Header Ads



இலங்கை முஸ்லிம்களின் அதிகப்பட்ச, ஆதரவைபெற்ற தேசியத் தலைவராக றிசாத் பதியுதீன்

1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து பயங்கரவாத புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட  ஒருவர், இன்று இலங்கை முஸ்லிம்களின் அதிகப்பட்ச ஆதரவை பெற்றத் தேசியத் தலைவராக பரிணமித்துள்ளார்.

ஆம், இலங்கை சமூகம் நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலில் றிசாத் பதியுதீனை தனது தேசியத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளது. றிசாத் பதியுதீன் முஸ்லிம்களின் தேசியத் தலைவர் என்பதற்கு அக்கட்சிக்கு நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் அக்கட்சிக்கு கிடைத்துள்ள பாராளுமன்ற பிரதிநிதித்துவம் என்பவற்றைக் கொண்டு இது தெட்டத்தெளிவாகியுள்ளது.

நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தனியாகவும் பிரதான தேசியக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடனும் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது செல்வாக்கையும், அதன் தலைமைத்துவ ஆளுமையையும் முழுநாட்டிற்கும் பறைசாற்றியுள்ளது.

இந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை கைபற்றுவதே றிசாத் பதியுதீனின் அடிப்படை நோக்கமாக இருந்தது. அதற்கேற்றவகையில் தனது உபாயங்களை வகுத்தார். அதனடிப்படையில் நாடுதளுவிய ரீதியில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளன.

மர்ஹும் அஷ்ரப்பின் மறைவுக்குப் பின்னர், தள்ளாடிக் கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தை தூக்கிநிறுத்திய பெருமையை இதன்மூலம் றிசாத் பதியுதீன் பெற்றுக்கொண்டுள்ளார். (அல்ஹம்த்துலில்லாஹ்)

மர்ஹும் அஸ்ரபின் அகால மரணத்தினால் தவறுதலாக முஸ்லிம் காங்கிரஸின் தலைமையையேற்று, தவறுதலாக அக்கட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கும் ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு, அதிக விருப்பு வாக்குகளை பெற வேண்டுமென்பதற்காக ஆசாத் சாலி கண்டியில் போட்டியிடவிருந்த நிலையிலும் அதனை தடுத்துநிறுத்தி, அங்கு தன்னுடன் சேர்ந்து 2 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தினால் போதும். 3 வது வேட்பாளர் வேண்டாமென அடம்பிடித்து அதில் வெற்றிகொண்ட போதிலும்கூட அவரினால் கண்டி மாவட்டத்தில் அப்துல் ஹலீமைவிட அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

மேலும் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என வர்ணிக்கப்படும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் (அம்பாறை) அக்கட்சியினால் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் அம்பாறை மாவட்டத்திலிருந்து தயா கமகே பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகளை, முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள், பிரதேசவாதம் போன்றவற்றை முஸ்லிம் காங்கிரஸ் ஏவிவிட்டும், முதற்தடவையாக முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையில் தனித்து களமிறங்கிய தேசியத் தலைவர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று மகத்தான சாதனையை நிலைநாட்டியுள்ளது.

அத்துடன் முஸ்லிம் காங்கிரஸிற்கு ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தலிலும் ஆசனங்களை பெற்றுக்கொடுத்த வன்னி மாவட்டம், திருகோணமலை மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸிற்கு பலத்த அடி விழுந்துள்ளது. அம்மாவட்ட மக்கள் முஸ்லிம் காங்கிரஸினையும் அதன் தலைமையையும் நிராகரித்துள்ளனர்.

இந்த இரு மாவட்டங்களில் இருந்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு 2 ஆசனங்க்ள கிடைத்துள்ளன. வன்னி மாவட்டத்திலிருந்து கிடைக்கவேண்டிய மற்றுமொரு ஆசனம் திட்டமிட்ட வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடமிருந்து பறிபோயுள்ளது. அதுவும் பணத்திற்கு அடிமையான சிலருடைய நடவடிக்கையே இதற்கு காரணமாகியுள்ளது.

தமிழ் பேரினவாதத்தின் நேரடி அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், சிங்களப் பேரினவாதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பின் மறைமுக ஓடுக்குமுறைக்குமிடையிலும், தமிழ் சிங்கள ஊடக விபச்சாரிகளின் இட்டுக்கட்டப்பட்ட போலி பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் வன்னியில் தேசியத் தலைவர் றிசாத் பதியுதீன் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாக அமைகிறது.

