Header Ads



மாட்டு நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை - பால் + இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்..!

(எம்.எஸ். பாஹிம்)

நாட்டின் 11 மாவட்டங்களில் பரவியுள்ள கால்வாய் நோயை கட்டுப்படுத்த சகல நடவடிக்கைகளும் முன்னெடுக் கப்பட்டுள்ள தாகவும் இந்த நோய் ஏனைய மாவட்டங்களுக்கும் பரவினால் நாட்டின் பால் மற்றும் இறைச்சி உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது. 

கால் நடைகளை அறுப்பதும் எடுத்துச் செல்வதும் 3 மாதங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதோடு 3 மாதங்களின் பின் கால்வாய் நோய் குறைந்திரு ந்தால் தடை நீக்கப்படும் எனவும் இன்றேல் மேலும் தடை நீடிக்கப்படும் எனவும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் டாக்டர் ஏ. சிவஜோதி தினகரனுக்கு தெரிவித்தார். 

நாட்டில் சுமார் 15 இலட்சம் கால் நடைகள் உள்ள போதும் கடந்த வருடம் 4 இலட்சம் கால்நடைக ளுக்கே கால்வாய் நோய் தடுப்பூசி ஏற்றப்பட்டு ள்ளது. கால்நடைகளுக்கு வருடத்தில் இரு தடவைகள் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட பணிப்பாளர், கால்நடை பண்ணை யாளர்கள் தடுப்பூசி ஏற்ற தவறுவதாகலேயே இந்த நோய் பரவியுள்ளதாக தெரிவித்தார். 

கால் வாய் நோய் பரவியதன் காரணமாக ஆடுகள், மாடுகள், பன்றிகள் அடங்கலாக 84 கால் நடைகள் இறந்துள்ளதோடு சுமார் 3,500 கால் நடைகளுக்கு இந்த நோய் பரவியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது குளம்பு உள்ள விலங்குகளுக்கே இந்த நோய் பரவி வருகிறது. 

இது வரை யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைதீவு, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் கால்வாய் நோய் பரவியுள்ளது. 

நோய் பரவியுள்ள பிரதேசங்களில் 300 கால்நடை மருத்துவர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தோடு ஒவ்வொரு வாரமும் இவர்களிடமிருந்து அறிக்கை பெறப்படுவதாக பணிப்பாளர் தெரிவித்தார். மூன்று மாதங்களுக்கு நோய் குறித்து கண்காணிக்கப்பட்ட பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்பட உள்ளது. 

கால்நடைகளுக்கு முறையாக தடுப்பூசி வழங்கப்பட்டதன் காரணமாக கடந்த வருடங்களில் கால்வாய் நோய் குறைந்தததாக கூறிய அவர் கால்நடை பண்ணையாளர் களின் கவனயினத்தினால் மீண்டும் இந்த நோய் பரவி வருவதாக தெரிவித்தார். 

90 லீட்டர் பால் சுரக்கக்கூடிய பசு மாடொன்று கால்வாய் நோய் பரவிய பின் 10 லீட்டர் பால் தரும் எனவும் மாடுகளை அறுப்பது மற்றும் எடுத்துச் செல்வதை தடுக்கும் வர்த்தமானி குறித்து உள்ளூராட்சி சபைகள், பிரதேச செயலகங்கள் மற்றும் பொலிஸாரை அறிவூட்டியுள்ள தாகவும் பணிப்பார் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இருந்து கால்வாய் நோய் புத்தளத்துக்கு எடுத்து வந்ததால் புத்தாக்கிலும் இந்நோய் பரவியுள்ளது.

இந்த தடையை மீறுபவர்களுக்கு ஆறு மாத சிறையும் 50 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்க முடியும்.

1 comment:

  1. aiyo pawam muslimkal panri sappidamaattarkal adai tadapannadeerkal puttiketta manidan onrai ninaikka iraiwan omrai ninaikkiran iwaikal iraiwanin attatcikal puttikatta manidane idil unakku awwalawu padippinai irikkiradu

    ReplyDelete

Powered by Blogger.