Header Ads



ஊடகவியலாளர் சிவராஜா, ஜனாதிபதியிடமிருந்து நியமனக்கடிதத்தை பெற்றார்

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளரான ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து தனது நியமனக்கடிதத்தை பெற்றுக்கொண்டார்.இவருக்கான நியமனக்கடிதம் அலரிமாளிகையில் வைத்து நேற்று கையளிக்கப்பட்டது.

வீரகேசரி பத்திரிகையில் செய்தியாளராக  1996ஆம் ஆண்டு தனது ஊடகப்பணியை ஆரம்பித்த சிவராஜா, மகாராஜா நிறுவனத்தின் சக்தி தொலைக்காட்சி மற்றும் தினக்குரல் பத்திரிகை நிறுவனம் என்பனவற்றில்   அரசியல் செய்தியாளராக பணிபுரிந்துள்ளார்.அதன் பின்னர் சுடரொளி பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.