இவற்றுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் ஆதரவுபெற்ற அலிசாஹிர் மௌலானாவை வலுக்கட்டாயமாக இழுத்துவந்து, தேர்தலில் நிறுத்தி, அப்துர் ரஹ்மான் தலைமையிலான நல்லாட்சிக்கான முன்னணியினரை உள்வாங்கியும்கூட முஸ்லிம் காங்கிரஸினால் ஒரு ஆசனத்தைதான் பெற்றுக்கொள்ள முடிந்தது. இருந்துபோதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அமீர் அலி, அங்குள்ள மக்களின் ஆதரவுடன் பெரு வெற்றியீட்டியுள்ளார்.

மேலும் முஸ்லிம் காங்கிரஸினால் வடக்குகிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் இந்த பாராளுமன்றத் தேர்தலில் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டு அல்லது அவர்களை மறந்துவிட்ட நிலையில் தேசியத் தலைவர் றிசாத் பதியுதீன், வகுத்த வியூகம் காரணமாக 2 தஸாப்தங்களுக்குப் பிறகு அநுராதபுரம் ஒரு முஸ்லிம் பிரதிநிதியை பெற்றுள்ளது. இது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு விடயமாகும்.

குருநாகல் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் சொற்ப வாக்குகளினால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை. வன்னி, அம்பாறை, புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நிறுத்திய ஒட்டுமொத்தமாக 10 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தால்கூட அப்பிரதேசங்களில் இருந்து ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர் வீதம் மொத்தம் 4 எம்.பி.க்.களை பெற்றுக்கொண்டிருக்க முடியுமாக இருந்திருக்கும்.

அந்தவகையில் மிகசொற்ற வாக்குகள் வித்தியாசத்திலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 4 ஆசனங்களை இழந்துள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் குறிப்பிட்ட இந்த 4 மாவட்டங்களிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் சற்று பின்னடைவை சந்தித்த 4 பேருமே அடுத்தடுத்த பட்டியலில் உள்ளனர்.

இவையெல்லாம் எடுத்துக்காட்டுவது என்னவென்றால் நாடளாவிய ரீதியில் அகில காங்கிரஸ் மக்கள் காங்கிரஸுக்கு, முஸ்லிம் சமூகத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன் தலைமை றிசாத் பதியுதீனை முஸ்லிம் சமூகம் தனது தேசிய தலைமையாக அங்கீகரித்துக்கொண்டமையாகும்.

ஆகமொத்தத்தில் இந்த பாராளுமன்றத் தேர்தல், இலங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைமையாக றிசாத் பதியுதீனை அடையாளப்படுத்தியுள்ளது எனலாம்..!

இந்த தேர்தல் முடிவுகளையடுத்து உலமாக்கள், புத்திஜீவிகள், சமூகநல அமைப்புக்கள் வெளிநாடுகளில் உள்ள முஸ்லிம்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் றிசாத் பதியுத்தீன் இலங்கை முஸ்லிம்களுக்கு தலைமையேற்று வழிநடத்திச் செல்ல வேண்டுமேன கோரிக்கைகளை விடுத்துவருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது...!!


22 comments:

  1. We need a leader, who can represent our case to not only at national level but also at international and UN level. We can punish Hakeem but should not destroy the SLMC and its leadership. It is our late leader Marhoom Asroff, he who introduced (less educated and thugs) Athaulla, Mansoor, etc. to lead our community. We may be against Hakeem, yet he is the only Muslim leader is deserved to be a national level leader to represent a legislature that enact laws and he who can speak the consequences of the implementation of the law in parliament. Please don't misunderstand that we cannot destroy SLMC for the sake of just stupid business moves.

    ReplyDelete
  2. இது ஒரு கட்டணம் செலுத்திய விளம்பரம் ஆகும். இந்த விளம்பரத்துக்கான செலவை Jaffna Muslim ஏற்றுக் கொண்டுள்ளது.

