பிரான்ஸில் வாழும் யூதர்களுக்கு அச்சுறுத்தலாம் - இஸ்ரேலில் குடியேறுவதற்கு அழைப்பு
பிரான்ஸில் வசிக்கும் யூதர்கள் இஸ்ரேலுக்குக் குடிபெயர வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
பிரான்ஸில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்து அந்நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பேரணியில் கலந்து கொள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு பாரிஸ் செல்வதற்கு முன்னர் ஜெருசலேமில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் தெரிவித்தது: இஸ்ரேல் என்பது, யூதர்கள் வழிபடும் திசையில் உள்ள ஒர் இடம் மட்டுமல்ல. இஸ்ரேல் தேசம் என்பது உங்களது இல்லமாகும்.
பிரான்ஸில் உள்ள யூதர்கள் மட்டுமல்ல, ஐரோப்பாவில் உள்ள அனைத்து யூதர்களும் இஸ்ரேலுக்கு குடிபெயர வேண்டும். குடிபெயர விரும்பும் அனைவரையும் இரு கைகளையும் நீட்டி வரவேற்போம். இது உங்கள் நாடு. இங்கு அனைவரும் ஒருங்கிணைந்து வாழ உதவிடுவோம்.
யூதர்களுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரான்ஸ் மட்டுமல்லாமல், ஐரோப்பாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அவர்களை இஸ்ரேலுக்கு குடிபெயரச் செய்வது தொடர்பாக, அமைச்சர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு இந்த வாரம் கூடி விவாதிக்க உள்ளது என்று நெதன்யாஹு கூறினார்.
பாரிஸ் யூத பல்பொருள் அங்காடி பிணைக்கைதிகள் சம்பவத்தில் 4 பேர் பயங்கரவாதியால் கொல்லப்பட்டனர். அவர்கள் நால்வரும் யூதர்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு நெதன்யாஹு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
அவருடன், இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர், பொருளாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பிரான்ஸ் பயணம் மேற்கொள்கின்றனர்.
யூத பல்பொருள் அங்காடியில் நிகழ்ந்த பிணைக்கைதி சம்பவத்தை "இனவெறிச் செயல்' என பிரான்ஸ் அதிபர் பிரான்ஸýவா ஹொலாந்த் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
இஸ்ரேலில் இறுதிச் சடங்கு: பாரிஸில் உள்ள யூத பல்பொருள் அங்காடி தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த நால்வருக்கு இஸ்ரேலின் ஜெருசலேமில் இறுதிச் சடங்குகள் செவ்வாய்கிழமை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸிலுள்ள யூதர்களின் கூட்டமைப்பு இதைத் தெரிவித்தது.
.jpg)
everybody knows this is your work, better job you have done , you are controlling most of the terrorism.
ReplyDeleteThis is plan behind the FRANCE attack, Those carried out the attack could have been funded by ISRAEL to create a situation of "Unsafe to Jews in France" then bring them to STOLEN land and OCCUPY more area and SETTLE them.
ReplyDeleteCunning FOXES, supported by ARROGANT US politicians (EVIDENT FROM UN rejection of Palestine state)... Making many DRAMAS to steal MORE Plastine land.
God is enough for these two groups.