரத்தை கைய்யளித்து தங்கவைத்த
நிலையில் மறுநாள் அத்தணை பேரையும் வாகனத்தில் கொண்டுபோய் அரபாவில் அநாதரவாக கைவிட்டு விட்டுவிட்டு முகவர்கள் பணத்தை மிச்சம் பிடிக்கும் நோக்குடன் அனைவரும் மாயமாகிவிட்டனர் .
ஹாஜிகள் உணவின்றி செய்வதறியாது பாரம் பொருந்திய பொதிகளுடன் மக்ரிபை நெருகிய வேலை முத்ஷளிபாவுக்கு செல்லவேண்டியது கடமையான நிலையில், சிறிதளவும் நடக்கமுடியாத நோய்வாய்ப்பட்டிருந்த இவர்கள் ஒரு சன நெருக்கம் உள்ள பேருந்தில் பெருந்தொகை பணத்தை கொடுத்து கூரைக்குமேல் அமர்த்தப்பட்டு முஸ்தளிபாவில் கொண்டுவிடப்பட்டு வழிகாட்டுதல் ஏதும் இல்லாமல் பாதையில் ஒரு ஓரமாக இரவை கழித்துள்ளனர். அக்காலயிலேயே பசியுடன் மக்களோடு மக்களாக ஆறு ஏழு மணித்தியாலங்கள் நடந்து செல்கையில் இரு பிரிவினராக வழி தவறி செல்கையில் அதில் ஒரு பகுதியினர் எப்படியோ அல்லாஹ்வின் உதவியால் கூடாரத்தை சென்றடைந்துள்ளனர்.
(அல்லாஹ் இப்படியும் நாடியிருக்கின்றான் பாருங்கள்) மற்றோர் அணி பசியுடனும் தாகத்துடனும் ஆறு மணித்தியாலம் வாகனமின்றி நடைபயணமாக வந்து மீனாவில் ஒரு மரத்தடியில் பசியுடன் இளைப்பாருகையில், சிறிது நேரத்துக்கு பிறகு புத்தளத்தை சேர்ந்த ஒரு சகோதரர் ஒருவர் .60 நோம்பர் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிபவர் தாய் மொழி பேசும் சத்தத்தை கேட்டு ஜன்னலால் எட்டிப்பார்துள்ளார் .
இவர்களின் துயரறிந்து உடனேயே வெளியில் மற்றும் எல்லா ஊழியர்களுடன் இவர்களை அணுகி தேவையான உணவு வசதிகளை செய்துகொடுத்து பசியாற்றியுள்ளனர் . ஹாஜி உறவுகள் இவர்களுக்கு நடந்த கொடுமையை சொல்லி அனைவரும் கண்ணீர்விட்டு நன்றியும் தெரிவித்துள்ளனர் .
பிறகு நடந்தவற்றை ஸ்டேட்மன்ட் எழுதி எடுத்து இவர்களின் கூடாரத்தை தேடிப்பிடித்து சென்று பார்க்கையில் அங்கிருந்தவர்களும் இவர்களை கண்டு கட்டிப்பிடுத்து கண்ணீர்விட்டு நடந்தவற்றை கூறியுள்ளனர்.
இவர்களுடன் இருந்த மேலும் இருவர் காணாமல் போய் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர் (பின்னைய செய்தி இதுவரையிலும் இருவரும் கண்டுபிடிக்கப்படவில்லை )
மேலும் ஹாஜிகள் மீனா ஜமராத்தில் முகவர்களுக்கேதிராக பிரார்தித்ததாகவும மனவருத்தத்துடன் கூறினார் ..இந்தநிலையில்தான் தக்க கவனிப்பின்றி .ஒரு ஹாஜி நோய்வாய்ப்பட்டு இயற்கை எய்தினார். இன்னாளிள்ளாகி வ இன்னா இழைகி ராஜிவூன்
இப்படிப்பட்ட போலி ஹஜ் முகவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி பாதிக்கப்பட்டோருக்கு அவர்களிடம் இருந்து இழப்பீடை பெற்றுக்கொடுத்து அவர்களை சிறைக்கு அனுப்பவேண்டும். பாதிக்கப்பட்ட ஹாஜிகள் நாடு திரும்பியதும் இவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், பின்னைய செய்திகளில் அறியமுடிகிறது. மேலும் ஆதாரத்துக்கு PHOTOS களும் வீடியோவும் இருக்கின்றது.