    முஸ்லிம் காங்கிரசினது தலைமைத்துவத்தினதும் அவரை சார்ந்த அரசியல் பிரமுகர்களினதும் அரசியல் சாணக்கியமற்ற, திறமையற்ற பலகினமான சுய நல சிந்தனை உள்ள முன்னெடுப்புக்களினால் தான் ரிசாத் பதுர்தீன் ஒரு அரசியல் சானாக்கியராக தெரிந்தாரே ஒழிய மற்றும்படி ரிசாத் பதுர்தீன் ஒரு நாணயமான அரசியல் வாதி என்பதினை அவரது கடந்த கால அரசியல் முன்னெடுப்புக்களினால் வெளிப்பட வில்லை என்பது தான் உண்மை. எப்படியோ இப்போது இருவருக்கும் சமமான சந்தர்பம் கிடைத்துள்ளது எனவே யார் மக்களின் ஆதரவை பெறுகிறார்கள் என்று பாப்போம்.

    எங்களை பொறுத்த வரைக்கும் இந்த இருவரும் ( ஹகீம் அன் ரிசாத் ) கடந்த ராஜபக்ச அன் கோ ஆட்சியில் முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான காத்திரமான அரசியல் முன்னெடுப்புக்களை செய்யாமல் தங்களது சுய நல அரசியலையே ( பணம் பட்டம் பதவிகளுக்காகவே ) செய்தார்கள்.

    ReplyDelete
  3. தேசியத்தலைவர் என்று நாம் அடையாளப்படுத்தினாலும் அவர் தேசியத்தலைவரின் செயற்திறன் முழு வீச்சில் வேகமாக இருக்கவேண்டும் ரவுப் ஹக்கீம் மாதிரி ஆமை வேகத்தில் இயங்கக்கூடாது. அத்துடன் தோற்றவர்களை அதாவுல்லா போல் ஓரம் கட்டாமல் அ இ ம கா வை கட்டி எழுப்பக்கூடிய திட்டங்களை வகுக்க வேண்டும். பொத்துவில் ssp மஜீத் சாய்ந்தமருது சிராஸ் மற்றும் சம்மாந்துறை இஸ்மாயில் போன்றோருக்கு உரிய பதவிகளை வழங்கி கட்சியை பலப் படுத்தக்கூடிய நடவடிக்கையில் தலைவர் உடனடியாக செயற்படவேண்டும்

    ReplyDelete
  4. தனது சொந்த தொகுதியில் தனது கட்சியில் போட்டியிட துணி விண்றி ஐதேகவுக்குள் அபயம்தேடிய அவலம்தான் தேசீயதலைமைத்துவமா
    கட்டுரையாளர் ஒட்டுமொத்த சமூகத்தையும் கேவலப்படுத்தியுள்ளார்

    ReplyDelete
  5. இது கொஞ்சம் OVER தான்

    ReplyDelete
  6. Jaffna Muslim pakka sarpana aakkangalaiyum yookithu orivarai pukalnthu innum oruvarai tharakkuraivaka sitharikum aakkangalaiyum eluthuvorin aakngalai pottu pakka sarpaka irukamal nadunilai yodu unmaiyaka eppoluthum Poal muslimkalin urimaikkakavum thelivu peruvathukumana aakkangalai podumaru anbaka kettukolkiren

    ReplyDelete
  7. Writer may expecting chairman post from Ministet. institution comes under purview of minister. Writer may think readers are fool.

    ReplyDelete
  8. SLMC i alikka vendum enbathatkaaha panam kodukkap pattu valarkkap pattavare rishad

    ivaraiyum puhalreengalemmaa!!!!!

    ReplyDelete
  9. He has a bright future.I wish him success.

    ReplyDelete
  10. 1 latcham waaku rauf eduthar 33000 risad Ivar thesiya munafik kiyamth nalil Muslim samuthayathai kasukaha kati kodathvan kiyamth nalil Ivan Allah vidam thappa mudiyadu

    ReplyDelete
  11. Can anyone tell me what is the meaning of "Thesiyam"?

    ReplyDelete
  12. ரிஷாத் பதியுத்தீனோ , ரவூப் ஹகீமோ இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலைமை அல்ல. ஒட்டு மொத்த சமூகத்தின் நிலை அந்த அளவு கீழ் நிலைக்கு செல்லாமல் அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். அவர்கள் அக்கட்சிகளின் தலைவர்களே.
    எழுத்தாளர்கள் நடுநிலை பேணவேண்டும் இல்லாத போது, அவர்கள் செய்யும் அநியாயத்துக்கு அவர்களே பொறுப்பு.,
    ஒவ்வொன்றுக்கும் கொடுக்க வேண்டிய இடத்தை கொடுப்பதையே நீதி ஆகும். ஜப்னா முஸ்லிம் இன்னும் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்.

