Header Ads



கட்டுநாயக்கா விமான நிலையத்தில் மீண்டுமொரு தடவை ஏமாற்றப்பட்ட உம்ரா யாத்திரிகர்கள்..!

(யு.எம் இஸ்ஹாக்)

உம்ரா செல்ல நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட 28 பேருக்கு  நேற்று 13-02-2014  பயணத்தை தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை .பயணிகள்  செய்வதறியாது பதறினார்கள் .

நேற்று 13.02.2014 காலி பிரதேசத்தை சேர்ந்த  ஆண்கள் பெண்களாக  உம்ரா கடமையை நிறை வேற்றுவதற்கு  வருகை தந்திருந்தனர் . இவர்கள் சரியாக பி.ப 3.30 மணிக்கு  விமான நிலையத்துக்கு  வருகை தந்தனர். இவர்களுக்கான விமானம் 3.00 மணிக்கு புறப்பட்டதாக  அவர்களுக்கு தெரிவிக்கப் பட்டது. இதனை கேள்வியுற்ற அவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்து  செய்வதறியாதி  திகைத்து போயினர் .

இது தொடர்பாக அவர்களிடம்  விசாரித்த போது  தங்களை அழைத்து  செல்பவர்   பி .ப 3.30 மணிக்கு விமானம் இருப்பதாகவும்  தங்களை உரிய நேரத்துக்கு வருமாறும் கேட்டிருந்தார். ஆனால்  அவர் சொன்ன அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே  விமானம் புறப்பட்டு விட்டதாகவும் .தெரிவித்தனர்  எம்மை அழைத்து செல்பவர்  இன்னும் வந்து சேரவில்லை . இவர்கள் விமான நிலையத்தில் அங்கும் இங்குமாக அலைந்தனர் .

1 comment:

  1. கேக்கிறவன் கேணயன் எண்டா எலியும் ஏரோப்பிளேன் ஒட்டுமாம்.... என்ற பளமொழி ஞாபகத்துக்கு வருது. இவ்வளவு நடந்தும். இன்னும் இன்னும் ஏமாறும் கூட்டம் இருக்கும்வரைக்கும் ஏமாற்றும் கூட்டம் அழியாது.

    ReplyDelete

Powered by Blogger.