இது நடக்க வேண்டும் அது மட்டுமல்லாது இவர்களுக்காக வாதிடும் நபர்களும் உண்மையை அறிந்து வாதிட முன்வரவேண்டும் அல்லாh இவர்களுக்கு அருள்புரிவானாக
ReplyDeleteஹஜ்ஜுக்கான முழு சிலவுமே மூன்று இலட்சம் உளளே தான், ஆனால் முகவர்கள் ஆறு இலட்சம் எடுக்கிறார்கள், இலாபகறமான தொழில்!
ReplyDeleteஹஜ்ஜுக்கான முழு சிலவுமே மூன்று இலட்சம் உளளே தான், ஆனால் முகவர்கள் ஆறு இலட்சம் எடுக்கிறார்கள், இலாபகறமான தொழில்!
ReplyDeleteநான் ஹஜ்ஜூடைய பிரயாணம்ஆரம்பிக்கும் போதே ஆரம்பத்தில் ஹாஜிகளை வழிநடத்துவது சம்மந்தமாக jaffnamuslim மில் கட்டுரை ஓன்று எழுதி இருந்தேன் பலர் அதை விமர்சனம் செய்து பின்னூட்டம் எழுத்து இருந்தார்கள்.இவ்வாறு நானும் பல கிலோ மீட்டர் நடந்து ஹாஜிகளின் துயரங்களை கல்லால் கண்டதன் காரணத்தால்தான் அந்த கட்டுரையை எழுத வேண்டி வந்தது.இதை விட வாயால் சொல்லாமல் எத்தனை ஹாஜிகள் அல்லாஹ்வுக்காக பொறுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.சில வாசகர்கள் எழுத தெரியும் என்றால் கண்ணை மூடிக்கொண்டு பின்னூட்டம் எழுதாமல் உண்மை நிலையை அறிந்து எழுத வேண்டும்.பின்னூட்டம் மற்றவர்கள் தப்புகளில் இருந்து திருந்துவதற்கான ஆலோசனையாக இருக்க வேண்டுமே தவிர கோபம் கொண்டு ஒருவரை தாக்கி பேசுவது அல்ல.அதிலும் விஷேசமாக இஸ்லாம் சம்மந்தமான விடயங்களில் பின்னூட்டங்கள் கவனமாக சிந்தித்து எழுத வேண்டும்.
ReplyDeletesimilar problems we faced in 2014 haj also. when i inquired i found out that some haj operators were given more than 100 quotas and they did well. but our operators got six, seven or eight quotas so they arranged one operator to take like fifty or sixty hajis as one group which in reality from almost ten groups and financially faced lot of problems. so, my idea is that minister must make sure that every group gets at least 50 quotas so they can manage the group efficiently with their own cook, aalim etc..etc....
ReplyDeleteplease publicity the name of those Haj operators then we can save other people
ReplyDeleteI am kindly requesting Hajis to publish those agencies names. So, in future no one will approach those agencies , we have to give good lesson to them. everyone if we tolerate and keep quit is the advantage of cheater. So, please make it publicity in medias.
ReplyDeleteAllah vin payam irunda seyvaargala ippdi
ReplyDeleteyou know the beauty of haj ? when they are coming back to sri lanka no one will have any anger towards those haj operators but only the good memories. because the haj is too beautiful and no memory of any bad deeds will last with hajis. this is my experience.
ReplyDeleteமுடிந்தால் இவ்வாறான ஹஜ் முகவர்களின் பெயரைக் குறிப்பிடுங்கள் அடுத்த ஹாஜிகளாவது நன்மை பெறட்டும்
ReplyDeleteஇந்த கட்டுரை அல்லது தகவல் கூட முகவர்களை மறைத்து எழுதப்பட்டுள்ளது சரியான தகவலா அல்லது பொய்யாக சோடிக்கப்பட்டதா என்று நினைக்க வேண்டியுள்ளது,உண்மையாக சமூகத்தின் மீது அக்கறை உண்டென்றால் பெயர்களை பகிரங்கப்படுத்தினால் அடுத்த முறையாவது மாற்று வழிகளை மக்கள் எடுத்துக்கொள்வார்கள்
ReplyDeleteNot only these agents blacklisted legal action should also be taken against them.
ReplyDeleteBro Mustafa Jawfer. Nalla vidayathai Koorineerhal. Anaal Orukku Upathesam Unakkalladi Penne enbathu pol.
ReplyDeleteNeengal ennaiya oru kabru vanangikku vakkalathu vangufavan endru koorineerhal. Neengal fact arindu thaana avvaaru Koorineerhal? That was today morning.
http://www.jaffnamuslim.com/2015/09/blog-post_262.html
I believe next time ur follow ur own advice here after before preaching it to others.
அந்த அயோக்கியத்தனமான போலிமுகவரின் பெயரைக்குறிப்பிட்டால் நாய்களைக்கண்டுபிடிக்க உதவியாக இருக்குமல்லவா
ReplyDelete