    ReplyDelete
  13. You bloody dont talk talk about Late leader Ashraf...You people devided the community for your rubish mind and act...dont talk about National Leader...Are you..?
    You people got good lesson in Ampara...You got support in other places because of UNP..dont forget it....Just keep shut your mouth and do your duty for all people....
    PLS do not devide the Muslim community again.....you have support in Vanni just stay there...dont come next time...if then you get good lesson....

    ReplyDelete
  14. வெகுவிரைவில் தேசியத் தலைவர் எண்ணுவார் கம்பி எத்தனை என்று - அப்ப தெரியும் அவரோட வண்டவாளம் என்ன என்று - பொறுத்திருப்போம் அதுவரை -

    முழு உலகறிய தனது ஒரு சொட்டுத் தண்ணீர்கூட ஹராம் இல்லை என்று அல்லாஹ்வின்மீது அவர் செய்த சத்தியம்செய்தது பெய்யாக மாட்டாது.

    இறை முன்னிலையில். சத்தியத்தைக் கொன்டு தனது கோடனகோடிகளை மறைக்க முனைந்ததற்கு இறை பிடியில் இருந்து தப்பமுடியும் என்று யாராவது கனவுகன்டால் அவர்களும் இறை தன்டனையைப் பயந்துகொள்வார்களாக..................

    ReplyDelete
  15. This shows media publicity to create artificial national leader by criticising SLMC. When we read this we can understand that some them are not relevant and undermining SLMC leader and also his intension is to overcome any crook way.

    ReplyDelete
  16. மட்டக்களப்பில் அமீர் அலி UNP இல் கேட்டதால் தான் வெற்றியீட்டினார்.. UNP 32000 வாக்குகள் பெற்றுக்கொண்டது., அமீர் அலி 16611 மிகுதி வாக்குகள் தமிழர்களுடையது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் 100 % முஸ்லிம் வாக்குகள் 38477 பெற்றுக்கொண்டது.முஸ்லிம் காங்கிரஸ் செல்வாக்கு எப்போதும் குறையாது. ஆகவே கற்பனைக்கோட்டை கட்ட வேண்டாம் கட்டுரையாளரே....

    ReplyDelete
  17. திருகோணமலை சின்ன மஹ்ரூப், ரிஷாட் அவர்களை தனது கட்சித் தலைவர் என்று பகிரங்கமாக ஏற்றுக் கொள்கின்றாரா ?

    ReplyDelete
  18. none of these people cannot be called leaders, rishard should have sticked to vanni instead of entering eastern province, he didnt have that mentality, he did not allow unais farook,,, . what are these people doing, this article is irrational...

    ReplyDelete
  19. Ooril oru palamoli ullathu 'kampeduthavan ellorum veddaikaran alla' ithu Mr.Rishadukkum porunthum ene ninaikkiren

    ReplyDelete
  20. இவ்வாறான கட்டுரைகளால்தான் நம் அரசியல்வாதிகலுக்கிடையீல் பிரச்சினை வருகிறது மூட்டி விர்றது.ஒருவரை புகழ்வதும் ஒரு அளவு இருக்க வேண்டும் இகழ்வதும் ஒரு அளவு இருக்க வேண்டுன்.எப்போதும் jaffnamuslim ரிஷாத் படுர்தீனுக்கு கொஞ்சம் சார்பாகவும் ரவுப் ஹக்கீமுக்கு கொஞ்சம் பாதகமாக உள்ளதை காண முடிகிறது.அவரும் இவரும் முஸ்லிம்தான் எதோ ஒரு வகையில் ஏதாவது ஒரு பகுதி முஸ்லிம்களுக்கு இரண்டுபேரும் தன்னால் இயன்ற சேவைகளை செய்கிறார்கள்.நாம்தான் இவர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும் மென்மேலும் பகை ஏற்ப்படும் வகையான கட்டுரைகளால் அவர்களின் முறுகல் நிலை அதிகரிக்கிறது.அதனால் பாதிக்கப்படுவது அவர்கள் இல்லை நம் சமுதாயம்தான்.எல்லா எழுத்தாளர்களும் சமாதானம் ஏற்ப்படக்கூடிய விதமான கட்டுரைகளை எழுத வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.